03-20-2004, 12:49 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'> சாதனைகளும் சாகஸங்களும் தமிழ் சினிமாவின் தொழில்நுட்பம் ஒரு பார்வை </span>
<img src='http://www.dinamalar.com/2004march14varamalar/17a-sathanaikalum%20sakasangalum.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinamalar.com/2004march14varamalar/17-sathanaikalum%20sakasangalum.jpg' border='0' alt='user posted image'>
ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன் பாடல் காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்குவதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர்.
"நில் கவனி காதலி' என்றொரு படம். ஜெய்சங்கர், பாரதி நடித்த இந்த படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். இதில் நீச்சல்குளத்தில் ஜெய்சங்கரும், பாரதியும் நீச்சலடித்தபடியே பாடுவது போல், "ஜில்லென்று காற்று வந்ததோ, சொல்லென்று கேட்டுக் கொண்டதோ' என்ற காட்சி வரும். அந்தப் பாடலின் போது தண்ணீருக்கு மேலே ஜெய்சங்கரின், பாரதியின் தலைகள் தெரியும். அதே சமயம் தண்ணீருக்கு கீழே அவர்களது உடல் பகுதியின் அசைவுகள் தெரியும். "அண்டர் வாட்டர் போட்டோகிராபி' முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது.
அதற்கு முன் வெளிவந்த படங்களில் தண்ணீருக்கு அடியில்தான் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. "நில் கவனி காதலி'யில் நீரின் மேல்மட்டமும், கீழ்ப்பகுதியும் ஒரே சமயத்தில் வந்தது அன்றைய ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனால் பாரதியின் நீச்சலுடை கவர்ச்சி கூட பெரிதாகப்படவில்லை. அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், இந்தக் காட்சி படமாகும்போது, கண்ணாடி தொட்டி உடைந்து ரத்தக்காயம் பட்டிருக்கிறார்.
சுந்தரம் ஆலோசனையின் பேரில் "அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில் நீச்சல் குளத்தில் பாரதி பாடியபடி நீந்துவது போல் யு.ராஜகோபால் படமாக்கினார் "நில் கவனி காதலி' பாணியில்.
இதே உத்தியைக் கடைப்பிடித்து "கலியுகம்' படத்தில் பிரபு பாதாள சாக்கடையில் சண்டை போடுவதை படமாக்கினார் இயக்குனர் சுபாஷ்.
"பாய்ஸ்' படத்தில் "யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில்' என்ற பாடலில் இதே போல் நீருக்கு மேலும், கீழும் உருவங்கள் இருப்பதை ரவி கே.சந்திரன் படமாக்கியிருக்கிறார்.
சி.வி.ராஜேந்திரன் இயக்கிய முதல் படம் அனுபவம் புதுமை. 1968ல் வெளிவந்தது. அதில், நாயகன்–நாயகியான முத்துராமன்–ராஜஸ்ரீ இருவரும் ஆடிப்பாடுவது போல் "கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்' என்ற பாடல் காட்சி வரும். பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் அது. அந்தப் பாடலில் விதம் விதமான திரைச் சீலைகள் பறந்து செல்லும். உள் அரங்கத்தில் ராட்சத மின் விசிறிகள் மூலம் பறக்க வைத்து படமாக்கியிருக்கின்றனர். அதில் வியப்புக்குரிய விஷயம் முத்துராமனும், ராஜஸ்ரீயும் ஸ்லோ மோஷனில் நடித்திருப்பர்.
ஸ்லோ மோஷனிலிருந்து சட்டென்று வழக்கமான வேகத்திற்கு மாறும். காட்சி உறைந்து மீண்டும் பழைய நிலைக்கு வரும். இது ஒரே ஷாட்டில் வந்தது தான் வியப்பே. இந்த உத்தி "சிங்கிங் இன் தி ரெயின்' என்ற ஆங்கிலப் படத்திலிருந்து கையாண்டது. இந்த படத்தையும் பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.
இப்படி திரைச்சீலைகள் பறந்து செல்ல பாண்டியராஜன்–பல்லவி ஆடிப்பாடும் பாடல் காட்சி – "ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்' படத்தில் (1986ல்) வந்தது. "சிலுசிலுவென சிறுசிறு மழைத்துளி' என்ற பாடல் அது.
டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய இன்னொரு பாடல் காட்சியொன்று "அனுபவம் புதுமை'யில் வரும். முத்துராமன், ராஜஸ்ரீ நடித்த அந்தக் காட்சியில், ராஜஸ்ரீ ஊஞ்சலில் ஆட, டாப் ஆங்கிளில் ஊஞ்சல் கயிற்றின் உச்சியில் இருந்து கேமரா மூலம் ஊஞ்சல் அசைவுகளை படமாக்கியிருப்பர். அப்போது கேமராவும் ஊஞ்சலோடு அசையும்.
இதே பாணியில் தான் "நினைத்தேன் வந்தாய்' படத்தில் ரம்பா ஊஞ்சலில் ஆட, உச்சியிலிருந்து டாப் ஆங்கிளில் இளவரசு படமாக்கியிருந்தார். வித்தியாசமாக இருக்கிறதென்று அது படமாக்கப்பட்ட விதம் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்தது. "வண்ண நிலவே வண்ண நிலவே, வருவது நீ தானா?' என்று விஜய் பாடுவது போன்ற காட்சி அது.
"சிங்கிங் இன் தி ரெயின்' என்றதும் புன்னகை மன்னன், மவுனராகம் ஆகிய படங்கள் நினைவில் வருகின்றன. இரண்டு படங்களுக்கும் வேடிக்கையான ஒரு ஒற்றுமை உண்டு.
"புன்னகை மன்னன்' படத்தில் ரேவதி மழையில் நனைந்தபடி "வான்மேகம் பூப்பூவாய்த் துõவும்' என்று ஆடிப்பாடுவார். "மவுனராகம்' படத்திலும் ரேவதி "ஏதோ மேகம் வந்தது' என்று மழையில் நனைந்தபடி ஆடிப்பாடுவார். இரண்டு படத்திற்கும் இசை இளையராஜா. இரண்டிற்கும் நடன இயக்குனர் சுந்தரம் (பிரபுதேவாவின் அப்பா) "புன்னகை மன்னன்' பாடல் காட்சியில் ரேவதியுடன் சுந்தரமும் நடனமாடி நடித்திருப்பார். ஆங்கிலப் படங்களை காப்பியடிக்கும் போது இப்படி ஒற்றுமைகள் நிகழ்ந்து விடுகின்றன.
"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்' "புன்னகை மன்னன்' "மவுனராகம்' – ஒரே ஆண்டிற்குள் (1987) வந்தவை. ஆனால், 1968ல் வெளிவந்த "அனுபவம் புதுமை'யிலேயே "சிங்கிங் இன் தி ரெயின்' படத்தை முன்னோட்டம் காட்டி விட்டனர். அதாவது, வசதிகள் இல்லாத நேரத்தில், மிட்சல் கேமராவில், கறுப்பு–வெள்ளையில் பி.என்.சுந்தரம் முன் பதிவு செய்து விட்டார்.
இப்படி பாடல் காட்சிகளில் ஒற்றுமை நிகழ்வதற்கு காரணம், கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களே இயக்குகின்றனர். கேமரா கோணங்களை அவர்களே முடிவு செய்கின்றனர். நடனக் காட்சிகள், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பாலசந்தர் பெரும்பாலும் தலையிடுவதில்லை. அதிலெல்லாம் அவருக்கு ஆர்வம் இருப்பதில்லை.
இதில் ஒரு வேடிக்கையான விஷயத்தை நேரிலேயே பார்க்க நேரிட்டது. ராமராஜன் நடித்து, இயக்கிய படம் விவசாயி மகன். அதில் அவருக்கு ஜோடி தேவயானி. இருவரும் சம்பந்தப்பட்ட சோக பாடல் காட்சியொன்றை ஏவி.எம்.,மிலுள்ள "சம்சாரம் அது மின்சாரம்' (அந்தப் படத்திற்காகவே கட்டப்பட்ட வீடு. அதிலிருந்து தொடர்ந்து அந்த வீட்டில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது) செட்டில் படமாக்கினர். ரவீந்தர் ஒளிப்பதிவைக் கையாள – சோகப் பாடல் காட்சியின் கேமரா கோணங்களை நடன இயக்குனர் மஸ்தான் சொல்லிக் கொண்டிருந்ததை தான் வேடிக்கை என்று குறிப்பிட வேண்டியதாயிற்று.
இன்றைக்கு மணிரத்னம், ஷங்கர், பி.வாசு, பாலா என்று வெகு சில இயக்குனர்களே – எல்லா காட்சிகளையும் இயக்குபவர்களாக இருக்கின்றனர். தொழில், தொழில் நுட்பத்தை முழுமையாக கற்றுக் கொண்டு படங்களைச் செய்ய வேண்டும் என்ற போக்கில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாத உத்தி என்று சொல்லலாம்.
இரட்டை வேடக் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் திரையில் அறிமுகம் செய்தவர் ஷங்கர். "இந்தியன்' படத்தில் இரண்டு கமல்ஹாசன்களையும் சர்வ சாதாரணமாக நெருக்கமாகக் காண்பித்தார். "ஜீன்ஸ்' படத்தில் இரண்டு பிரசாந்தையும், இரண்டு நாசர்களையும் – அதாவது இரட்டை வேடக் காட்சிகளை அபாரமாக வெளிப்படுத்தினார். புளுமேட்டிக் முறையில் இரட்டை வேடக் காட்சிகளைப் படமாக்கி, கிராபிக்ஸ் மூலம் அவற்றை இணைத்து விடுகின்றனர்.
அடர்ந்த நீல வண்ணத்தில் அகன்ற திரை அல்லது சுவரை பின்னணியாகக் கொண்டு, அதன் முன்புறம் நடிப்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு மட்டும் "லைட்டிங்' (ஒளியமைப்பு) செய்து அவர்கள் நடிப்பை படமாக்கும்போது பின்னணியில் உள்ளது பதிவானாலும், கம்ப்யூட்டர் திரையில் நீல வண்ண பின்னணியை எளிதில் பிரித்து விடலாம்.
இப்போது நடிப்பவர்களின் அசைவுகள் மட்டுமே மிஞ்சி நிற்கும். அதை படத்தில் எந்த இடத்தில் தேவையோ அங்கு சேர்த்து விடுவர். இதில் இயக்குபவரின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவாளரின் படமாக்கம், கம்ப்யூட்டர் திரையில் கிராபிக்ஸ் முறையைக் கொண்டு வருபவரின் திறமை ஒருங்கிணைய வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் நீல வண்ண திரையின் பிசிறுகள் வெளிச்சம் காட்டி விடும்.
கிராபிக்ஸ் வருவதற்கு முன் புளுமேட்டிக் முறையில் "விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸின் ஒரு பகுதியை படமாக்கினர். விமானத்திலிருந்து கமல்ஹாசனும், லிஸியும் தப்பித்து, தரையில் இறங்குவது போன்ற காட்சி அது. விமானத்திலிருந்து குதித்த பின் இருவரும் தத்தளிப்பது, ஒன்று சேர்வதை புளுமேட்டிக் முறையில் படமாக்கி, ஆப்டிகல் முறையில் நீல வண்ண பின்னணியைப் பிரித்தனர். தமிழில் அது போல் விண்ணில் நடக்கும் காட்சிகளை படமாக்கியது அது முதல் முறை. அதனால் தானோ என்னவோ ஆப்டிகல் முறையில் பிரித்த போது, நீல வண்ண பிசிறுகள் அங்கங்கே தென்பட்டன.
புளுமேட்டிக் முறையில் படமாக்கி, கிராபிக்ஸ் மூலம் இரட்டை வேடக் காட்சிகள் சிறப்பாக அமைந்த இன்னொரு படம் ஆளவந்தான். அதில் இரண்டு கமல்ஹாசன்களும் மோதிக் கொள்ளும் காட்சியில் காட்சியமைப்பும், படத்தொகுப்பும் (எடிட்டிங்), கமலின் நடிப்பும் ஒன்றையொன்றை பிரிக்க முடியாத அற்புதங்கள். இதற்கு முன் இரட்டை வேட படங்களில் இப்படி சண்டைக் காட்சியும், நடிப்பும், படத்தொகுப்பும் மிகச் சிறப்பாக அமைந்தவை, இரண்டு எம்.ஜி.ஆர்., மோதி நடித்த நீரும் நெருப்பும், ஆசை முகம், நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
எம்.ஜி.ஆர்., நடித்ததெல்லாம் மாஸ்க் முறையில், ஒரே பிரேமில் தனித்தனியாகப் படமாக்கி இணைத்ததாகும். [b]அதிக உழைப்பு, மன உளைச்சல், அதிக நேரம் இதெல்லாம் எம்.ஜி.ஆர்., கொடுத்த விலை. </b>அதை "ஆளவந்தான்' மிஞ்சி விட முடியாது என்றாலும், இன்றைய படங்களில் அது குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கிறது.
நன்றி: தினமலர்