03-22-2004, 11:45 AM
புலிகளுக்கு அம்மா 5 நிபந்தனைகள்
நன்றி வீரகேசரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிவாகை சூடினால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேர்தலில் வெற்றிபெற்றால் புலிகளுடன் நிபந்தனைகளுடனா அல்லது எதுவித நிபந்தனைகளும் இன்றியா பேச்சு நடத்தப்படும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சன்டே ஒப்சேவர் பத்திரிகை க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமது கட்சி புலிகளுடன் ஐந்து நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் விளக்கிக் கூறியுள்ளார்.
* மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்
* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்
* சகல விதமான கொலைகளையும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான சகல விதமான தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.
* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சில விதப்புரைகள் தெளிவு படுத்தப்படவேண்டும். ஏனெனில் அதன் சில பகுதிகள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே அவை குறித்து தெளிவு படுத்தப்படவேண்டியது இன்றியமையாதது.
* அடுத்து உடனடியாகக் கையாளப்படவேண்டியது வடக்குகிழக்கு மாகாண புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளாகும். இவ்விடயத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இது தொடர்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட பிரத்தியேகமான அத்தியாயம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு ஜனாதிபதி தமது நிபந்தனைகளை விளக்கிக்கூறியுள்ளார்.
இதே வேளை, இனப்பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தீர்வுகாணவேண்டுமென பொது மக்கள் விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் முன்னணி, புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பாக இணைந்து செயற்படுமா? என்ற கேள்விக்கு ஜனாதிபதிபதிலளிக்கையில், இந்த விடயத்தில் நான் உங்களுடன் உடன்படுகின்றேன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஐக்கியதேசிய கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து செயற்படவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு எமது கட்சி ஆட்சிபீடம் ஏறினால் நாம் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறினார்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான பேச்சுக்களை அணுகிய விதம் குறித்தும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார். எந்தவிதமான திட்டமும்மின்றி பிரதமர் சமாதான பேச்சுக்களை அணுகியதாக ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளதுடன் அதனால் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக புலிகளின் இராணுவ பலமானது முன்னர் இருந்ததை விட சமாதான பேச்சுக்களை அடுத்து பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.