03-22-2004, 12:08 PM
ஆய்த எழுத்து பாடலின் புதுமை!
கவிஞர் வைரமுத்து தன் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதுமையைச் செய்பவர். அதிலும் மணிரத்னம் போன்றோரின் கூட்டணி கிடைத்தால் சும்மா விடுவாரா. ஆயுத எழுத்திலும் ஒரு புதுமையை செய்துள்ளார்.
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணி என்றாலே ஆடியோ பிஸினஸ் 3 கோடி ஆகிவிடும் என்று பேசப்படுவதன் மூலமே இவர்களின் உழைப்பையும், முக்கியத்துவத்தையும் அறியலாம். ஒரு வித எதிர்பார்ப்பும் கூடிவிடும்.
அப்படி ஏற்படும் எதிர்பார்ப்பை சிறிதும் குறைக்காமல் ஆய்தஎழுத்து ஆடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. சின்ன சின்ன ஆசை என்று வரிசையாக ஆசைகளை ரோஜா படத்தில் சொன்ன வைரமுத்து இப்போது இந்த ஆய்தஎழுத்தில் எது காதல், எதுவெல்லாம் காதல் என்று கூறியுள்ளார். "யாக்கை திரி" எனத் தொடங்கும் பாடலில் பெரிதாய் வாக்கியங்கள் ஏதும் இல்லாமல் வார்த்தைகளாகவே
"யாக்கை திரி
காதல் சுடர் அன்பே.....
ஜீவன் நதி
காதல் கடல் நெஞ்சே....
பிறவி பிழை
காதல் திருத்தம் நெஞ்சமே...
இருதயம் கல்
காதல் சிற்பம் அன்பே...
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் துவைதம்
காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்"
என்று எவையெவை காதல் என்பதை தெரிவித்துள்ளார். மேலும் தேசிய கீதம் ரேஞ்சிற்கு ஒரு பாடலையும் எழுதி அசத்தியிருக்கும், சாகித்ய அகாடமி விருது பெற்ற வைரமுத்து நம் தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
நன்றி - சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>