03-23-2004, 10:03 AM
இராணுவ சூனியப் பகுதிகளில் வாக்களிப்பு நடத்துவதற்கு வாய்ப்பாக சோதனை நிலைகளை கணிசமான தூரம் பின்னகர்த்த புலிகள் தயார்
வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தலுக்கான வாக்களிப்பை யுத்த சூனியப் பகுதியில் நடத்துவதற்கு வாய்ப்பாக, தங்கள் சோதனை நிலையங்களை எவ்வளவு தூரத்திற்கும் பின் நகர்த்துவதற்கு தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு - கிழக்கில் இம்முறையும் வாக்களிப்பு இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியிலேயே நடைபெறு மென அறிவிக்கப்பட்ட நிலையில், யுத்த சூனியப் பகுதியில் வாக்க ளிப்பு நிலையத்தை அமைக்க வேண்டுமென புலிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கடந்த இரு நாட்களாக கொழும்பில் நோர்வே அனுசரணையாளர்களுட னும் வெளிநாட்டு தூதுவருடனும் முக்கிய சந்திப்புகளை நடத்தி வரு கின்றார்.
கடந்த பொதுத் தேர்தலில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வாக் களிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது வாக்குரிமை துப்பாக்கி முனையில் மறுக்கப் பட்டதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதும் இங்கு சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.
இதனால் இம்முறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்களின் வசதிக்காக, யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்காக தங்கள் சோதனை நிலையங்களை 500 மீற்றர் தூரத்தால் அல்லது எவ்வளவு தூரத்திற்கும் பின்நகர்த்தி வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தாங்கள் தயாரெனவும் இந்தச் சந்திப்புக்களில் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நோர்வே அனுசரணையாளர்களை யும், இலங்கைக்கான சுவிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து இது தொடர்பாக புலித்தேவன் பேசியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருமளவு வாக்காளர்கள் இருப்ப தாலும் அவர்களது வாக்குரிமை மதிக்கப்பட வேண்டுமென்பதாலும் இது குறித்து தேர்தல் ஆணையாளருடனும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் இது தொடர்பாக உடனடியாக பேசவுள்ளதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி யளித்துள்ளனர்.
இராணுவ சூனியப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு படையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலேயே அங்கு வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாதிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரி வித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணையாளருக்கு, இது குறித்து சர்வதேச சமூகம் சில அழுத்தங்களைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுவதால் வடக்கு-கிழக் கில் இராணுவ சூனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் படும் சாத்தியமிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>