03-26-2004, 09:53 PM
இலங்கையில் வீதியிலிருந்து வீட்டுக்குள் வந்த பிரசாரம்
இரா. சோமசுந்தரம்
கொழும்பு, மார்ச் 27: இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் இது தேர்தல் காலம்.
ஏப்ரல் 2-ம் தேதி வாக்குப்பதிவு. ஆனால், இந்தியத் தேர்தல் களத்தின் பரபரப்பு இலங்கையில் இல்லை. கொழும்பு நகரில் கூட்டணிக் கட்சிகளின் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள்கூட, தேடினாலும் கிடைக்காது. ஒலிபெருக்கி இரைச்சல் இல்லை. நகருக்கு வெளியே மிக அரிதாகவே சில சுவரொட்டிகளைக் காணமுடிகிறது.
ஆனால், வீதியில் இருக்கும் இந்த அமைதி, வீட்டுக்குள் இருப்பதில்லை. ஊடகங்கள் அனைத்திலும் தேர்தல் பிரசாரம் படு தீவிரமாக இருக்கிறது.
நாளிதழ்களில் பெரும்பகுதியான செய்திகளும். விளம்பரங்களும் தேர்தல் தொடர்பானவை.
""நீலத்துக்குப் போட்டா செகப்பாகும்'', ""செகப்புக்குப் போட்டா நீலமாகும்'', ""பாதைகள் மூடப்படவில்லை'' ""கடவுளே!'' என்பது போன்ற ஒருவரி பிரசார விளம்பரங்கள் ஐக்கிய தேசீய முன்னணியில் (ரணில் விக்கிரமசிங்க) அதிகமாக வெளியாகின்றன.
""பகலில் பேச்சு நடத்தி இரவில் அச்சத்துடன் வாழ்வதுதான் நீங்கள் தரும் சமாதானமா, பிரதமரே?'' ""யுத்த செலவுகள் இல்லாதபோது வாழ்க்கைச் செலவு கூடியது ஏன்?'' என்று கேள்விகளை எழுப்பும் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விளம்பரங்கள். ஒரு பத்திரிகைப் பேட்டியில் ""இரு கட்சிகளுமே சமாதானத்தை முன்வைக்கிறீர்கள். அப்படியிருக்க உங்கள் இருவருக்கும் எங்கே பிரச்சினை தொடங்குகிறது?'' என்ற கேள்விக்கு, சந்திரிகா அளிக்கும் பதில்: ""அவரது மரபணுவிலிருந்து தொடங்குகிறது''.
""நிதியுதவி வழங்கும் நாடுகளுக்காக ஒரு தேர்தல் அறிக்கை, இலங்கை மக்களுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார் சந்திரிகா'' என்று காரசாரமாக மேடையில் விமர்சிக்கிறார் ரணில்.
விளம்பரம், பேட்டிகளில் ""சொல்லடி'' வலுவாகவே இருக்கிறது
தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக வருகின்றன தேர்தல் விளம்பரங்கள். முந்தைய காலகட்டங்களின் வன்முறை தற்போது இல்லை என்று விளக்கும் படக்காட்சிகளை ஐக்கிய தேசீய கட்சி விளம்பரம் செய்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானங்கள் கிழித்து, எரிக்கப்படும்போது ரணில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நாடாளுமன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி, ""இதுதான் சமாதானமா?'' என்ற கேட்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
இந்த விளம்பரங்களைத் தொடர்ந்து "இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்' என்ற அறிவிப்பு தனியாகத் தோன்றி மறைகிறது.
தனியார் வானொலியிலும் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தேர்தல் பிரசாரங்கள் ஒலிக்கின்றன.
அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் அனைத்திலும் சந்திரிகா, ரணில் விக்ரமசிங்க இருவரது பேட்டிகளும் பிரசாரக் கூட்டச் செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த தேர்தல்களில் வன்முறை, படுகொலை, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இருந்தன. தற்போதைய தேர்தல் இத்தனை அமைதியாக நடைபெறுவது ஏன்?
தேர்தல் ஆணையத்தின் இதே விதிமுறைகள் முன்பும் இருந்தன. ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையால் ஏற்பட்டுள்ள அமைதி கெடுவதை யாரும் விரும்பவில்லை. இன்றைய அமைதியான பிரசாரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்.
முன்னெப்போதும் இல்லாதவகையில் இலங்கைக் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் ரூ. 80 லட்சம் அளித்துள்ளது. விதிகள் மீறப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டினால், தோரணங்கள் கட்டினால், பேனர்கள் வைத்தால் அவற்றை அகற்றும் கூடுதல் பணிக்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. (இலங்கைத் தேர்தலின் மொத்தச் செலவு ரூ.6.5 கோடி)
இலங்கைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 25-ம் தேதி கொழும்பு வந்திருந்த பார்வையாளர் குழுவின் பெண்உறுப்பினர் கூறுகையில், ""பிரசாரம் இப்படி அமைதியாக நடந்தால்தான் எதன் தாக்கமும் இல்லாமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க முடியும்'' என்றார்.
ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகவுக்குப் புகார்கள் வந்துள்ளன.
""ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அல்லது தங்கள் சார்பு எது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என்று எச்சரித்துள்ளார் தேர்தல் ஆணையர் திசநாயக.
-தினமணி