03-26-2004, 02:36 PM
பொலீஸார் - மாணவர் தகராறு
பெரும் மோதலாக வெடித்தது!
திருநெல்வேலியில நேற்று மாலை களேபரம்
தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவாக நேற்று மாலை திருநெல்வேலிப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட் டிருந்த பொலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக வெடித்தது.
இந்தக் கலவரத்தில் பொலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம், குண்டாந்தடிப் பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டனர். மாணவர்களும் பதிலுக்குப் பொலீஸார் மீது கற்களை வீசினர். பொலீஸாரின் குண்டாந்தடிப் பிரயோகங்களில் மாணவர்கள் சிலர் உட்காயங்களுக்கு இலக்காகினர்.
கலவரங்களையடுத்து மூன்று இளைஞர்கள் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்றுமாலை 6.30 மணியளவில் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் மாணவர்கள் சிலர் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவேளை அங்கு வந்த பொலீஸார் அவ்விடத்தில் நின்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டாம் என்று மாணவர்களைத் தடுத்தனர் என்றும் - இதனையடுத்தே இருதரப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை திடீரென ஷட்ரக்| வண்டிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலீஸார் அவ்விடத்தில் வந்து குவிந்தனர். தொடர்ந்து பெருமளவு மாணவர்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
ஒரு கட்டத்தில் பொலீஸார் திடீரென மாணவர்களை நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், குண்டாந்தடிப்பிரயோகமும் மேற்கொண்டனர். பதிலுக்கு மாணவர்களும் பொலீ ஸாரை நோக்கி கற்களையும் தடிகளையும் வீசித் தாக்கினார். தனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வர்தகர்கள் தமது கடைகளை அவசர அவகராமக இழுத்து மூடிவிட்டு அங்கிருந்து ஓடினர்.
கண்ணீர்ப் புகைப் பிரயோகம் உக்கிரமடையத் தொடங்கியதும் அங்கு நின்ற அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது பொலீஸார் தமது கையில் அகப்பட்ட மூன்று இளைஞர்களை கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்புத் தெரிவித்து மாணவர்கள் பலாலி வீதியில் - திருநெல்வேலி சந்திக்குச் சமீபமாக ஒன்று கூடி வீதிக்கு குறுக்காக தடிகள், கற்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அரசியல் துறைப் பொறுப்பாளர் சி;.இளம்பரிதி கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்குச் சென்று பொலீஸாருடன் பேச்சு நடத்தினார். இதனையடுத்து பொலீஸாரால் கைது செய்யப்ட்ட இளைஞர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்;களிடம் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று மட்டுமே பொலீஸார் கோரினர் என்றும் .
ஆனால், மாணவர்கள் அதற்கு உடன்படாததாலேயே அசம்பாவிதச் சம்பவம் ஏற்பட்டது என்றும். -
பொலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை,
மாணவர் - பொலீஸார் மோதலின் இடையே சிக்கி காயமடைந்தார் என்று கூறப்படும் கே.கேதீஸ்வரன் (வயது 24) என்பவர் கோப்பாய்ப் பொலீஸாரால் நேற்றிரவு யாழ்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>