03-23-2004, 02:00 PM
விஸ்வரூபமெடுக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்-
கொஞ்ச காலமாக சற்றே இசையுலகில் தொய்வாக இருந்த ஏ.ஆர். ரஹ்மான் இப்போது மறுபடியும் விஸ்வரூபமெடுக்கிறார்.
'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் திரையலகில் நுழைந்தவர் ஏ.ஆர். ரஹ்மான். பிறகு 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'பம்பாய்' போன்ற படங்களின் மாபெரும் ஆடியோ ஹிட் அவரை நட்சத்திர இசையமைப்பாளராக உயரித்தியது. தொடர்ந்து இந்திப்படங்களின் நுழைந்து 'தால்', 'லகான்' போன்ற படங்களின் இசை சாதனை மூலம் இந்தியிலும் முன்னனி இசையமைப்பாளரானார். ஆனால் சமீப காலமாக அவரது பாடல்கள் எதிர்பார்த்த அளவில் ஆடியோ விற்பனை ஆகவில்லை.
இந்நிலையில் ரஹ்மான் 'ஆய்தஎழுத்து' படத்தின் பாடல்கள் மூலம் தனது மறுபிரவேசத்தை அசத்தலாக ஆரம்பித்துள்ளார். வைரமுத்து-மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணி இசையில் எப்போதும் வெற்றிக் கூட்டணி என்றால், அவர்கள் இந்த ஆய்தஎழுத்து படப்பாடல்கள் மூலம் ஒரு மாயாஜாலமே நடத்தி ரசிகர்களை கிறங்கடித்துள்ளனர்.
படத்தின் ஆறு பாடல்களும் இளமை துள்ளலுடன் அனைவரையும் தாளம் போட வைக்கின்றன. வழக்கம் போலவே இந்தப் படத்திற்கும் ரஹ்மான் முதலில் இசை அமைத்துவிட்டு பிறகே வைரமுத்துவை பாடல்கள் எழுத வைத்துள்ளார்.
படத்தில் 'டோல் டோல்' என்று ஆரம்பிக்கும் 'ராப்' பாடல் ரஹ்மானுக்கே உரிய ஸ்டைலில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளப்போகிறது. இது இனி இந்திய டிஸ்கோதேக்கள் அனைத்திலும் திரும்ப திரும்ப ஒலிக்கப்போவது நிச்சயம். 'ஜன கண மன' பாடல் அட்டென்ஷனில் நிற்க முடியாமல் அனைவரையும்
ஆடவைக்கும்படி உள்ளன. 'நெஞ்சம் எல்லாம்' என்ற இனிய மெலடி பாடலும் உள்ளத.
சந்தேகத்திற்கிடமில்லாமல், ரஹ்மானின் இசைப்பயணத்தில், அதுவும் அவர் மார்க்கெட் ஓரளவு தொய்வடைந்த நேரத்தில் வருவதால், 'ஆய்தஎழுத்து' ஒரு மைல்கல்லாகவே அமையும்.
நன்றி - சினிசவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>