03-24-2004, 09:53 AM
கனடா, ஒட்டவா கால்ரன் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அறிக்கை
<b>கால்ற்ரன் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் மன்றம்
ஒட்டாவா, கனடா
பங்குனி 2004
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்</b>
தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து கல்வி கற்கின்ற மாணவர்களில் அதிக எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்ட கால்ற்ரன் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைந்த குரலாய் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
17,000ற்கு மேற்பட்ட மாவீரர்களின் உயிர்க்கொடையும் 80,000ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பேரிழப்பும் ஒன்றுபட்ட தனித் தமிழ்த்தேசியத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவை.
பிரதேசவாதத்தினைத் து}ண்டிவிடும் தீயசக்திகளினது கீழ்த்தரமான நடவடிக்கைகளாவன, இதுகாறும் தம்முயிர்களை விதைகளெனப் பயிர்செய்த ஆன்மாக்களை மீழுயிர்த்துத் து}க்கிலிடும் செயலிற்கு ஒப்பானவை. அத்தகைய செயற்பாடானது தமிழீழத் தேசிய வரலாற்றில் மன்னிக்கப்படமுடியாத தவறாகும்.
தனது தனிப்பட்ட சுயநலன் கருதி முரளிதரன் விநாயகமூர்த்தி (கருணா) அவர்கள் இழைத்திருக்கும் தேசத்துரோகமும் நம்பிக்கைத்துரோகமும் இதுவரை தமது இன்னுயிர்களைத்துறந்த மாவீரர்களதும், மக்களதும் கொள்கைகளையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு இழைக்கப்பட்ட தான்தோன்றித்தனமான அவது}றானது தமிழீழ மக்களினதும், மாணவர்களினதும் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் அமைகின்றது. முரளிதரன் விநாயகமூர்த்தி தனது ஒழுக்கச் சீர்கேடான நடத்தைகளை மூடிமறைக்கும் பொருட்டு மேற்கொள்கின்ற மனிதவுரிமை மீறல்கள் மக்களின் அமைதியான வாழ்க்கை முறையைச் சீர்கெடுக்கின்றது. இவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களாவன பிரதேசவாதத்தை தூண்டுவனவே அன்றி உண்மையானவை அல்ல.
எந்தவொரு தீயசக்தி உருவாக்கும் பிரதேச வாதத்தினை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதிலும், ஒன்றுபட்ட தனித்தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டில் ஆணித்தரமாக இருப்பார்கள் என்பதிலும் புலம் பெயர்ந்து வாழுகின்ற மாணவர்களாகிய எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தீயசக்திகளினால், தமிழீழத்தில் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழரின் தனித்தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டினைச் சீர்குலைக்க முடியாது.
கால்ற்ரன் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களாகிய நாம் தமிழீழ மாணவர்களினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஓங்கிக் குரல் கொடுப்போம்.
தலைவர்
கணேஸ் சுப்பிரமணியம
நன்றி - தமிழ் நாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>