03-23-2004, 08:55 AM
BBC Wrote:PAAMARAN Wrote:PAAMARAN Wrote:இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தனி நாடு கேட்டு ; போராடும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, அதை தீவிரவாத இயக்கம் பட்டியலில் இந்திய அரசு பட்டியலில் வைத்து இருக்கிறது. அந்த இயக்கம் சார்பில் அதன் தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்க வற்புறுத்தி உள்ளார்.
http://www.dinakaran.com/daily/2004/Mar/23.../topstory1.html
நன்றி: தினகரன்
BBC Wrote:புலிகளை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சிக்கு அமெரிக்கா சர்வதேச ரீதியில் தலைமை தாங்குவதுடன், புலிகளுக்கு எதிரான முயற்சிகளை முனைப்புடன் ஆரம்பித்து வைத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க முன்னாள் பிரதித் தூதுவரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான பீற்றர் பேர்லிக் தெரிவித்தார்.
தென்னாசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளில் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புலிகளை தனிமைப்படுத்தி ஓரம் கட்டுவதன் மூலமும், பலவீனப் படுத்துவதன் மூலமுமே தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பையும், ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகாண முடியும் என்பது அமெரிக்கா வின் பலமான நம்பிக்கையாகும். ஆகவேதான் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் சேர்க்கப்பட்டார்கள்.
சட்டத்துக்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜைகள் புலிகளுக்கு நிதி மற்றும் ஏனைய வழிமுறைகளில் உதவி செய்வதை தடுக்கும் முயற்சியும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. செப்.11 தாக்குதலிலிருந்து புலிகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கின்றமை வெளிப்படை. அமெரிக்காவின் அழுத்தம், தலையீடு காரணமாகவே புலிகளின் தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் தெரிவிக்க வேண்டியேற்பட்டது
நன்றி - வீரகேசரி
நியூஸ்சுக்கு நியூஸ்சுதாங்க பதில்
ஆத்தா அடிக்க வந்தாக்கா நைனா கிட்ட ஓடணும்
நைனா அடிக்க வந்தாக்கா ஆத்தா கிட்ட ஓடணும்
இனி ஓட்டந்தான்.............
அமெரிக்கா நைனா, இந்தியா ஆத்தாவா? கொஞ்சம் குசும்பா தெரியலை?
இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ஈழவன்?
அவர் நைனா ஆத்தா என்று சொன்னாலும் சொன்னார் அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ இரு நாடுகளும் தங்களை அப்படிக் காட்டிக் கொள்வது உண்மை
அவர்களுக்குத் தேவை இந்து சமுத்திர அல்லது தெற்காசியப் பிராந்திய மேலாண்மை ஏனென்றால் இந்தியா வளரும் வல்லரசு அமெரிக்கா வளர்ந்த வல்லரசு பிராந்துய மேலாண்மையை தக்கவைத்துக்குக்கொள்ளும் இரண்டுக்கும் இடையேயான போட்டியின் ஒரு விளைவே இன்றைய இலங்கையின் குழப்ப நிலை
ஆ ஊ என்ற உடன் இலங்கை அரசின் முக்கியஸ்தர்களும் சரி இந்தியா ஓடுகின்றார்கள் அவர்கள் மட்டுமேன் தமிழ் அரசியல் வாதிகள் கூட இந்தியா போய்த் தானே தமது கொள்கை விளக்கங்களைக் கொடுக்கின்றனர்
முதலில் ஆயுதப் போராட்டத்தை தூபமிட்டு வளர்த்தது இந்தியா எம்மைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியாவும் இந்தியாவைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று நாமும் போட்ட தப்புக் கணக்குகள் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதற்குப் பதிலாக மூன்று என்று ஆகி இன்று இலங்கைப் பிரச்சனை மூன்று நாடுகளின் அரசியல் பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டதாக மாறி விட்டது
இன்று கூட அமெரிக்கத் தூதுவர் வந்தால் அரசு, புலிகள்,தமிழ்க்கட்சிகள் என்று எல்லோரும் போட்டிபோட்டு சந்திக்கிறார்கள் அவர்களின் பிரசன்னத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும்
வெறுமனே தலாளித்துவம்,மேலாதிக்கம்,சட்டாம்பிள்ளைத் தனம் என்று முழங்கினாலும் இலங்கை இனப் பிரச்சனையில் அமெரிக்காவையோ இந்தியாவையோ தட்டிக்கழிக்க முடியாத நிர்ப்பந்தம்
இதிலே ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம் இடையில் மாட்டித் தவிப்பது வண்டியோட்டி இலங்கை
இலங்கை இனப்பிரச்சனை மாத்திரம் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனையாகவோ அல்லது பெரும்பான்மை சிறுபான்மை இனத்தவரிடயோ உள்ள பிரச்சனையாகவோ மாத்திரம் இருந்தால் எப்பவோ தீர்ந்திருக்கும் ஏனென்றால் 25 வருடங்களாகத் தொடரும் யுத்தத்தால் இரண்டு பகுதியினரும் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுவிட்டோம்
ஆனால் இதனால் பாதிக்கப் படாத இந்த வெளித்தரப்புகளுக்கு தாம் விரும்பியது கிடைக்கும் வரை இந்த யுத்தம் தொடரும் அல்லது போரிடும் இரு தரப்புமே இவர்களுக்குச் செவி சாய்க்காமல் விட்டால் தீர்வு சாத்தியப்படும் இது நடைமுறைச் சாத்தியமா என்றால் அதற்காண விகிதாசாரம் குறைவே
போட்டி போட்டுக் கொண்டு போராளிகளுக்கு பயிற்சி வழங்கிய இந்தியா இஸ்ரேல் நாடுகளே தமது ஆயுதங்களை விற்பதற்கு இலங்கையை நல்ல வாடிக்கையாளராக்கிக் கொண்டனர்
கவச வாகனங்களை அங்கே விற்றவர்கள் எதிர்ப்பு ஆயுதங்களை இங்கே விற்றனர் விமானங்களை அங்கே விற்றவர்கள் ஏவுகணைகளை இங்கே விற்கிறார்கள் ஆயுதம் தருகிறோம் அடி என்றவர்கள் அடிவாங்கியவர்களைப் பாதுகாக்க படையனுப்பத் தயார் என்றார்கள்
மொத்தத்தில் வல்லரசுகளின் ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் சோதனைக் களமானது நாங்கள்
திருகோணமலைத் துறைமுகமும் எண்ணைக்குதமும் அவர்கள் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இங்கே யுத்தத்தால் பலியாகும் மக்கள் தெரியாது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் வல்லரசுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்படுமா என்பதிலே தான் இலங்கை இனப் பிரச்சனை தங்கியுள்ளதே தவிர பாராளுமன்றத்தில் பேரம் பேசும் பலம் என்பது இலங்கை அரசை பணிய வைக்கத் தான் உதவும் இதன் மூலம் காலப் போக்கில் தீர்வு எட்டப்படுவதற்கும் சாத்தியக் கூறு உண்டு அதையும் நாம் மறுக்க முடியாது
\" \"

