03-22-2004, 10:34 PM
புலிகளை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிர முனைப்பு - அமெரிக்க முன்னாள் தூதுவர் பீற்றர் பேர்லிக்
புலிகளை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சிக்கு அமெரிக்கா சர்வதேச ரீதியில் தலைமை தாங்குவதுடன், புலிகளுக்கு எதிரான முயற்சிகளை முனைப்புடன் ஆரம்பித்து வைத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க முன்னாள் பிரதித் தூதுவரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான பீற்றர் பேர்லிக் தெரிவித்தார்.
தென்னாசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளில் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புலிகளை தனிமைப்படுத்தி ஓரம் கட்டுவதன் மூலமும், பலவீனப் படுத்துவதன் மூலமுமே தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பையும், ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகாண முடியும் என்பது அமெரிக்கா வின் பலமான நம்பிக்கையாகும். ஆகவேதான் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் சேர்க்கப்பட்டார்கள்.
சட்டத்துக்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜைகள் புலிகளுக்கு நிதி மற்றும் ஏனைய வழிமுறைகளில் உதவி செய்வதை தடுக்கும் முயற்சியும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. செப்.11 தாக்குதலிலிருந்து புலிகள் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கின்றமை வெளிப்படை. <span style='color:#f50000'><b>அமெரிக்காவின் அழுத்தம், தலையீடு காரணமாகவே புலிகளின் தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் தெரிவிக்க வேண்டியேற்பட்டது.</b> (உஙகள் கருத்துக்கள் ??? )
எவை எப்படி இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தேக்கநிலை அடைந்துள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியும். ஒன்று சேரத் தவறினால் சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் நேர்வதுடன் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிச் செல்வதற்குச் சாக்குப்போக்காக அமையும்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளர் பேராசிரியர் வோல்ரர் அன்டர்சன் பேசுகையில் இலங்கையின் நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பேராதரவு வழங்கி வருகிறது என்றார்.</span>
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>