07-01-2003, 11:32 AM
ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் கடத்திச்செல்லப்பட்டு பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளான். இது தொடர்பாக இளைஞர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். சங்கானை, காளிகோயிலடியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒரு வனே நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கடத்தப்பட்டு துன்புறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத் திருவிழாவிற்கு பெற்றோரு டன் சென்ற மேற்படி சிறுவன் ஆலய வீதியில் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சிறுவர்களுக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் பிரஸ்தாப சிறுவனை மட்டும் விளையாட்டுப் பொருள்கள் வாங்கித் தருவதா கக் கூறி தனியாக அழைத்துச்சென்று வயல் வெளி ஒன்றில் வைத்து சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
நீண்டநேரமாகியும் சிறுவனைக் காணாத பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களிலும் தேடியபோதும் சிறுவனைக் காணவில்லை.
நேற்று அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட ஆலயத்துக்கு சற்றுத் தொலைவில் சனநடமாட்டம் அற்றபகுதியில் அந்தச் சிறுவன் அழுதுகொண்டு நின்றவேளை அப்பகுதி வழியே சென்றவர்கள் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற னர்.
இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி உதயன்