03-25-2004, 05:39 PM
kuruvikal Wrote:**************Mathivathanan Wrote:[quote=kuruvikal]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.பகீரதன் பரராஐசிங்கம் மற்றும் இன்னுமொரு மாணவரான திரு.புவிராஐ; ராஐரட்ணம் ஆகியோரே இவ்வாறு, ஈ.பி.டி.பி. விரோதக்கும்பலைச் சார்ந்த சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், கொக்குவில் மஞ்சவண்ணப்பதி பிள்ளையார் கோவிலடிக்கு அருகில், வந்துகொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த ஈ.பி.டி.பி.யினர் சிலர், திடிரெனப் பாய்ந்து பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரையும் அவருக்கு அருகே வந்த புவிராஐ; உட்பட பலரையும் தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற பல்கலைக் கழக மாணவர்களை, ஈ.பி.டி.பி.கும்பலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளார்கள்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம், பொலிசார் பின்னர் தீவிர விசாரணைகள் நடாத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புதினம் தரும் செய்தி...!
யாழ்ப்பாண நகரை அடுத்துள்ள கொக்குவில் கிராமத்தில் மஞ்சவனப்பதி கோவிலருகே, ஈ.பி.டி.பி. பிரச்சாரக் குழவினர் மீது தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரும், புலிகளின் பிரமுகருமான கஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11.15 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி.டி.பி.யின் பிரச்சாரக்குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பதி அருகே பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளையில் 57-5116 இலக்கமுடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரச்சார வாகனத்தினுள் அத்துமீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப்படுத்தியதோடு ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில் காயமடைந்த எமது உறுப்பினர் ஒருவர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டது.
பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலிசார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மூவர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் என அறிமுகப்படுத்தப்படும் புலிகளின் முக்கியஸ்தரான கஜேந்திரனுக்கு ஆதரவான குண்டர்கள் சிலர் இந்த கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந்திரன்
(வி.கே.ஜெகன்) உதவி அமைப்பாளர் மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே அசம்பாவிதம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளிடமும் பொலீசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
<span style='color:brown'>இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கிறதே.. விசாரிக்கும் படத்துடன்..
[size=18]தாத்தா நீங்கள் செய்தி எடுத்த தளத்தின் பெயரைக் குறிப்பிடுகிறீர்களா....????!</span>
விசாரிக்கும் படம் தமிழ் நெற்றிலும் இருக்கிறது....நாம் உண்மையான நடுநிலைச் செய்திகளைத்தான் தேடுகிறோம்.....நிமலராஜனைக் கொலை செய்திவிட்டு கண்டன அறிக்கைவிட்டதையும் BBC இல சடைந்ததையும்...கடந்த தேர்தலின் போது தீவகத்தில் TNA மீது தாக்குதல் நடத்திவிட்டு பழிபோட்டதுகளையும் மக்கள் மறந்துவிடவில்லை...மக்கள் அவ்வளவுக்கு உங்களைப் போல் ஏமாளிகளும் இல்லை....!
[size=18]எல்லோரது தளங்களையும் பார்ப்பவன் நான்.. நீங்கள் கேட்கிறீர்கள் அதனால் போட்டிருக்கிறேன்..
தள முகவரி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail

