03-26-2004, 01:59 PM
சிறிலங்காவின் 'கிங் மேக்கராக" தமிழீழத் தேசியத் தலைவர்: சர்வதேச ஊடகம்!!
சிறிலங்கா அரசியலை தீர்மானிக்கிற அரசியல் சக்தியாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உருவாக்கியுள்ளார் என்று சர்வதேச ஊடகமான ஏ.எஃப்.பி தனது ஆய்வுச்; செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் 2 ஆம் திகதியன்று இலங்கைத் தீவில் நடைபெற உள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆய்வுச்; செய்தி விவரம்:
49 வயதாகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் முதல் முறையாக சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுடன் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிறிலங்கா அரசியலில் தீர்மானிக்கிற சக்தியாக வலுப்பெற்றுள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 15 முதல் 18 வரையிலான உறுப்பினர்கள் பிரபாகரனின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். இந்த 18 உறுப்பினர்கள் மூலம் சிறிலங்காவில் ஆட்சிப் பொறுப்பில் யார் உட்காருவது என்பதைத் தீர்மானிக்கிற சக்தியாக - கிங் மேக்கராக பிரபாகரன் உருவெடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை பிரபாகரன் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறார். தமிழீழத் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த காலங்களில் அனுமதிக்கவில்லை. தற்போது தங்கள் நிர்வாகப் பகுதியில் உள்ள மக்கள் சூனியப் பிரதேசங்களில் அமைக்கப்பட உள்ள வாக்குச்; சாவடிகளில் வாக்களிக்க உரிய நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது என்று அந்த செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>