Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை தேர்தல்
#24
இலங்கைத் தேர்தலுக்குப் பின் பிரபாகரன் -கருணா மோதல் அபாயம்

கொழும்பு, மார்ச் 27:

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள கருணாவை ஒடுக்குவோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து, இலங்கையில் தேர்தலுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில், இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி முன்னதாக போர்க்கொடி எழுப்பினார் கர்னல் கருணா என்ற வி. முரளீதரன். இதை அடுத்து அந்த இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டார். பின்னர் அவருக்குப் புலிகள் தலைமை பொதுமன்னிப்பு வழங்கியது. அதைக் கருணா நிராகரித்தார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் விரிசல் வலுத்துள்ளது.

இந்நிலையில், "கருணாவை ஒடுக்குவோம்' என்று புலிகள் சபதம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:

புலிகள் இயக்கத்துக்கு பெரிய ஊறு ஏற்படுத்திவிட்டார் கருணா. அவரது ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டு வெளியேற வேண்டும்.

மட்டக்களப்பு, அம்பாறை மக்களைக் கருணா தொடர்ந்து ஏமாற்றுவதைத் தேசிய தலைவர் பிரபாகரன் இனியும் அனுமதிக்க மாட்டார்.

எமது மக்களையும் எமது மண்ணையும் காப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணிலிருந்து ஒடுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தான் செய்த துரோகம், குற்றச் செயல் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கருணா தனது ஆதரவாளர்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கையின்போது, எந்த ஒரு போராளியும் உயிரிழக்கக் கூடாது என்று பிரபாகரன் கருதுகிறார். அவரது நல்லெண்ணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை அவர்கள் கைவிட வேண்டும்.

இந்த வேண்டுகோளையும் மீறி அவருக்கு ஆதரவாகச் செயல்படுவோர், மோசமான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

அவருடன் இருப்போர், புலிகளின் நடவடிக்கையில் உயிரிழக்க நேர்ந்தால், மாவீரர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று புலிகளின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. அதில், புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் அதன் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணி போட்டியிடுகிறது.

எனவே, தேர்தலுக்குப் பிறகு கருணா மீது புலிகள் ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.

தங்களிடம் 5 ஆயிரம் போராளிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வலுத்தபோது, புலிகள் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கிழக்குப் பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றின் மறு கரையில் கருணாவின் போராளிகள் நின்றிருந்தனர்.

அப்போதே இரு தரப்பினருக்கும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இலங்கை ராணுவம் உஷார் நிலையில் இருந்ததால், அப்போது தவிர்க்கப்பட்டது.

- தினமணி
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:48 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:50 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 07:53 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:55 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 07:58 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 08:06 PM
[No subject] - by Mathivathanan - 03-25-2004, 08:23 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 08:27 PM
[No subject] - by Mathivathanan - 03-25-2004, 08:36 PM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 09:03 PM
[No subject] - by Mathivathanan - 03-25-2004, 09:07 PM
[No subject] - by Aalavanthan - 03-25-2004, 09:10 PM
[No subject] - by Mathivathanan - 03-25-2004, 09:18 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 09:40 PM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:07 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:48 PM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 01:58 PM
[No subject] - by Mathivathanan - 03-26-2004, 04:48 PM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 06:27 PM
[No subject] - by Mathivathanan - 03-26-2004, 06:50 PM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 06:59 PM
[No subject] - by Mathivathanan - 03-26-2004, 07:02 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 09:49 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 09:53 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 11:47 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 02:28 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 11:37 AM
[No subject] - by anpagam - 03-28-2004, 03:02 PM
[No subject] - by Mathivathanan - 03-28-2004, 03:26 PM
[No subject] - by anpagam - 03-28-2004, 04:36 PM
[No subject] - by shanmuhi - 03-28-2004, 05:03 PM
[No subject] - by anpagam - 03-28-2004, 05:06 PM
[No subject] - by Mathan - 03-28-2004, 06:08 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 10:10 AM
[No subject] - by yarl - 03-29-2004, 10:50 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 11:30 AM
[No subject] - by anpagam - 03-29-2004, 06:54 PM
[No subject] - by Mathan - 03-30-2004, 01:03 AM
[No subject] - by tamilini - 04-06-2004, 12:49 PM
[No subject] - by anpagam - 04-06-2004, 12:53 PM
[No subject] - by sutharshan - 04-06-2004, 10:11 PM
[No subject] - by tamilini - 04-07-2004, 09:35 AM
[No subject] - by Mathan - 04-07-2004, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)