03-19-2004, 01:06 AM
தமிழின விரோதிகளின் நோக்கத்தை நிறைவு செய்ய முயலும் கருணா!
கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டுவெளியேற முயற்சித்தது ஏன்? கருணா தற்பொழுது கூறுவதுதான் என்ன? கடந்த இருவாரங்களாக கருணா மக்களுக்கு வெளிப்படுத்துபவை என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று பதில் தேடக் கூடியதான தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. கடந்த இருவாரங்களில் கருணா வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களில் இருந்து இதற்கான பதிலைக் கண்டுகொள்ள முடியும்.
கடந்த மூன்றாம் திகதி "அசோசியேட்டஸ் பிரஸ்" ஊடாக தனது பிரிவினையை அறிவிப்புச்செய்த கருணாஇ அதற்கான காரணமாக மட்டு-அம்பாறை மாவட்டங்கள் புலிகளின் தலைமையால் புறந்தள்ளப்படுவதாகவும்இ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் வடபகுதியினரே முழுமையாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதன் காரணமாகத்தான் தனித்தியங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டதாக வெளியாகிய பகிரங்கக் கடிதம் ஒன்றில்இ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் தான் தனித்துச்செயற்பட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான்இ காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்இ நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படுவார்களேயானால்இ தான் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கருணாவின் இவ்வாரம்ப அறிவிப்புக்கள்இ ஒருபுறத்தில் தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பவையாகவும்இ மறுபுறத்தில் மட்டு- அம்பாறை மாவட்டங்களில் தனக்குத் தானே முடிசூடிக்கொள்ளும் நடவடிக்கைக்கென மேற்கொள்ளப்பட்ட முன்னோடி நடவடிக்கைகளாகவும் இருந்தன. இதற்கு அப்பால்இ இவ் அறிவிப்புக்களில் தர்க்கமோ அர்த்தப்பாடோ அன்றி நடைமுறைச் சாத்தியப்பாடானவையாகவே இருக்கவில்லை.
ஏனெனில் விடுதலைப் புலிகள் தலைமை இந்த வகையிலான குழப்பம்இ மற்றும் பிளவு நடவடிக்கைகளுக்கு எப்பொழுதுமே இடமளித்தது கிடையாது. எந்த நெருக்கடிகளையும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் சவாலாக எடுத்துக்கொண்டுள்ளாரே ஒழிய-மிரட்டல்கள்இ அச்சுறுத்தல்கள் என்பவற்றிற்கு பணிந்துபோனதில்லை. மறுபுறமாக நியாயம்இ உண்மைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையிலேயே தலைவர் பிரபாகரன் அவர்களை அணுகுதல் முடியும்.
அடுத்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் நிபந்தனைகள்இ மிரட்டல்கள் என்பதற்கு எவ்வேளையிலும் பணிந்துபோனது கிடையாது. இதனை வரலாறே கூறும் உலக வல்லரசாகட்டும்இ பிராந்திய வல்லரசாகட்டும் சிறிலங்கா அரசாகட்டும் சரி நிபந்தனை என்ற பெயரில் விடுதலைப்புலிகளைப் பணியவைக்க முடியாது. குறிப்பாகச் சொல்வதானால் நிபந்தனை என்பது வெளிப்படுத்தப்பட்டாலே அது தொடர்பான விடயங்கள் விடுதலைப் புலிகளால் ஆராயப்படமாட்டாது என்பதே கடந்தகால அனுபவமாகும்.
இது கருணாவிற்குத் தெரியாத விடயமுமல்ல. ஆனால் கருணா இத்தகைய குற்றச்சாட்டுக்களையும்இ நிபந்தனைகளையும் முன்வைத்தமையானதுஇ விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து இயங்குவதற்கான அணுகுமுறைக்கானதல்ல. தனது பிரிவினைக்கு நியாயம் கற்பிப்பதற்கானதே ஆகும். அதாவது மட்டு-அம்பாறை மாவட்டங்களுக்கு தனக்குத்தானே முடிசூடிக் கொள்வதற்கான செயற்பாடே ஆகும்.
ஆனால் கருணா விடுதலைப் புலிகள் மீதும் தமிழீழத் தேசியத் தலைமை மீதும் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் என் பவை அர்த்தமற்றவை என்பதும்- கருணாவின் நோக்கம் எத்தகையது- அதாவது கருணா பிரிந்து செல்வதற்கான நோக்கம் என்ன என்பது மிக விரைவிலேயே வெளிவந்துவிட்டது. அதாவது கருணா தனது முடிவை அறிவித்து இரண்டுவார காலத்திற்குள் வெளிவந்துவிட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் பிராந்திய hPதியிலான பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்பதற்குத் தமிழீழத் தேசியத்தலைவரினால் வழங்கப்பட்ட பொறுப்புக்களில் அதாவது தமிழீழ பிரதேச நிர்வாகத்தில் தமிழீழப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதியினரும் உள்ளனர். இதற்கும் அப்பால் மட்டு-அம்பாறை மாவட்டத்தின் கீழ் தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள்இ தளபதிகள் கருணாவின் நடவடிக்கையை அடுத்து வன்னிக்குத் திரும்பியுள்ளமையே கருணாவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் மீது மட்டு- அம்பாறை போரளிகள்இ மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தப் போதுமானதாகும்.
ஆனால்இ இவற்றிற்கும் அப்பால் ஏன் மேலாக என்று கூறுமளவிற்கு கருணா முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கும்இ விடுத்த கோரிக்கைக்கும் மாறானதாகவும்இ அவரது கடந்த 20 வருடகால நடவடிக்கைக்கு மாறாகவும் அவர் தற்பொழுது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே உள்ளன.
தமிழீழத் தேசியத்தலைமைக்கு எதிரான பிரதேசவாதத்தை கிளப்பிய கருணா இறுதியாக ~இந்து| பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது நோக்கங்கள்இ குறிக்கோள்கள்இ ஆற்றல் என சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவை கருணா எந்த நோக்கத்திற்காகஇ யாருடைய ஏவலராகச் செயற்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த போதுமானதாகும்.
இந்து| பத்திரிகைக்கு கருணா அளித்த பேட்டியில் சில ஆச்சரியமான தகவல்களும் இருக்கத்தான் செய்தன.
01) தான் (கருணா) இல்லாது விட்டால் விடுதலைப் புலிகளால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முடிந்தாலும் அவர்களால் மரபு ரீதியிலான சண்டைகளை மேற்கொள்ள முடியாது. ஒரு கெரில்லா இயக்கமாகவே செயற்பட முடியும்.
02) விடுதலைப் புலிகளுக்கு 75 சதவீத பலத்தையும்இ படையணியையும் நாமே கொடுத்துள்ளோம். இராணுவ தொழில்நுட்பத்தையும் வழங்கினோம்.
03) தமிழர் தாயகம் என்ற கோட்பாடு பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வன்னித் தலைவர்கள் தாங்கள் படித்தவர்கள் என்ற கர்வத்தில் உள்ளார்கள்.
04) போருக்கு முன்னர் இங்கே தமிழர்கள்இ சிங்களவர்கள்இ முஸ்லிம்கள் இடையே நல்லுறவு இருந்தது. திட்டமிட்ட குடியேற்றம் ஒரு பிரச்சினையைத் தவிர கிழக்கில் பெரிதாகப் பிரச்சினை எதுவும் இல்லை.
05) தனிநாடு என்பது சாத்தியமில்லை.
இத்தகைய கருணாவின் கூற்றுக்கள்இ கருணா எதன் அடிப்படையில் செயற்படுகின்றார் என்பதைத் தெளிவாகவே வெளிப்படுத்தப் போதுமானவையாகும்.
அதாவது கருணா "இந்து" விற்கு வழங்கிய பேட்டியின்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களின் கூற்றுக்களையும்இ அவர்களின் நோக்கங்களையும் தெளிவாகவே பிரதிபலிப்பவராகிவிட்டார். விடுதலைப் புலிகளுக்கும்இ தமிழீழ விடுதலைப் போராட்;டத்திற்கும் எதிரான சக்திகளின் அடிப்படைக் குறிக்கோள்கள் இரண்டு.
01) தமிழர் தாயகத்தை சிதைத்தல்.
02) விடுதலைப் புலிகளை இராணுவ hPதியில் பலவீனப்படுத்துதல்.
தமது இக்குறிக்கோளை எட்டுவதற்கான பாதையில் கருணாவை அணுகிய போது-அன்றித் துண்டியபோதுஇ அவர்கள் கருணாவின் மனதில் ஊட்டக் கூடியதாக இருந்தது பிரதேசவாதமே. ஏற்கனவே தமிழ் மக்களின் தேசிய ஒருமைப்பாட்டையும்இ ஒற்றுமையையும் குறைப்பதற்காக கையாளப்பட்ட வழிமுறைதான் இது.
குறிப்பாகஇ கடந்த காலத்தில் யாழ். குடாநாட்டில் கூர்மை பெற்றிருந்த சாதியத்தை கையிலெடுக்க முற்பட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது போல்இ மட்டு-அம்பாறைப் பகுதியில் பிரதேசவாதத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்இ தற்பொழுது பலமான சக்திகள் இவ்விடயத்தில் அக்கறை காட்டின.
இதேவேளை கருணா வடக்கில் போரிட்டதன் மூலம் தனது ஆற்றல் பற்றியதும்இ இராணுவ திறன் பற்றியும் அதீத மதிப்பீட்டிற்கும்இ தற்பெருமைக்கும் உட்பட்டிருந்த அதேவேளைஇ தமிழீழத் தேசியத் தலைமையினால் வழங்கப்பெற்றிருந்த அதிகாரங்கள்இ ஆயுத தளபாடங்கள் என்பனவும் கருணா தன்னை ஒரு "பெருந்தலைவர்" என்ற அளவிற்கு இறுமாப்புக் கொள்ள வைத்திருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முற்பட்டிருந்த சக்திகள் கருணாவின் தற்பெருமை மேலும் வளரத் தூபமிட்டன. மட்டு-அம்பாறைப் பிரதேசத்தின் முடிசூடா மன்னராகலாம் என அவருக்கு ஆசையூட்டின. இதற்கு தமது ஒத்துழைப்பும் வழங்கலாம் என நம்பிக்கையூட்டின.
இந்நிலையில்தான் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்பட முடிவும் செய்தார். ஆனால் கருணாவின் இம்முடிவிற்குத் து}பமிட்ட இச்சக்திகளின் நோக்கமானது கருணாவின் வெளியேற்றமானது தமிழர் தேசியத்தைச் சிதைப்பதாகவும்இ விடுதலைப் புலிகளின் பலத்தைச் சிதறடிப்பதாகவும் இருக்கும் என எண்ணினர்.
இவர்கள் ஊட்டிய நம்பிக்கையும் கருணாவின் தன்னைப் பற்றியதான அதீத மதிப்பீடும் சேர்ந்தே கருணா ~இந்து|க்குத் தெரிவித்த கருத்துக்களாகின. அதாவது தமிழர் தாயகம் சிதைக்கப்படுவது பற்றிக் கவலையில்லை. தமிழீழ தனியரசு என்பது சாத்தியமில்லை என்பது போன்ற அறிவிப்புக்களாகும்.
இதேவேளை கருணாவிற்கு பிரதேசவாதத்தை ஊட்டியவர்கள் அன்றி அவரிடம் அடிப்படையாகவே இருந்த பிரதேசவாத உணர்வை வளர்த்தெடுத்தவர்கள்இ தற்போதைய பிரச்சினைகள் யாவற்றிற்கும் வடக்கே காரணம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்பட்டுள்ளனர். ஆனால்இ இனப்பிரச்சினையின் தோற்றுவாயானது மொழிப் பிரச்சினையாக உருப்பெற்றது எனினும் இன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டமுடியாத பெரும் பிரச்சினையாக இருப்பது குடியேற்றங்கள் என்ற hPதியில் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையேயாகும். இனப்பிரச்சினையைப் பொறுத்து அனைத்துப் பிரச்சினைகளையும் விட கூர்ப்புப் பெற்ற பிரச்சினையாகவே அது உள்ளது.
ஆனால்இ இதனைக் கருணா ஒரு பிரச்சினை மட்டுமே எனக் கூறி அதனை ஒரு சிறு பிரச்சினையாக்கிவிட்டுள்ளார். ஆனால்இ கருணா ஒன்றை நினைவிற்கொள்ள இல்லைஇ அவருக்குப் பிரதேசவாதத்தை ஊட்டியவர்கள் திட்டமிட்டு ஞாபகப்படுத்தாமல் போன விடயமும் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றிற்கு இடையூறாக உள்ளதே குடியேற்றம்தான் என்பதையே. அதிலும் குறிப்பாகஇ அம்பாறை மாவட்டத்திலுள்ள குடியேற்றம் தொடர்பான பிரச்சினையுமேயாகும். அவ்வாறு இல்லாது கருணா தமிழ்த்தேசியத்தை சிதைக்க முற்பட்டது போன்று அம்பாறையும் பேரினவாத சக்திகளிடம் தாரைவார்க்க முன்வந்து விட்டாரோ எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது. தமிழ்த்தேசியவாதம் குறித்து கவலை கொள்ளாத கருணா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் குறித்து கவலை கொள்வார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
மாறாக கவலை கொள்பவராக இருப்பின் கருணா சிங்களக் குடியேற்றப் பிரச்சினை இவ்வளவு சாதரண பிரச்சினை ஒன்றின் மட்டத்திற்குக் கீழ் இறங்கியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாகஇ கல்லோயா திட்டமே முதல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டமாக உருவாக்கப்பட்டதும்இ அதுவே பின்னர் அம்பாறை மாவட்டம் உருவாவதற்குக் காரணம் என்பதையும் தனது சுயநலத்திற்காக கருணா மறந்து போனமை மோசடித்தனமானதாகும்.
இவை ஒருபுறமிருக்க ~இந்து| பேட்டியில் தற்பெருமை பேசுவதில் கருணா முன்னாள் உகண்டா சனாதிபதி இடியமீன் போன்று பேசியுள்ளமை ஒருவகையில் வேடிக்கையாகவும்இ ஒருபுறத்தில் வருத்தம் தருவதாகவும் உள்ளது. ஏனெனில்இ அவரது பேட்டியில் ஒருபுறத்தில் தற்பெருமையும்இ மறுபுறத்தில் முரண்பாடும் காணப்படுகிறது.
உகண்டாவின் சனாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் இருந்த இடியமீன் இராணு வத்தில் சிறியபதவி வகித்த தன்னை உயர்பதவிக்குக் கொண்டுவந்த சனாதிபதியையே சதிப்புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவர். பதவிக்கு வந்தபின்னர் தனக்குத் தானே இராணுவ உயர்பதவிகளையும்இ பதக்கங்களையும் சூட்டிக்கொண்டார். தன்னை ஒரு பீல்ட் மார்ஷலாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். தனது பத்து வயது மகனுக்கும் இராணுவ பதக்கங்களையும்இ பட்டங்களைச் சூட்டினார் பதவிகளையும் வழங்கினார்.
இதை ஒத்தாகவே உள்ளது விடுதலைப் புலிகளுக்கு தாமே இராணுவ யுத்திகளைக் கூறியதாகவும் இராணுவ தொழில்நுட்பத்தைப் போதித்ததாகவும்இ புலிகளின் இராணுவ வெற்றிகள் யாவும்தானே ஈட்டியதாகவும் கருணா கூறிக்கொள்வதும்இ தானே புலிகளின் பலம் எனவும்இ தான் இல்லாது போனால்இ விடுதலைப் புலிகளால் மரபுவழிச்சமர்களில் ஈடுபட முடியாது என்ற கூற்றுக்களுமாகும்.
ஆனால் கருணாவின் கூற்றுக்களில் உள்ள முரண்பாடு என்னவெனில்இ தமக்கே எல்லாம் தெரியும் என்ற கர்வம் பிடித்ததாக அவர் கூறும் யாழ்ப்பாணக்காரருக்குத் தானே எல்லாம் சொல்லிக்கொடுத்தது என்பதுதான். அதாவது எல்லாம் தெரியும் என்பவர்கள் கருணா கூறியதை ஏற்றார்கள் என்பதுதான்.
சுருக்கமாகக் கூறுவதானால் கடந்த இருவார காலத்திற்குள்ளேயே கருணா ஏன் செய்தார்? எதற்காக செய்தார் என்பவை தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டவை ஆகியுள்ளன. கருணாவின் தற்பெருமையும்இ தவறான மதிப்பீடுகளும் தமிழ்த்தேசியத்திற்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான சக்திகளின் நீண்டதும்இ தொடர்ச்சியானதுமான செயற்பாடுகளும் கருணாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும்.
ஆனால்இ கருணாவிற்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டியதாயுள்ளது. அதாவதுஇ இடியமீன் போன்ற தற்பெருமை பேசுகின்றவர்களும்இ தமது தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் நீண்டகாலத்திற்கு ஆட்சியதிகாரத்திலோஇ பொறுப்புக்களிலோ நிலைத்து நின்றதில்லை. தமது இறுதிக் காலங்களைத் தமது மண்ணில் கழித்ததுமில்லை.
ஜெயராஜ்
நன்றி: ஈழநாதம் - (18.03.04)ஃதமிழ்நாதம்
தட்டச்சு உதவி: கிருபாஃதமிழ்நாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>