03-19-2004, 06:53 PM
<img src='http://www.virakesari.lk/20040318/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
வன்னி ஏன் மௌனமாக இருக்கிறது.
பறுவதம் பாட்டி: பிளவின் பின் விளைவுகள் பற்றி ஆழமாக சிந்தித்து இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். தென் கிழக்கு தமிழீழப் படையையும், வடக்கு தமிழ் ஈழப் படையையும் மோதவிட்டு பவனிபார்க்க தென்னிலங்கை தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்கான சகுனி வேலைகளும் திரைமறைவில் நடக்கின்றன. கருணாபிரபா மோதல் தொடங்கினால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை மேலும் ஒரு பத்து வருடங்களுக்கு தள்ளிப்போடலாம் என்று சில சிங்களத்தலைமைகள் உள்ளூர நினைக்காமலும் இல்லை. இதனை மறந்து நீங்கள் வன்னி ஏன் மௌனித்து இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.
சலீம் நானா: வன்னியின் எந்தப் படையெடுப்பையும் சமாளிக்க கருணா தயாராகி விட்டார். அதற்கு அமைவாக தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரபாகரனின் படைகள் ஊடுருவுவதை தடுக்கு முகமாக தனது படைகளை நுழைவாயில்களுக்கு பெருமளவு அனுப்பி குவித்திருக்கிறார். கடலாலோ, தரையாலோ வன்னிப் படைகள் வரலாம் என கருணா எதிர்பார்க்கிறார். இதன் காரணமாக மட்டக்களப்பு மீனவரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க போக வேண்டாமென்று கூட கேட்டிருக்கிறார்.
மூதூர் வழியாக வன்னிக்கு விசுவாசமான சொர்ணம் தலைமையில் 150 பேர் வந்து நாட்கணக்காக காத்திருக்கிறார்கள் என்பது கருணாவுக்கு தெரியும். இதனால் தான் இந்த தற்பாதுகாப்பு ஏற்பாடு.
பறுவதம்பாட்டி: நான் சொன்னது சரி. இருதரப்பையும் மோதவிடுவதற்கு தென்பகுதியில் இப்படியான கதைகள் பரப்பி விடப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு எதுவும் இல்லை. கருணா தரப்பிலிருந்து போராளிகள் ஐம்பது அறுபது என்று தினமும் வன்னிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் கருணாவின் படைபலம் குறைந்து வருகிறது. என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்று வன்னி மௌனம் சாதிக்கிறது.
பண்டா ஐயா: உளவுப் படையொன்றையும் சினைப்பர் அணியொன்றையும் வன்னித் தலைமை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் எங்கடை ஆட்கள் பேசிவருகிறார்கள். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு லட்சம் பொது மக்களும் இருக்கிறார்கள். ஆயுத மோதல் மூண்டால் இவர்கள் கதி என்னாவது? எனவே தம்பி இந்த விஷயத்தை பக்குவமாகத்தான் கையாள வேண்டும். அப்பொழுதுதான் இரத்தக்களரி ஏற்படுவதை தடுக்கலாம்.
பறுவதம் பாட்டி: கலகம் பிறந்திருக்கிறது. நியாயம் வெளிவரத்தானே வேண்டும்.
சலீம் நானா: அது சரி. ரி.என்.ஏ. வேட்பாளர்களை கருணாவின் ஆட்கள் அழைத்து என்ன பேசினார்களாம்.
பறுவதம்பாட்டி: கிழக்கிலிருந்து ஆறு ரி.என்.ஏ.எம்.பி.க்களாவது வர வேண்டும். அதற்கு அமைய உங்கள் பிரசாரங்களை செய்யுங்கள். எங்கள் சப்போட் உண்டு என்று சொன்னதாக கேள்வி.
சலீம் நானா: முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கமுடியாது.
அமைச்சர் பதவி தர முன்வந்தால் அதனை சாதகமாக அணுக வேண்டும். இப்படி எல்லாம் பேசியதாக கேள்வி.
பறுவதம் பாட்டி: நுஆ வைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியுடன்அம்பாறை நேரு நடத்திய சந்திப்பை அடிப்படையாக வைத்து சிலர் ஜனாதிபதியின் கட்சிக்கு கருணா ஆதரவு என்ற செய்தி பரவியதால் உருவான கட்டுக்கதை இது.
பண்டா ஐயா: இங்கு மரணித்த இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவாக நினைவுத் தூபியொன்றை இலங்கை ராணுவம் இலங்கையில் எழுப்பப்போவதாக பெரியகதையடிபடுகிறது. விகாரமகாதேவி பூங்காவில் நினைவு தூபி ஒன்று கட்டப்பட்டு வருடா வருடம் ஒருநாள் ராணுவம் தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்த இரண்டாம் உலக யுத்த நினைவு தூபிக்கு பக்கத்திலேதான் இந்த நினைவு தூபியும் கட்டப்படவிருக்கிறது. இதற்கான அத்திவாரம் அடுத்த மாதம் போடப்படும். உலகம் போகிற போக்கை பாருங்கோ?
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>