03-19-2004, 07:13 PM
<img src='http://www.kumudam.com/kumudam/22-03-04/33t.jpg' border='0' alt='user posted image'>
[size=14]கர்னல் கருணா. இன்று உலகம் முழுவதும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழர். காரணம், சர்வாதிகாரம் மிகுந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எதிர்ப்பது.
பிரபாகரனை எதிர்க்கும் துணிச்சல் கருணாவுக்கு எப்படி வந்தது... யார் இந்த கருணா என்பது பலரின் கேள்வி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் என்கிற ஊரைச் சேர்ந்தவர் கருணா. உண்மையான பெயர் முரளிதரன். இவர் வயது என்ன? என்ன படித்திருக்கிறார்? திருமணமாகிவிட்டதா? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவல்களெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள்.
ஆனால், பிரபாகரனுக்கு எதிராக இவர் நிச்சயம் ஒருநாள் வெகுண்டு எழுவார் என்று எங்களுக்கு ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள் புலிகள் இயக்கத்தினரை உன்னிப்பாகக் கவனித்து வரும் வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்.
காரணம், கருணா ஒரு சாதாரண தமிழ்ப் போராளி அல்ல. அவரது போர்த் திறமையைக் கண்டு பிரபாகரனேகூட அதிசயப்பட்டது உண்டு. கருணா மாதிரி ஒரு கெரில்லா கமாண்டரை எதிர்த்து, இலங்கை ராணுவம் எப்படி வெற்றிபெற முடியும்? என்று சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் ஒருமுறை நொந்துபோய் பேசினாராம். யானையிறவு முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி அறுநூறு இலங்கை படையினரை நிர்மூலமாக்கியது கருணாதான். ஓயாத அலைகள் என்கிற பெயரில் இலங்கை ராணுவம் மீது சரமாரித் தாக்குதல் நடந்தபோதும் அதில் முன்னிலையில் நின்று போர் செய்தவர் கருணா. இவையெல்லாம் கருணாவின் போர்த் திறமைக்குப் புகழ் சேர்த்தன. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கருணாவுக்குத் தெரியாமல் ஒரு எறும்புகூட நகர முடியாதாம்.
புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை இலங்கை படையினர் கைப்பற்றியபோது, புலிகள் அமைப்புக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்பட்டனர். வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து அதிக இளைஞர்களைத் தேடிச் சேர்க்க முடியாது என்பதால், கிழக்குப் பகுதியிலிருந்து பெருமளவில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்த்தார் கருணா. அதன்மூலம் வடக்குப் பகுதி புலிகளுக்கு பலம் சேர்த்தார்.
இருந்தாலும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வருத்தம்... கிழக்குப் பகுதியிலிருந்து வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. கிழக்குப் பகுதியில் தமிழ்ப் போராளிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, வடக்குப் பகுதித் தலைவர்கள் படகு கார்களில் பவனி வந்து கொண்டிருப்பது நியாயமா? விறகு பொறுக்குவதற்கும், தண்ணீர் எடுப்பதற்கும், உயிர் விடுவதற்கும் கிழக்குப் பகுதி தமிழன் வேண்டும். அதன் பலனை அனுபவிப்பவர்கள் வடக்குப் பகுதித் தலைவர்களா? என்கிற ரீதியில் தலைமைக்கு எதிராக இப்போது குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.
கருணா சொல்வதில் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது என்கிறார்கள் சில இலங்கைத் தமிழர்கள். அரசியலிலும் சரி, கலாசாரத் துறையிலும் சரி... யாழ்ப்பாணத்து தமிழர்களின் ஆதிக்கம்தான் அதிகம். புலிகள் அமைப்புக்கு 32 நிர்வாகப் பிரிவுகள் உண்டு. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த அமைப்புகளில் தலைவராக இல்லை. ஆனால், கிழக்குப் பகுதியிலிருந்து தனி ஈழத்துக்காக உயிர் துறந்த போராளிகள் பல ஆயிரக்கணக்கானவர்கள். கிழக்குப் பகுதியில் இப்போது பதினேழாயிரம் விதவைகள் இருக்கிறார்களாம். கிழக்குப் பகுதி மக்களின் சந்தோஷமான எதிர்காலத்திற்கு புலிகளின் தலைமை என்ன உத்தரவாதம் கொடுக்கப்போகிறது என்பதுதான் கருணாவின் கேள்வி.
கருணாவின் மனதில் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்துவிட்டது என்பது தெரிந்தவுடனே அவரை சமாதானம் செய்யும் வேலையில் புலித் தலைமை இறங்கியதாகவும் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தனது இடது பக்கத்தில் கருணாவை உட்கார வைத்தார் பிரபாகரன். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கருணாவையும் அனுப்பி வைத்தார்.
இந்த நடவடிக்கைகள் கருணாவை திருப்திப்படுத்தவில்லை. ஈழத் தமிழர்களுக்கென சுயாட்சி உரிமை வழங்கப்படும்போது, கிழக்குப் பகுதி தனித்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், நார்வே நாட்டினர் மேற்கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கிழக்குப் பகுதியின் சார்பில் தன்னையும் அழைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலித் தலைமை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரபாகரனுக்கு எதிராக இப்போது போர்க்குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.
போர்க்குரல் எழுப்பியது பெரிய துணிச்சல் என்பதைவிட, இனி பிரபாகரனின் கோபத்தை எப்படி கருணா சமாளிக்கப் போகிறார் என்பது கேள்விக்குறி.
அவரை மன்னிக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னபோதும் அவர் மன்னிப்பு தேவையில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆனால் கண்டிப்பாய், பிரபாகரனை சார்ந்துள்ள விடுதலைப்புலிகள் கருணாவைக் கொன்று விடுவார்கள் என்றே யாழ்ப்பாணத்து மக்கள் சொல்கிறார்கள்.
மாத்தையா, கிட்டு போன்ற விடுதலைப்புலி தளபதிகளுக்கு ஏற்பட்ட கதிதான் கருணாவுக்கும் என்கிறார்கள்.
பிரச்னை துவங்கியதிலிருந்து பத்திரிகையாளர்களிடம் பேசாமலிருந்த கருணா, முதன்முறையாக பி.பி.சி. நிருபருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், பிரபாகரன் போருக்கு ஆயத்தம் செய்கிறார்.
அதற்காக கிழக்குப் பகுதி தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்த நினைக்கிறார். அமைதிக் காலத்திலும் போர் செய்ய கிழக்குப் பகுதி இளைஞர்கள்தான் கிடைத்தார்களா? என்று ஆவேசமாய் கூறியிருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, புலிகள் அமைப்பில் பிளவு ஏற்படுத்தி இனப்போரை பலவீனமாக்க சில சிங்களத் தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கருணாவுக்கு பதவி ஆசை காட்டிவிட்டார்கள். அந்த ஆசை நிறைவேறாது என்பதைப் போகப் போகத் தெரிந்துகொள்வார் என்று புலிகள் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஒரு ரகசிய திட்டம் பற்றியும் சிங்களர் மத்தியில் வேறுவிதமாக கிசுகிசுக்கப்படுகிறது. இனப் பிரச்னை தொடர்பாக ஒரு அமைதித் தீர்வு ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு முக்கிய சிங்களத் தலைவரின் கதையை எப்படியாவது முடித்துவிட வேண்டும். யார் அதைச் செய்வது? புலிகள் அமைப்பில் இரண்டு கோஷ்டிகள் இருப்பதுபோல ஒரு நாடகம் நடத்த வேண்டும். சிங்களத் தலைவரின் கதையை முடித்த பிறகு, பிரபாகரன்தான் அதைச் செய்தார் என்று கருணாவும், கருணாதான் அதைச் செய்தார் என்று பிரபாகரனும் சொல்லி குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்பதுதான் அந்த ரகசிய திட்டமாம்!
[b]எது எப்படியிருந்தாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால்தான் அவர்களுக்கு வாழ்வு என்பதை இருதரப்பினரும் புரிந்துகொண்டால் சரி
நன்றி - குமுதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>