07-01-2003, 01:07 PM
குருவிகளே உங்கள் பதிலை காலம கடந்து பார்த்தேன். நிச்சயமாய் சிங்களவர்களை அந்த ஒன்றிற்காய் போற்றலாம்.நிச்சயமாய் அவர்கள் தமது மதத்தை ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததில்லை. உதாரணம் இங்கு வந்து சில துரோகிகள் மதம் மாறி மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். நான் பத்து வருடங்களாக இவ்விடம் உள்ளேன் ஆனாலும் இன்னமும் ஒரு பௌத்தன் மதம் மாறி தன் இனத்தைக் காட்டிக் கொடுத்ததாக நான் கேள்விப்பட வில்லை. சில நாட்களுக்கு முன் பாடு மீன் நகரின் ஒரு பிரஜை இங்கு மதம் மாறி தமிழ் புத்தாண்டுக்கு பால் சோறு பொங்கி உண்டதையே காட்டிக் கொடுத்து அடிவாங்கிக் கொடுத்த கொடுமையை என்ன வென்று சொல்வது. சிங்களம் எதிரியேன்றாலும் அவர்களிடம் படிப்பதற்கு நிறைய பாடஙகள் எமக்குண்டு.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

