03-19-2004, 03:26 AM
<b>குறுக்குவழிகள்-39</b>
<b>சுயமாக இயங்கும் புறோகிறாம்களை நிறுத்துதல்</b>
விண்டோஸ் இயங்கு தளம் பூட் ஆகும்போதே பல புறோகிறாம்கள் சுயமாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் பூட் ஆகும்வேகம் தாமதமடைகின்றது என்பதும் இவைகளில் தேவையற்றவைகளை நிறுத்தினால் வேகம் அதிகரிக்கும் என்பதும் பலரால் அறியப்பட்ட ஒன்றாகும்.
விண்டோஸ் 98 மற்றும் XP பாவிப்பவர்கள் கிளிக்பண்ணவும் Start-->Run--> (type)msconfig-->ok. இப்போது வரும் சட்டத்தில் "Startup" tab ஐ கிளிக்செய்தால் வரும் லிஸ்ற் இல் இந்த புறோகிறாம்கள் காணப்படும். விண்டோஸ் 2000 பாவிப்பவர்கள் right click My Computer--> Manage--> Services and applications--> (Double click) Services. இந்த சேவைகள் பட்டியல்தான் அந்த புறோகிறாம்கள்.
இப்புறோகிறாம்கள் கம்பியூட்டரில் பல விதமான வேலைகள் (Programing, Fax Service, Networking. Internet Surfing, Personal) செய்பவர்களுக்காக, அவர்களின் தேவைகருதி, ஒட்டுமொத்தமாக இயங்க ஆரம்பிக்கின்றன. எல்லாருக்கும் எல்லாம் தேவையற்றது. எனவே எமக்கு தேவையற்றவைகளை நிறுத்தி, பின் தேவையேற்படின் இயக்கலாமல்லவா? இதற்கு இப்புறோகிறாம்கள் ஒவ்வொன்றும் பற்றிய முழு அறிவும் நமக்கு தேவையல்லவா?. எது தளம் இயங்கத்தேவை? எது அநாவசியமானது?. எது பல புறோகிறாம்களுக்கு பொதுவானது?
ஓரு வெப்தளம் இவை பற்றிய முழு விபரங்களையும், A யிலிருந்து Z வரை வரிசைபடுத்தி பட்டியலிட்டுள்ளது. அந்த புறோகிறாம்களின் விபரத்தையும் பார்வையிட்டு, அதன் அறிவுத்துணையுடன் தேவையற்ற புறோகிறாம்களை நிறுத்தி (அகற்றியல்ல) நமது கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்கலாம். கீழ்காணும் தளத்திற்கு சென்று Task List என்ற பட்டனை கிளிக் பண்ணவும். மிகவும் பயனுள்ளது என பலரால் புகழ்ப்படும் விபரங்கள் இதில் அடங்கியுள்ளன
http://www.answersthatwork.com/