03-26-2004, 02:38 PM
kuruvikal Wrote:புலிகளின் தியாக உணர்வை மெய்ச்சும் புத்த பிக்குசிங்களவங்கள் தேரருக்கு துரோகிப்பட்டம் குடுக்கேல்லையே..?
தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை ஒரு பயங்கரவாத அமைப்பு சமர்ப்பித்த யோசனைகள் என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்களே உண்மையான பயங்கரவாதிகள் என்று வணக்கத்துக்குரிய மகநெல்கடவல புண்ணியசாய் தேரர் தெரிவித்துள்ளார்.
சமாதானம், ஐனநாயகம் மற்றும் நற் பரிபாலனத்துக்கான மக்கள் மன்றம் குருநாகலில் நடத்திய ஒன்று கூடலின்போது வணக்கத்துக்குரிய புண்ணியசாய் தேரர் இதனை தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக உணர்வை சிலர் கொச்சைப்படுத்த முயல்வதும் முறையற்றது எனவும், புலிகளின் தியாகத்தை தான் மெய்ச்சுவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்று கூறுபவர்களோடு பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த தான் தயாராக இருப்பதாகவும் புண்ணியசாய் தேரர் குறிப்பிட்டார்.
நன்றி புதினம்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

