06-30-2003, 11:04 PM
கொழும்பில் தமிழ் இளைஞர்களின் கைது பற்றி சிறிலங்காவின் உள் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தில் தாங்கள் பாதாள உலகக் கோஷ்டியினரைத்தான் தேடி பிடிப்பதாகக் கூறியிருப்பது கொழும்பில் உள்ள தமிழர்கள் என்ன பாதாள உலகத்தினரோ எனக் கேட்க வைக்கிறது! ஏனேனில் அவரின் கருத்தும் நடவடிக்கையின் மையத்தையும் பார்க்கும் போது அப்படிதான் தோன்றுகின்றது! இது தமிழ் மக்களை இழிவு படுத்தும் ஒரு அமைச்சரின் கூற்று ஆகவே கருதப்படவேண்டும்! அத்துடன் பாதாள உலகத்தினர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தான் வாழ்கின்றனரோ..? அல்லது என்ன நோக்கம் கருதி இப்படியான அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகமோ அல்லது எந்த ஒரு தூதரகமோ கவனம் செலுத்தாது அரசின் அறிக்கைகளுக்கு தலையாட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு மட்டும் உபதேசம் செய்ய முணைவது என்ன அர்த்தத்தில் என்ற கேள்வியும் எழுகிறது! வேதனைகளை அநுபவிக்கும் மக்களுக்குத்தான் சமாதானமே தவிர அணிலாருக்கும் அம்மையாருக்குமல்ல...அப்பாவி சிங்கள தமிழ் மக்களை ஏமாற்றி இவர்கள் போடும் நாடகம் தான் ஏன்.....?! அணிலார் இறுதிப் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பில் கூறியது என்ன இப்பொழுது செய்வது என்ன ....இவரா தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப் போகிறார்...?! இன்று பாதாள கோஷ்டிகளான தமிழர்கள் நாளை என்னவாவார்கள்....?!
இச் செய்தியையும் பாருங்கள்.....
http://thatstamil.com/news/2003/06/30/lanka.html
இவ்விணைப்பு இக் கைதுகள் மற்றைய தேசத்தவர்களால் பார்க்கப்படும் பார்வைக்கும் சிறிலங்கா ஆட்சிப்பீடம் தரும் விளகத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் காட்டத்தரப்படுகிறது...!
இச் செய்தியையும் பாருங்கள்.....
http://thatstamil.com/news/2003/06/30/lanka.html
இவ்விணைப்பு இக் கைதுகள் மற்றைய தேசத்தவர்களால் பார்க்கப்படும் பார்வைக்கும் சிறிலங்கா ஆட்சிப்பீடம் தரும் விளகத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் காட்டத்தரப்படுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

