03-22-2004, 08:26 PM
மட்டக்களப்பில் வெளியாகும் தமிழ்அலை பத்திரிகையில் கடமையாற்ற ஊடகவியலாளர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2004, 1:29
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் அலை பத்திரிகை அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊடகவியலாளர்கள் வெளியில் செல்லமுடியாதபடி தடுத்து வைக்கப்பட்டு, கருணாவுக்கு ஆதரவாகச் செயற்படுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்தவரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் பொறுப்பாளருமான கிரிஷன் என்பவர் மட்டக்களப்பிலிருந்து தப்பியோடி கொழும்பு ஊடாக இந்தியாவுக்குச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் பத்திரிகையில் பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பெண் போராளிகள் பத்துப் பேரும் இவ்வாறு அலுவலகத்தை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ் அலை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, கருணாவுக்கு ஆதரவாக பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் சிலர், தம்மை அங்கிருந்து மீட்பதற்கு உதவுமாறு கொழும்பு தமிழ் ஊடகவியலாளர்களிற்கு இரகசியமாக அறியத்தந்துள்ளதாகவும் நம்பகமாகத் தெரியவந்துள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>