03-26-2004, 02:51 PM
BBC Wrote:ஈ.பி.டி.பியினர் - மாணவர்கள் கொக்குவில் பகுதியில் அடிதடி! மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டுக் காயம்இரும்புக் கம்பிகளாலும் பொல்லுகளாலும் துவக்குப் பிடிகளாலும் அகோரமாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் இருந்த படங்கள் போட்டவங்கள்தானே.. பார்த்தம்தானே தாக்குதலின் தன்மையை..
கொக்குவில் மஞ்சவனப்பகுதி யில் நேற்று முற்பகல் 10.00 மணி யளவில் இடம்பெற்ற ஒரு மோதல் சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர் பர ராஜசிங்கம் பகீரதன் (வயது 26), மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் இராஜரட்ணம் புவிராஜ் (வயது 26) ஆகிய இருவரும் காய மடைந்தனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் களால் தலையில் பிஸ்டலால் தாக் கப்பட்டதில் பகீரதன் மயக்கமுற் றார் என்று கூறப்படுகிறது. காய மடைந்த இருவரும் பின்னர் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மஞ்சவனப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்களுக் கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போதே இவர்கள் இருவரும் காயங் களுக்குள்ளாகினர்.
மஞ்சவனப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவிகள் சிலரை அப்பகுதியில் பொலீஸ் பாதுகாப்புடன் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த ஈ.பி.டி.பியினர் தகாத வார்த்தை களால் து}~pத்ததை அடுத்து அங்கு சென்ற மாணவர்கள் ஈ.பி.டி.பியின ருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட் டனர் என்றும் - அவ்வேளை ஈ.பி.டி. பியினரும் மாணவர்களும் கடுமை யாக மோதிக்கொண்டனர் எனவும் - கூறப்படுகிறது.
மோதலில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி. குழு வில் அதன் யாழ்.மாவட்ட அமைப் பாளர் கே.வி.குகேந்திரன்,நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலை வரும் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தருமான மணிபல்லவராஜன்(நி~hந்தன்) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்று மாணவர் தரப்பில் கூறப் படுகிறது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தின் தலைவர் பகீரதன் தலை யில் துப்பாக்கியால் தாக்கப்பட்ட தில் சுயநினைவிழந்தார். இந்தச் சம் பவத்தின் போது மாணவர்களைத் தாக்கிய ஈ.பி.டி.பியினருக்குப் பொலீ ஸாரும் உடந்தையாகச் செயற்பட் டனர் என்றும் மாணவர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நேற்றைய இந்த மோதல் சம் பவம் தொடர்பாக மாணவர்களும், ஈ.பி.டி.பியினரும் பொலீஸில் முறைப் பாடுகளைச் செய்திருக்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு களுக்கும் முறையிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தாக் கப்பட்ட சம்பவத்துக்கு மாணவர் அமைப்புகள் பலவும் கடும்கண்ட னம் தெரிவித்திருக்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மருத் துவ பீடமாணவர் ஒன்றியம், சர்வ தேச தமிழீழ மாணவர் பேரவை, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறு வக மாணவர் ஒன்றியம் ஆகியன கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை களைத் தனித்தனியாக விடுத்திருக் கின்றன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றுக்கான காலம் கனிந்து வரும்வேளையில் அந்தச்சூழலைக் குழப்புவதற்கு ஈ.பி.டி.பி. தேச விரோதி கள் முற்படுகின்றனர் என்று விடுத லைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசி யல்துறை தெரிவித்திருக்கிறது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களே திட்டமிட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி. அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. நேற்றைய சம்பவத்தில் தமது உறுப்பினர் ஒருவரும், பொலீஸார் ஒருவரும் மாணவர்களால் கடுமையாகத் தாக் கப்பட்டிருக்கின்றனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. ஈபி.டி.பி. தலைமை யகமான ஸ்ரீதர் தியேட்டரில் நேற்று அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
தமிழ்க் கூட்டமைப்பின் வேட் பாளர் கஜேந்திரனின் ஆதரவாளர் களே தமது அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று டக்ளஸ் தேவானந்தா அப்போது குற்றஞ்சாட் டினார். சம்பவம் தொடர்பாக ஈ.பி. டி.பி. விடுத்த ஒர் அறிக்கையில்:- யாழ்ப்பாண மாவட்ட வேட்பாள ரும், ஈ.பி.டி.பியின் பிரதான அமைப் பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நி~hந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி. டி.பியின் பிரசாரக் குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பகுதி அருகே பிரசாரப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், 57-5116 இலக்க முடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரசார வாக னத்தினுள் அத்து மீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப் படுத்தியதோடு ஆள்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த எமது விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டன.
பொலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலீஸார் மற்றும் கட்சி உறுப்பினர் மூவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்ட மைப்பு வேட்பாளர் என அறிமுகப்ப டுத்தப்படும் புலிகளின் முக்கியஸ் தரான கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர் இந்த அத்து மீறிய தாக்கு தல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந் திரன் (வி.கே.ஜெகன்), உதவி அமைப் பாளர் மணிபல்லவராஜன் (நி~hந் தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத் தல்களும், மிரட்டல்களும் விடுக் கப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள் ளது.
நன்றி - உதயன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

