07-01-2003, 11:31 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அயல்வீட்டு வாலிபனுடன் தனது மனைவிக்கு காதல் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.இச்சம்பவம் கந்தளாய் பொலீஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.மனைவி, இருபிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார் விவசாயி. தனது மனைவிக்கும் பக்கத்து வீட்டு வாலி பனுக்குமிடையில் காதல் உறவு இருப்பதைத் தெரிந்துகொண்டவர் மனைவிக்கு புத்திமதிகள் கூறினார். ஆனால், அவளது காதில் புத்திமதிகள் ஏறவில்லை.
இதனையடுத்து கணவன் இது பற்றி கந்தளாய் பொலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கணவனையும், மனைவியையும், காதலனையும், இரு பிள்ளைகளையும் பொலீஸ் நிலையம் அழைத்த கந்தளாய் பொலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசேன, விசார ணைகளை மேற்கொண்டார்.விசாரணையின்போது காதலனுடன் செல்வேன் என்று வற்புறுத்திய மனைவியிடம் நீ விரும்புவது போல் உன்னைத் தாரைவார்த்துக்கொடுக்க நான் மனப்புூர்வமாக சம்மதிக்கிறேன். ஆனால், எனக்கு செய்த துரோகத்தைப் போல் உனது காதலனுக்கும் துரோகம் செய்து விடாதே என்று அறிவுரை கூறிப்பிரிந்து சென்றார் கணவர்.காதலன் காதலியை அழைத்துக்கொண்டு செல்ல கணவன் தனது இரு பிள்ளைகளையும் அரவணைத்தபடி வீடுசென்றார். </span>