03-24-2004, 10:17 PM
அரசஅதிபர் மௌனகுருசாமி நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அரச அதிபரான மௌனகுருசாமி கருணா குழுவினரால் நிர்வாணப்படுத்தி நையப்புடைக்கப்பட்டுள்ளார். கருணா குழுவினரின் பணித்தலின் பெயரால் பணிக்கப்பட்ட விடயத்தை அரசஅதிபர் மௌனகுருசாமி செய்யாது விட்டதாகவும் அதனால் கோபமுற்ற கருணா அணியினர் மௌனகுருசாமி அவர்களை நிர்வாணப்படுத்தி நையப்புடைத்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளிச்செல்லாது கருணா குழுவினரால் மறைக்கப்பட்டுள்ளது.
இவர்போன்று பல புத்திஜீவிகள் , கல்விமான்கள் போன்றோர் கருணா குழுவினரால் இதேபோன்ற நையப்புடைத்தல் நடாத்தப்பட்டுள்ளது. எனினும் வெளியில் சொல்ல முடியாது அவர்களெல்லாரும் மௌனமாகவுள்ளார்கள். இச்சம்பவங்கள் வெளியில் தெரியும் பட்சத்தில் தாம் மீண்டும் இதுபோன்ற இம்சைகளுக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் மௌனிகளாக இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
மௌனகுருசாமியின் மகளின் கணவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான கருணாகரன் (ஜெனா) அவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி. மௌனகுருசாமி அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்துடன் இணைந்து மட்டக்களப்பு மக்களுக்கு கொடும் அட்டகாசங்களும் , அநியாயங்களும் புரிந்தவர். அக்காலப்பகுதியில் கருணாவால் தேடப்பட்ட துரோகியான இவர் கருணாவின் தேடுதலிலிருந்து தப்பித்து கொழும்பில் வசித்து வந்தார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்த மௌனகுருசாமி அரசஅதிபராகப் பதவியேற்றார். கருணாமீதான பயத்திலும் , அவரை அனுசரித்தும் தனது பணியனைச் செய்து வந்தவர். தற்போது கருணா குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அரச அதிபர் என்ற மதிப்புக்கூட வழங்கப்படாது இவர் நையப்புடைக்கப்பட்டது வருத்தத்துகுரியதும் கண்டனத்துக்கும் உரிய விடயமாகும்.
தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிலர் இந்த சந்தர்ப்பத்தைத் தமது பதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>