03-26-2004, 12:32 PM
ருபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மீது இடைக்கால தடை
தேர்தல்கள் ஆணையாளர் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதியும், 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் வெளியிட்ட பரிந்துரைகளை மீறுவதை தடுக்கும் வகையில் இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் மீது இடைக்கால தடை உத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ்.சமரக்கோன் பிறப்பித்துள்ளார்.
இந்த இடைக்கால தடை உத்தரவு இவ் இரண்டு நிறுவனங்களில் கடமையாற்றும் பணிப்பாளர்கள், தொழிலாளர்கள், செய்தி வழங்குநர்கள், ஊழியர்கள் முகவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் கீழ் கடமையாற்றும் அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மனுவொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதியும் இதே ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் தேர்தல்கள் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட அறிவுரைகளின் மூலம் அரச இலத்திரனியல் ஊடகங்களில் தமது செய்திகளிலும், ஏனைய நடப்பு விடயங்களிலும், சகல தரப்பினருக்கும் சம வாய்ப்பு வழங்குவதுடன் பக்க சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த அறிவுரைகளுக்கு அமைவாக இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனமும், சுயாதீன தொலைக்காட்சிச் சேவையும் செயற்படாததன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அமுலில் இருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>