03-19-2004, 06:40 PM
தொடர்புக்கு கருணா பிரயத்தனம் ஜனாதிபதி பதிலளிக்கவேயில்லை
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா தனது கட்சி யுடன் தொடர்புகொள்ள பலமுறை முயற்சி எடுத்ததாகவும் ஆனால், தான் அதற்குப் பதிலளிக்கவில்லையெனவும் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.யின் கொழும்பு செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனுக்கு நேற்று வியா ழக்கிழமை பேட்டிýயளித்துள்ள அவர், விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு சமாதான முயற்சிகளை மேலும் சிக்கலாக்குமெனவும் தெரிவித்துள்ளார். இச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பினுள் ஏற்பட்டுள்ள இப்பிளவு அவ்வமைப் பினுள் ஒரு யுத்தத்தில் போய் முடிýயுமென்றே நான் நினைக்கிறேன். ஆனால், நீண்டகால நோக்கில் பார்த்தால் விடுதலைப் புலிகள் அமைப் பிலிருந்து கருணா விலகியிருப்பது அவ்வமைப்பைப் பலவீனப்படுத்தி விடும்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் இலங்கையில் அமைய வுள்ள அரசு விடுதலைப் புலிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேலுப்பிள்ளை பிரபாகரனுடனேயே பேசியாக வேண்டும். அதேநேரம், அந்த அரசு புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டிýருக்கும் கேணல் கருணாவையும் எப்படிý அணுகலாம் என்ற வழிமுறையையும் கண்டறிய வேண்டும்.
மேலும், கேணல் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் என்னை அணுக பல முறை முயற்சி செய்தார். ஆனால், திரைமறைவு பேரங்கள் எவற்றையும் விரும்பும் வழக்கம் எனக்கில்லை.
இதேவேளை, எனது }லங்கா சுதந்திரக் கட்சிக்கும், புலிகளின் வன்னித் தலைமைக்குமிடையே பல்வேறு தொடர்புகள் இப்போதும் இருந்து வரு கின்றன. ஆனால், அவை பற்றி இப்போது விரிவாகக் கூýற முடிýயாது.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள தேர்தலில் எம்முடைய கட்சி வெற்றியீட்டி ýனால் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், இப் போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்பேச்சுவார்த்தையை நடத்திய விதத்தைவிட தொழில்முறை திறத்துடன் அப்பேச்சுவார்த்தை நடத்தப் படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சில சகாக்களுடன் இரகசியமாக ஆலோசனைகளைச் செய்துகொண்டு அப்பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை நடத்தியவிதம் இலங்கை யின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் அமைந்திருந்தது. இதையடுத்து அவ் வமைச்சை நான் கையேற்ற போதிலும் அதன்பின் நான் எடுக்க திட்ட மிட்டிýருந்த நடவடிýக்கைகளுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கித் தரவில்லை. இதன் காரணமாக அவரது பதவியையும் பறிக்க வேண்டிýய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
எனினும் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை. அப்படிýச் செய்து அனைத்து அமைச்சரவைப் பொறுப்புகளையும் கையகப்படுத்தி பைத்தியக் காரத்தனமாக நடந்து கொள்ள நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராய்ட்டர் செய்திச் சேவைக்கும் பேட்டிýயளித்துள்ளார். அப்பேட்டிýயில் அவர், விடு தலைப் புலிகள் அமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு ஆபத்தான நிலையாகும். ஆனால், இந்த நிலைமை எப்படிý மாற்றமடைகிறது என்பதை நாம் அவதானித்துக் கொண்டிýருக்கிறோம்.
இதேவேளை, புலிகள் அமைப்பில் ஏற்பட்டுள்ள இப்பிளவு அவர்கள் முன் னிருந்த வலுவான நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது. இது அவர்களைப் பேச்சுவார்த்தையின் பால் மேலும் நாட்டங்கொள்ள வைக்கும் என நம்புகிறேன்.
இதேவேளை, எதிர்கால பேச்சுவார்த்தையின் போது எப்படிý விடுதலைப் புலிகளின் இரு பிரிவினரையும் கையாள்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்வி க்கு பதிலளிக்க மறுத்த அவர், இது குறித்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் முடிýவடைந்து புலிகளின் பிரதான பிரிவுடன் சமாதானப் பேச்சுக் கள் மீண்டும் ஆரம்பமாகும் போதே முடிýவு செய்யப்படும் எனவும் தெரி வித்தார்.
இதேவேளை, தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தக் கட்சியுமே அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற முடிýயா தெனத் தெரிவித்த அவர், எனினும் தனது மக்கள் சுதந்திர முன்னணியே இத் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>