Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டு
#14
ஹமீத், ரசாக் அபார ஆட்டம்! பாகிஸ்தான் வென்றது!

இந்திய அணியின் முதல் 3 ஆட்டக்காரர்களை துவக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்த ஷப்பீர் அகமதுவின் அபார பந்து வீச்சும், துவக்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதின் அற்புத ஆட்டமும், அப்துல் ரசாக்கின் அதிரடியும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி தேடித் தந்தன!

சாம்சங் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் பெஷாவரில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பூவா - தலையா வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் களமிறக்கி 244 ரன்களுக்கு மட்டுப்படுத்தி, 47.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் இந்தத் தொடரில் 2-1 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைக்கு வந்துள்ளது.

சீராக, சிறப்பாக ஆட்டக்களத்தின் சாதகத் தன்மையை முழுமையாக பயன்படுத்தி பாகிஸ்தான் அணி பந்து வீசியது. மாறாக, இர்ஃபான் பத்தான், லக்ஷ்மிபதி பாலாஜி ஆகிய இருவர் தவிர இந்தியாவின் மற்ற பந்து வீச்சாளர்கள் தாறுமாறாக பந்து வீசி பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கித் தந்தனர் என்றே கூறவேண்டும்.

எதற்காக லெக் ஸ்டம்பிற்கு வெளியே ஜாஹீர் கான் பந்து வீசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வைட் போடுவது கங்குலிக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. தன்னிடம் உள்ள பந்து வீச்சாளர்களின் திறனை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அணியை மட்டுப்படுத்த கங்குலி பட்ட சிரமம் உலகின் எந்த கிரிக்கெட் அணித் தலைவரும் பட்டிருக்க முடியாது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தாலும், கங்குலி, திராவிட் இணையினால் நிலைப்பெற்று பிறகு யுவராஜ் சிங், பாலாஜி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் மரியாதைக்குரிய எண்ணிக்கையை எட்டியது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் துவக்கத்தில் பாலாஜியும், பத்தானும் அருமையாக பந்து வீசி அந்த அணியை நன்றாகவே கட்டுப்படுத்தினர். ஆனால், அவர்களுடைய பந்து வீச்சு முடிந்ததும் இந்திய அணியின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர் என்று கருதப்படும் ஜாஹீர் கான் தனது 3வது ஓவரில் 14 ரன்களைக் கொடுத்தார், தனது 6வது ஓவரில் 12 ரன்களைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் சச்சினின் துணையுடன் இடைப்பட்ட ஓவர்களை தானும் வீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தும் முயற்சியில் கங்குலி ஈடுபட்டார். ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டை பெற்றுத் தரவில்லை.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அப்துல் ரசாக்கும், மொய்ன் கானும் மிகத் திறமையாக ஆடி 7வது விக்கெட்டிற்கு குவித்த 74 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் அணி சிரமமின்றி வென்றது.

துவக்க ஆட்டக்காரராககள மிறங்கிய பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் யாசிர் ஹமீதின் அற்புத ஆட்டமே அந்த அணி வெற்றி பெறுவதற்கு பலமான அடித்தளத்தை அமைத்துத் தந்தது. 98 ரன்களில் ஆட்டமிழந்த ஹமீதின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு பக்கம் அனுபமிக்க மூத்த ஆட்டக்காரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்த போது ஹமீத் சற்றும் மனம் தளராமல் எச்சரிக்கையாக ஆடி, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன்களை குவித்து, அந்த அணி 173 ரன்களை எட்டிய போது 6வது ஆட்டக்காரராக ஆட்டமிழந்தார். அவரே இன்றைய ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
விளையாட்டு - by Mathan - 03-13-2004, 01:11 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:13 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:17 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:12 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:14 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:21 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:28 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:38 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:42 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:48 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-19-2004, 04:26 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 06:58 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 10:31 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 09:51 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 12:41 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:26 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 11:45 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:32 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:34 PM
[No subject] - by Kanani - 03-29-2004, 01:07 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:42 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 04-13-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 04-16-2004, 10:28 AM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:21 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:22 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:32 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:48 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:50 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:51 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 01:21 AM
[No subject] - by ganesh - 05-19-2004, 08:54 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 10:54 PM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:53 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 07:05 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:44 PM
[No subject] - by ganesh - 09-16-2004, 12:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)