03-22-2004, 08:43 PM
<b>ரஹ்மான் சிம்பொனி!</b>
<img src='http://www.vikatan.com/av/2004/mar/28032004/p75.jpg' border='0' alt='user posted image'>
ரஹ்மானுக்கு எப்போதும் பிடித்த வெள்ளிக்கிழமை... ஏராளமான இசைவிரும்பிகள் குவிந்திருந்த லண்டன் பர்மிங்ஹாம் சிம்பொனி ஹாலில் ஏ.ஆர்.ரஹ்மான்!
மார்ச் 5... சிஙிஷிளி என்கிற சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா, லண்டனில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவரது புகழ்பெற்ற இந்தி இசைக்கோவைகளை சிஙிஷிளி|வின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் வழங்குவதாகத் திட்டம். ரஹ்மான் நேரடியாக அதை நடத்தித் தர வந்திருந்தார்!
"லகான்", பாம்பே ட்ரீம்ஸ், என்று ஏ.ஆர்.ரஹ்மான் அங்கே ஏற்கெனவே பிரபலம். பாம்பே ட்ரீம்ஸ், பாம்பே, ரிலீஸாகப் போகிற எம்.எஃப்.ஹ§ஸைனின் Ôமீனாட்சி என அடுத்தடுத்து வாசித்தார்கள். தில் சே, மியூஸிக்கை அவர் பியானோவில் வாசித்தபோது பெரும் வரவேற்பு!
அந்த மிகப் பெரிய அரங்கம் ஆசியர்களாலும் ஆப்பிரிக்கர் களாலும் பல வெளிநாட்டு இசைவிரும்பிகளாலும் நிரம்பி வழிந்தது. குவிந்திருந்தவர்கள், பாலிவுட்டின் மணத்தை வெஸ்டர்ன் கிளாஸிக் கலந்து பிரமாதப்படுத்தப் போகிறார் ரஹ்மான் என்று காத்திருந்தார்கள்.
அந்தப் பெரும் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை ரஹ்மான் தன் கட்டுப்பாட்டில் வைத்து இசை கொடுப்பாரா என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில், 1980|ல் அந்த அரங்கில் இசையமைத்த சர்.சைமன் ராட்டலுக்கு வயது இருபத்தைந்துதான்.
ரஹ்மான் வந்தார். இசைக் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார். குழுவினர் இசைக்க ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் ஏதோ ஒன்று நெருடலாகவே இருந்தது. தனது திரைப்பாடல்களின் இசைக் குறிப்புகளை ஆர்க்கெஸ்ட்ரா ஸ்கோராக மாற்றுவதில் ரஹ்மானுக்குப் போதிய தயாரிப்பு இல்லாதது தெளிவாக வெளிப்பட்டது. சற்று நேரம்தான்... ரஹ்மான், இன்னொருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு , அரங்கத்தில் ஒருவராக அமர்ந்து தன் இசையை ரசிக்க ஆரம்பித்தார்.
சன்னமான குரலில் ரஹ்மானே சொன்னார்.
"நான் தவறு செய்து விட்டேன்... அடுத்த முறை நன்றாகப் பயிற்சி செய்து கொண்டு திரும்ப வருகிறேன்..."
ரஹ்மான் தரப்பில் விசாரித்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு ரஹ்மானுடன் செல்ல வேண்டிய நவீன், சிவகுமார் போன்ற பலருக்கு கடைசி நிமிடம் வரை விசா கிடைக்காமல் போனதுதான் பிரச்னை. அதனால் இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் செய்ய முடியாமல் போனது. தனியாக ரஹ்மானே எல்லா வேலைகளையும் சுமக்க வேண்டி இருந்தது. அவகாசம் இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமைந் திருக்கும். மற்றபடி ரஹ்மான் அங்கே சொன்ன வார்த்தைகள் அவரது தன்னடக்கத்துக்கு இன்னொரு உதாரணம். அவ்வளவுதான்!என்றார்கள்.
நன்றி: விகடன்