03-22-2004, 11:14 PM
PAAMARAN Wrote:PAAMARAN Wrote:இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தனி நாடு கேட்டு ; போராடும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, அதை தீவிரவாத இயக்கம் பட்டியலில் இந்திய அரசு பட்டியலில் வைத்து இருக்கிறது. அந்த இயக்கம் சார்பில் அதன் தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்க வற்புறுத்தி உள்ளார்.
http://www.dinakaran.com/daily/2004/Mar/23.../topstory1.html
நன்றி: தினகரன்
BBC Wrote:புலிகளை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சிக்கு அமெரிக்கா சர்வதேச ரீதியில் தலைமை தாங்குவதுடன், புலிகளுக்கு எதிரான முயற்சிகளை முனைப்புடன் ஆரம்பித்து வைத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க முன்னாள் பிரதித் தூதுவரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான பீற்றர் பேர்லிக் தெரிவித்தார்.
தென்னாசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளில் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புலிகளை தனிமைப்படுத்தி ஓரம் கட்டுவதன் மூலமும், பலவீனப் படுத்துவதன் மூலமுமே தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பையும், ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகாண முடியும் என்பது அமெரிக்கா வின் பலமான நம்பிக்கையாகும். ஆகவேதான் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் சேர்க்கப்பட்டார்கள்.
சட்டத்துக்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜைகள் புலிகளுக்கு நிதி மற்றும் ஏனைய வழிமுறைகளில் உதவி செய்வதை தடுக்கும் முயற்சியும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. செப்.11 தாக்குதலிலிருந்து புலிகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கின்றமை வெளிப்படை. அமெரிக்காவின் அழுத்தம், தலையீடு காரணமாகவே புலிகளின் தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் தெரிவிக்க வேண்டியேற்பட்டது
நன்றி - வீரகேசரி
நியூஸ்சுக்கு நியூஸ்சுதாங்க பதில்
ஆத்தா அடிக்க வந்தாக்கா நைனா கிட்ட ஓடணும்
நைனா அடிக்க வந்தாக்கா ஆத்தா கிட்ட ஓடணும்
இனி ஓட்டந்தான்.............
அமெரிக்கா நைனா, இந்தியா ஆத்தாவா? கொஞ்சம் குசும்பா தெரியலை?
இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ஈழவன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

