03-23-2004, 01:26 AM
அரச அதிபரினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு புலிகள் அழைக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி. எதிர்ப்பு
யாழ்;ப்பாண அரசாங்க அதிபரினால் ஒழங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டமை குறித்து ஈ.பி.டி.பி. கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்;ளது.
சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகமாலை சோதனைச் சாவடிக்கு அருகில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பாக ஆராயவெனவே .க்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தமது ஆதங்கத்தை ஈ.பி.டி.பி.யினர்; தேர்தல் கண்காணிப்புக் குழுக்களிடம் தெரிவித்துள்ளனர்;;.
இலங்கைத் தமிழரசுக் கட்சியென்ற பெயரில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடமைப்பினரை விடுதலைப் புலிகள் வெளிப்படையாகவே ஆதரித்து வருவதாக கூறியுள்ள ஈ.பி.டி.பி, இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பான முடிவுகளை விடுதலைப் புலிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து எடுப்பது குறித்து விசனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாடற்ற பகுதி வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில், அப்பகுதியில் அதிகாரம் செலுத்தும் சக்திகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடாத்தமுடியும் என யாழ் செயலக வட்;டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>