03-24-2004, 10:20 PM
கிழக்கில் விரிவுரையாளர் மீது துப்பாக்கிச் சூடு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சிவஞானம் திருச்செல்வம் நேற்று இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில், மட்டக்களப்பு கல்லடியில் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் வைத்தே, விரிவுரையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
உந்துருளியில் அவருடைய வீட்டுக்கு சென்ற, தலைக்கசம் அணிந்திருந்த இரண்டு இளைஞர்களே, கைத்துப்பாக்கி ஒன்றினால் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சம்பவத்தின் போது விரிவுரையாளரின் இடுப்புப் பகுதியிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் கருணா அணியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் ஒருவரும், செங்கலடியில் வைத்துப் பிறிதொருவரும் கருணா அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலிருந்து கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கையடக்கத் தொலைபேசியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டதாகவும், இதையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவர் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>