03-24-2004, 11:45 PM
லக்ஷ்மண் சதம்! தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா!!
வெங்கட் சாய் லக்ஷ்மண் அற்புதமாக ஆடி அடித்த சதமும், பாகிஸ்தானின் முன்னணி ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்த இர்ஃபான் பத்தானின் பந்து வீச்சும் இந்திய அணிக்கு தொடர் வெற்றியை பெற்றுத் தந்தது!
லாகூரில் இன்று நடைபெற்ற 5-வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக், இந்திய அணியை முதலில் களமிறக்கினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டை இழந்து 293 ரன்களை எடுத்தது.
294 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், கராச்சியிலும், லாகூரில் 2 போட்டிகளையும் வென்ற இந்திய அணி, 3-2 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தான் மண்ணில் முதன்முதலாக ஒரு தொடரை வென்ற சாதனையை படைத்தது.
லக்ஷ்மணின் அபார ஆட்டம்!
இந்திய அணிக்கு வீரேந்திர ஷேவக்கும், சச்சின் டெண்டுல்கரும் இன்றும் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்தனர். 20 ரன்களுக்கே ஆட்டமிழந்தாலும், அதனை மிக வேகமாக அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த உதவினார் ஷேவக்.
சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். சமயோசிதமாக பந்தைத் தட்டிவிட்டு 7 பௌண்டரிகளை குவித்து 37 ரன்களை எட்டியிருந்த நிலையில், சமியின் பந்தை ஸ்லிப்பில் தட்டிவிட முயன்று ஆட்டமிழந்தார்.
அடுத்து இணை சேர்ந்த லக்ஷ்மணும், கங்குலியும் மிக எச்சரிக்கையாக ஆடி அணியின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். இவர்கள் இருவரும் 18.2 ஓவர்களில் குவித்த 92 ரன்களின் உதவியால் இந்திய அணி வலிமையான நிலையை எட்டியது. வெங்கட் சாய் லக்ஷ்மண் வேகமாக அரை சதத்தை எட்டினார்.
கங்குலி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ராகுல் திராவிட், வந்து சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங், லக்ஷ்மணுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை 200 ரன்கள் கடக்க உதவினார்.
அதன் பிறகு ஆட வந்த பின்னணி ஆட்டக்காரர்களின் உதவியுடன் ரன் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்திய லக்ஷ்மண், ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஒரு சதம் அடித்தார்.
46-வது ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லக்ஷ்மண் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் மண்ணில் தொடர்ந்து 3 போட்டிகளில் தனது முத்திரையை பதிக்காத லக்ஷ்மண், முக்கிய நாளான இன்று சிறப்பாக ஆடி அடித்த சதம் இந்திய அணியை வலிமையான நிலைக்கு உயர்த்தியது. இறுதிக் கட்டத்தில் இணை சேர்ந்து ஆடிய பத்தானும், பாலாஜியும் 18 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தனர்.
<b>இர்ஃபான் பத்தானின் அபார பந்து வீச்சு!</b>
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் 294 ரன்கள் என்பது பாகிஸ்தான் அணியால் சாதிக்கக் கூடியதே என்கின்ற நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பாலாஜியும், பத்தானும் துவக்கத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியைத் தந்தனர்.
பாலாஜி தனது முதல் ஓவரின் 4-வது பந்திலேயே ஹமீதை கிளீன்போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து ஆட வந்த யூசுஃப் யுஹானாவை அற்புதமான பந்து ஒன்றை வீசி எல்.பி.டபிள்யூ.வாக்கினார் இர்ஃபான் பத்தான்.
மிகச் சிறப்பாக ஆடி 18 ரன்களை எட்டியிருந்த டோஃபிக் உமர், லெக் ஸ்டம்பிற்கு பிட்ச் ஆகி நேராக வந்த பத்தானின் பந்தை கிளான்ஸ் செய்ய முயன்றார். பந்து அவருடைய மட்டையில் சிக்காமல் லெக் ஸ்டம்பைத் தாக்குகிறது. 7-வது ஓவரில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 3-வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், அதன் பிறகு 13-வது ஓவரில் யூனிஸ் கானையும் இழந்தது.
ஆஃப் ஸ்டம்பிலிருந்து மிகவும் தள்ளி பிட்ச் செய்து அவரை நன்றாக வெளியே இழுத்து ஆடச் செய்தார் பத்தான். அவர் மட்டையின் விளிம்பில்பட்ட பந்து மேலெழும்பி வர அதனை யுவராஜ் சிங் முன்னால் பாய்ந்து பிடித்தார்.
நெருக்கடியில் விழுந்த பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்த வந்த இன்சமாம்-உல்-ஹக் மிக எச்சரிக்கையாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினார். அவரை லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் செய்து பந்து வீசி கட்டுப்படுத்த முயன்றார் கார்த்திக். அவருடைய பந்து வீச்சை உடைக்க முயன்ற இன்சமாம், மேலேறி வந்து தூக்கியடிக்க பௌண்டரி கோட்டிற்கு அருகே இருந்த சச்சின் டெண்டுல்கர் மிக நன்றாகக் கணித்து, பௌண்டரிக் கோட்டில் தனது கால் பட்டுவிடாமல் கேட்ச்சைப் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அதுவே இன்றையப் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என்றால், 24-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ரசாக்கின் விக்கெட்டை பாலாஜி வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.
<b>மாலிக்-மொய்ன் அபார ஆட்டம்!</b>
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக மாலிக்கும், மொய்ன் கானும் இணைந்து 30 ஓவர்களுக்குப் பிறகு அடித்தாடி இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தனர். அடிக்க வேண்டிய ரன்கள் அதிகமாக இருந்தாலும், விடா முயற்சியுடன் ஓவருக்கு ஓவர் ரன்களைக் குவித்து அவர்கள் இலக்கை நோக்கி மேற்கொண்ட அணுகுமுறை பாராட்டிற்குரியது.
25-வது ஓவரில் இணை சேர்ந்த இவ்விருவரும் அடுத்த 16 ஓவர்களில் குவித்த 99 ரன்கள் அற்புதமானவை. ஆனால், ஷேவக்கின் பந்து வீச்சை தூக்கியடிக்க முயன்று 65 ரன்களுக்கு மாலிக் ஆட்டமிழந்ததற்குப் பிறகு, இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக பந்து வீசினர். 47-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. கடைசியாக மொய்ன் கானை போல்ட் செய்து 3-வது வெற்றியை பெற உதவினார் பாலாஜி.
இன்றையப் போட்டியில் இர்ஃபான் பத்தான் 10 ஓவர்கள் வீசினார். 1 மெய்டனுடன் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 9.5 ஓவர்களில் 62 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கான், கார்த்திக், ஷேவக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்றையப் போட்டியின் நாயகனாக லக்ஷ்மணும், தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாமும் தேர்வு செய்யப்பட்டனர்.
14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அணி, 3 வெற்றிகளைப் பெற்று பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டித் தொடரை முதன் முதலாக வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியின் வீரர்கள் இந்த வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆட்டத்தைக் காண வந்த இந்திய ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று வானவேடிக்கையை நடத்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தது, ஆட்டம் நடைபெறும் இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்று சந்தேகம் கொள்ள வைத்தது. பாகிஸ்தானில் போதுமான பாதுகாப்பு இருந்தது என்பதற்கும், பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை எவ்வித கசப்புணர்ச்சியும் இன்றி ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கும் வானவேடிக்கைகள் அத்தாட்சியாக இருந்தது.
நன்றி - வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>