Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டு
#16
<b>திராவிட், கய்ஃப் அபார ஆட்டம்! இந்தியா வென்றது!!</b>

ராகுல் திராவிட், மொஹம்மது கய்ஃப் இருவரும் இணைந்து தோல்வியை நோக்கி சரிந்து கொண்டிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தியது மட்டுமின்றி, பொறுமையாக ஆடி சற்றும் எதிர்பாராத அபார வெற்றியைப் பெற்றுத் தந்தனர்!

லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களை எடுத்தது.

இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 294 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட சாம்சங் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 5வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த சச்சினையும், 9வது ஓவரில் 20 ரன்கள் எடுத்த லக்ஷ்மணையும், 10வது ஓவரில் 26 ரன்கள் எடுத்த ஷேவக்கையும், 13வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த சௌரவ் கங்குலியையும் இழந்து 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்கின்ற படுமோசமான நிலையில் இருந்தது.

நெருக்கடியான கட்டத்தில் திராவிடுடன் இணைந்த யுவராஜ் சிங் பதற்றம் ஏதுமின்றி சிறப்பாக ஆடி மளமளவென்று ரன்களைக் குவிக்கத் துவங்கினார். 35 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், திராவிடுடன் இணைந்து குவித்த 68 ரன்களின் உதவியால் இந்திய அணி 24வது ஓவரில் 162 ரன்கள் என்கின்ற பாதுகாப்பானை நிலைக்கு உயர்ந்தது.

5 விக்கெட்டை இழந்திருந்த அந்த நிலையிலும் வெற்றிக்குத் தேவையான 132 ரன்களை எடுப்பதற்கு 26 ஓவர்கள் கைவசம் இருந்ததால், அடுத்து ஆட வந்த மொஹம்மது கய்ஃபுடன் இணைந்து மிகப் பொறுமையாக ஆடினார் ராகுல் திராவிட். இவர்கள் இருவரும் 1, 2 என்று ரன்களை எடுத்து அணியின் எண்ணிக்கையை 31வது ஓவரிலேயே 200-ஐ கடக்கச் செய்தனர். திராவிட் மேலும் ஒரு அரை சதத்தை எட்டினார். அதன் பிறகு மொஹம்மது கய்ஃபும் வேகமாக அடித்தாடி ரன்களைக் குவிக்க இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி எவ்வித பதற்றமுமின்றி பாதுகாப்பாக முன்னேறியது.

40வது ஓவரில் 55 பந்துகளில் அரை சதத்தை எட்டிய மொஹம்மது கய்ஃப், அதன் பிறகு அடித்தாடி திராவிடிற்கு இணையான எண்ணிக்கையை எட்டி 45வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்ட உதவினார்.

இந்திய அணி படுதோல்வியைத் தவிர்க்குமா? என்றிருந்த நிலை மாறி, 5 ஓவருக்கு முன்னதாகவே அருமையான வெற்றியை பெற்றது. ராகுல் திராவிட் 92 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 76 ரன்களும், மொஹம்மது கய்ஃப் 77 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 71 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இன்சமாமின் அபார ஆட்டம்!

கராச்சியில் இந்தியா நிர்ணயித்த இமாலய எண்ணிக்கையை நோக்கி பாகிஸ்தான் முன்னேறுவதற்கு சதமடித்து வழிகோலிய இன்சமாம், இன்று 30வது ஓவரில் 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை, சதம் அடித்து 50வது ஓவரின் முடிவில் 293 ரன்களை எட்ட உதவினார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எல்லா திசைகளிலும் அடித்து 121 பந்துகளில் 4 சிக்ஸர்களுடனும், 9 பௌண்டரிகளுடனும் 123 ரன்கள் எடுத்து அருமையாக பாகிஸ்தானின் எண்ணிக்கையை உயர்த்திய இன்சமாம், இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் சிரத்தையின்றி பந்து வீசியதைக் கொண்டு பலமுறை கோபமுற்றார்.

இரு அணிகளின் பந்து வீச்சுமே இன்று பலவீனமாகவும், சீரற்றதாகவும் இருந்தது. இந்திய அணி 30 உபரி ரன்களைக் கொடுத்தது. அதற்கு பதில் கைமாறாக பாகிஸ்தான் அணி 37 உபரி ரன்களைக் கொடுத்தது.

இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக இன்சமாமும், வேகமாக அரை சதத்தை எட்டியதற்காக மொஹம்மது கய்ஃபிற்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
விளையாட்டு - by Mathan - 03-13-2004, 01:11 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:13 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:17 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:12 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:14 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:21 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:28 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:38 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:42 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:48 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-19-2004, 04:26 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 06:58 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 10:31 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 09:51 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 12:41 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:26 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 11:45 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:32 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:34 PM
[No subject] - by Kanani - 03-29-2004, 01:07 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:42 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 04-13-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 04-16-2004, 10:28 AM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:21 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:22 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:32 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:48 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:50 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:51 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 01:21 AM
[No subject] - by ganesh - 05-19-2004, 08:54 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 10:54 PM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:53 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 07:05 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:44 PM
[No subject] - by ganesh - 09-16-2004, 12:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)