07-01-2003, 11:33 AM
வடபகுதியை விட்டு படையினரை வெளியேறுமாறு தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே இராணு வத்தினரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான வீ. ஆனந்தசங்கரி யாழ்ப்பாணம் வந்து செல்கிறார். இந்த நிலை ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ரெலோ அமைப்பின் முதல்வர் என்.சிறீகாந்தா.
நேற்று யாழ். ஆஸ்பத்திரி வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று இடம் பெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே ரெலோ முதல்வர் இவ்வாறு பதில் கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரான வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கும் கருத்துக்கள் அண்மைக்காலமாக முரண்பாடுகள் நிறைந்தனவாக உள்ளன. அவரது கருத்துக்கள் விளக்க மில்லாதவை. தேர்தல் காலத்தில் புலிகளே தமிழரின் ஏகபிரதிநிதிகள் என தனது கட்சி அங்கத்தவர்களு டன் இணைந்து மேடைகளில் முழங்கினார். ஆனால், இப்போது தான் அப் படிச் சொல்லவில்லை எனக்கூறி வருகின்றார்.
புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை இன்று உலக மெங்கும் பொங்கு தமிழ் நிகழ்வு மூலம் தமிழ்மக்கள் பறைசாற்றியுள்ளார்கள். எவரும் அதனை மறுத்து ரைக்க முடியாது. வீதிகளில் சாகசம் காட்டும் படையினர் எமது மக்களின் உணர்வுகளை அடக்கிவிடமுடியாது. நசுங்கிப்போவதற்கும் நசுக்கப்படுவ தற்கும் தமிழ் மக்கள் அடிமைகள் அல்லர். இராணுவத்தினர் யாழ்ப்பாண வீதிகளில் கலகமடக்குவதுபோல் பாவனைசெய்து பயிற்சி பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ். மக்களின் பொங்கு தமிழ் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்த இராணு வத்தினர் தமிழ் மக்களின் மனங்க ளில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக் கோடு மேற்கொள்ளும் ஒரு நடவடிக் கையே இதுவாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கெல்லாம் எமது மக்கள் அஞ்சமாட்டார்கள்.
உலக நாடுகளில் இராணுவத்தின்; பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுவன. அங்கெல்லாம் சுதந்திரதின விழா, நாட்டின் பிதாமகர்களின் நினைவுநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றி லேயே இராணுவ சாகசங்கள் மக்கள் முன் இடம்பெறும். மக்கள் மத்தியில் எந்தப் பயிற்சியையும் படையி னர் மேற்கொள்ளமாட்டார்கள். இந்த வரையறையை மீறி இலங்கை இராணு வத்தினர் யாழ்ப்பாணத்தில் செயற் படுவது மனவேதனைக்குரியவிடயமாகும்.
- இவ்வாறு சிறீகாந்தா தெரிவித்தார்.
நன்றி உதயன்