03-16-2004, 07:48 PM
கருணா ஒரு 'புருட்டஸ்'..... - கரிகாலன் செவ்வி
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாட்டால் பல்வேறு குழப்பங்கள் வதந்திகள் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் வேதனைகள் என தாயக மக்களும் புலம்பெயர்ந்த மக்களும் ஒருவிதமான வேதனையில் இருக்கின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். என்ற நோக்கில் நாம் புலிகளின் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கரிகாலன் அவர்களை சந்தித்து நாம் சென்ற விடயத்தைக் கூறினோம்.
அது ஒரு மாலை நேரம் மங்கிய மின்னொளி விளக்கு வெளிச்சத்தில் அவர் அமர்ந்திருந்த கொட்டகையில் மட்டு-அம்பாறை மாவட்டத்தில் கருணா என்ற தனிமனிதன் ஏற்படுத்திய சிறு சலசலப்புத் தொடர்பாக எங்களுடன் தன்னுடைய கருத்துக்களையும் இந்த விடயம் ஏற்பட்டதன் பின்னணி தொடர்பாகவும் கருணாவின் உண்மையான சுயரூபத்தையும் எம்மிடம் தெளிவாக எடுத்துக்கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை சிங்கள ஆங்கில மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் ஊதிப்பெருப்பிக்கும் நிலையில் கரிகாலன் இது ஒரு சிறு சலசலப்பு என்றும் இந்த நெருக்கடி மிகவிரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கருணாவின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லையெனவும் எம்மிடம் தெளிவுபடக் கூறினார்.
அவர் கருணாவின் இந்த செயற்பாட்டிற்கு பின்புலமாக நின்று செயற்படும் சக்திகள் ஒரு கட்டத்தில் அவர்களின் தேவை நிறைவுகிற போது கைவிட்டுவிடக்கூடும் எனவும் அப்போது கருணா தமிழ் மக்களின் வரலாற்றில் தோன்றிய ஒரு 'புருட்டஸ்'ஸாகவே நிச்சயம் நோக்ப்படுவார் என்றும் எம்மிடம் கூறினார்.
இனி நாம் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கரிகாலன் அவர்களுடனான செவ்விக்குச் செல்வோம்.
கருணா தான் செய்த ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளையும் நிதி மோசடிகளையும் மூடி மறைப்பதற்காக தான் ஒரு மாவட்டத்தினுடைய விசுவாசி எனவும் தான் தான் இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டுப் போராடியது போலவும் காட்டுகின்ற அதேவேளை எமது தலைமையால் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுவது போலவும் உண்மைக்குப் புறம்பான நயவஞ்சகமான பிரதேச வாதத்தைக் கிளம்பிவிட்டிருக்கிறார்.
இந்த பிரதேசவாதமானது காலத்திற்குக்காலம் தேர்தல் காலங்களில் மட்டும் தான் அது பிரதிபலிப்பது உண்டு. ஏனைய காலங்களில் வழக்கிழந்து போய் மறைந்து போய் விடுவதுண்டு.
தற்போதும் தேர்தல் காலம் என்பதால் கருணாவும் அதே உத்தியைப் பயன்படுத்தி கருணா என்ற மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்த பிரதேசவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இதனூடாக தன்னை நியாயப்படுத்த முனைகிறார். நிச்சயமாக கிழக்கு மக்கள் மத்தியில் கருணாவின் இந்த உழுத்துப்போன பிரதேசவாதம் எடுபடாது. கிழக்கு மக்களும் கிழக்குப் போராளிகளும் இதற்கு அனுமதிக்கப்போவதில்லை.
கிழக்கில் உள்ள மக்களும் போராளிகளும் தலைவர் பிரபாகரனையும் தமிழீழத் தேசியத்தலைமைகளையும் தங்கள் நெஞ்சங்களில் உயரிய இடத்தில் வைத்து பூசித்து வருகிறார்கள்.
கருணாவின் இந்த நிலைப்பாடு அவருக்கு தற்காலிகமாக ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொடுக்கலாம். ஆனால் இது நீண்ட கால அடிப்படையில் அவருக்கும் அவருக்குப் பின்னால் இருக்கும் பின்புல சக்திகளுக்கும் எந்த வெற்றியையும் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை.
கருணா ஏதோ ஒரு பின்புலசக்தியோடு இணைந்து எடுத்த ஒரு தீர்க்கமான முடிவை கிழக்கு மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்துவதில் குறியாக இருந்தாரே ஒழிய அங்கிருந்த தளபதிகளோடும் போராளிகளோடும் பொறுப்பானவர்களுடனும் கலந்தாலோசிக்கவோ அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவோ தயாராக இருக்கவில்லை. இதன் விளைவுதான் இன்று கிழக்கில் கருணாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு சலசலப்பு ஆகும்.
இதில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் கிழக்கு மக்களினதும் போராளிகளினதும் விரும்பங்களையும் அபிலாசைகளையும் இறுதிவரை அவருக்கு நாங்கள் எடுத்துச் சொல்ல முயன்றது பயனளிக்காமல் போனது தான்.
இதில் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும். கிழக்கு பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு வரமுதலே கருணா தன்னுடைய அடிமனதில் எடுக்கப்பட்டிருந்த முடிவை பிரிந்து செயற்படப்போவதாக அறிவிப்பதிலேயே கவனம் செலுத்தினார். இதில் முக்கியமானது என்னவென்றால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை செயற்படுத்துவதற்கான தந்திரரோபாயம்இ ஆகவே இந்த மாவட்ட நலனை அவர் கையில் எடுத்துக்கொண்டார். அவர் உண்மையில் ஒரு போலியான மனிதர்.
நாம் கொஞ்சக்காலமாகவே கருணாவிடம் பல மாற்றங்களை அவதானித்து வந்தோம். அவர் பல இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வந்தார்.
கருணாவின் இந்த முயற்சி சர்வதேச hPதியாக எமது போராட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்வு கனித்துவரும் நேரம் எல்லா நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த வேளை இதனை விரும்பாத சக்திகளுக்கு கருணாதுணை போய்விட்டார்.
கிழக்கு நிலைமை தொடர்பாக பேசுவதற்கு எமது தலைவர் கருணாவை வருமாறு அழைத்துத்தான் இருந்தார். இது சிறியவிடயம். தலைவருடன் சந்தித்து ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு தீர்க்கப்படக்கூடிய விடயமே. கிழக்கு மக்களின் அபிலாசைகளில் கை வைத்துள்ளார்.
எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. இவர் ஏதோ ஒரு சக்தியிடம் விலை போய்விட்டார். அத்தோடு அதற்கான ஒரு முடிவையும் எடுத்துவிட்டார்.
அதற்கான ஒரு வழிவகையாகவே அவர் இந்த உத்திகளை தெரிந்தது.
தலைவரோடு இணைந்து முப்பது வருடகாலப்போராட்டத்தில் நீண்ட காலம் போராடியவர் என்றவகையில் உண்மையாக கருணா மாவட்ட மக்களிலும்இ போராளிகளினதும் நலனில் அக்கறை கொள்பவராக இருந்திருந்தால் இந்த விடயத்தை தலைவருக்குத் தெரியப்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினையை சுமூகமாக தலைவர் தீர்த்துவைத்திருப்பார்.
மேலும் கரிகாலன் அவர்களிடம் கிழக்கில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக்கள் தொடர்பாக நாம் கேட்டபோதுஇஅது ஒருசில கருணாவின் அடியாட்களாலும் கருணாவின் உறவினர்களாலும் மேற்கொள்ளப்படும் ஒரு போலியான நாடகம். முப்பது வருடங்களுக்கு மேலாக கிழக்கு மக்கள் தங்கள் நெஞ்சங்களில் தலைவரை சுமந்து வருகின்றார்கள். இது ஒரு சில நாட்களில் கருணா என்ற மனிதனால் தூக்கிய எறியக்கூடிய விடயமல்ல.
கருணா உலகிற்கு ஒரு போலியான ஆதரவு தனக்கிருப்பதாக காட்ட நினைக்கும் ஒரு பலாத்கார முயற்சி.
ஆனால் உண்மையில் கிழக்குப் போராளிகளும் மக்களும் தங்கள் மனங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள்.
நாம் அங்குள்ள மக்களோடு தொடர்பு கொள்கின்றபோது அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். எமது தேசிய எழுச்சிப்பாடல்களை கேட்கும்போது தங்களால் கண்ணீர் வடிக்க முடியாமல் இருக்கமுடியவில்லையென எங்களிடம் முறையிடுகிறார்கள். இது எதைக்காட்டுகிறது என்றால் கிழக்கு மக்களின் உணர்வுகைள கருணா என்ற மனிதனால் மழுக்கடிக்ச் செய்ய முடியாதென்பதையே.
இப்பொழுது கருணா மிகவும் குழம்பிப்போன மனிதராக உள்ளார். தன்னை மறைப்பதற்காக கற்பனையான சில பிரச்சினைகளை உருவாக்கி மக்களின் உணர்ச்சிகளை தூண்ட முயற்சிக்கிறார். இந்த முயற்சியும் கருணாவுக்கு தோல்வியையே தரும்.
கருணாவுக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி பலகல்லவுக்கும் இடையே நெருக்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் மக்களுக்கு இன்னும் தெரியவரவில்லை. இந்த விடயம் தெரியவரும்போது மக்கள் முழுமையான இவருடைய சுயரூபத்தைப் புரிந்து கொள்வார்கள்.
கருணா தன்னுடைய பிரதேசவாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகர்களை அங்கிருந்து வெளியேற்றியும் அதேநேரம் கிழக்கு மாணவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றுவதாக பொய் வதந்தியை கிளப்பி வருகிறார். இதனால் பாதிக்கப்படபோவது மட்டக்களப்பு மக்களும் மாணவர்களுமே ஆகும்.
கருணா சிறிலங்கா இராணுவத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார். அப்படிப்பார்த்தால் கருணா யாரோடு சண்டை செய்ய முயற்சி செய்கின்றார் என்ற கேள்வி எழும்.
அந்தவகையில் கருணா தமிழருக்கெதிராகவும் தமிழர் தலைமைக்கெதிராகவும் ஒட்டுமொத்தமாக தமிழ்த்தேசிய தலைமைக்கெதிராகவும் சண்டை செய்ய முயற்சிப்பது தெரியவரும். அப்போது கிழக்கு மக்கள் கருணாவைப் புறந்தள்ளி விடுவார்கள். இந்த நிலைக்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கருணாவோடு இணைந்து செயற்பட அனுமதிக்கமாட்டார்கள். எந்தவொரு காலகட்டத்திலும் தேசியத்தலைவருக்கு எதிராக தமது பிள்ளைகளையோ தாங்களோ செயற்பட அனுமதிக்கப்போவதில்லை.
ஏனென்றால் நாம் கிழக்கில் இருக்கும் போது எங்களிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் போது அவர்களிடம் நாம் ஒரு வாக்குறுதி அளித்திருந்தோம். உங்களுடைய பிள்ளைகள் எமது நாட்டிற்காக தேசியத்திற்காக போராட வந்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ஒரு நாளைக்கு உங்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு வரும் என நம்புங்கள் எனக் கூறியே பிள்ளைகளை நாம் பொறுப்போடுத்தோம். அந்த பிள்ளைகளின் அந்தப் பெற்றோர்களும் எமது தலைமைக்கு எதிராக ஒருநாளும் செயற்படமாட்டார்கள். அவர் அப்படி கருதுவாரானால் அவர் கற்பனையில்
வாழவேண்டியதுதான்.
கருணா யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக்கூட வெளியேற்றியிருக்கிறார். இதனால் பாதிக்கப்படப்போவது மட்டக்களப்பு மாணவர்கள்தான். மட்டக்களப்பு மாணவர்களுடைய கல்விதான் இதனால் பாழடிக்கப்பட்டு இருக்கிறது.
மாவட்ட நன்மைக்காக கஸ்ரப்படுவதாக கூறும் இவர் மட்டக்களப்பு மாணவர்களுடைய கல்வியை சீரழிப்பது எந்தவகையில் நியாயம். இதனை மாணவர்களும் மக்களும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
இன்னுனொருவகையில் தலைவரால் படைபலாPதியாக வழங்கப்பட்ட ஆயுத விபரங்களை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தி வருகிறார். அத்தோடு போராளிகளின் தொகையையும் புள்ளிவிபரங்களில் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் கருணா எதிரிகளுக்கு தகவல்களை வழங்கிவருகிறார். ஒரு சிறந்த இராணுவத்தளபதி இத்தகைய தகவல்களை வெளியிடமாட்டார். இதன்மூலம் அவர் எமது இனத்தையே காட்டிக்கொடுக்கிறார்.
இந்தவிடயம் தொடர்பாக தலைவர் கதைக்கும்போது அவரின் ஒரு உணர்ச்சிவசப்பட்ட ஒரு துரோகத்தனத்தைத்தான் பார்ப்பதாகக் கூறினார்.
கருணாவால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களும் நிபந்தனைகளும் வைத்திருக்கும் காலப்பகுதியே இங்கு முக்கியம் தருகிறது. கருணா எத்தனை தடவைகள் தலைவரைச் சந்தித்திருக்கிறார். அத்தோடு அவர் ஒரு தலைவரின் நம்பிக்கைக்குரியவராகவும் அதேநேரத்தில் மத்தியகுழு உறுப்பினராகவும் கருதப்பட்டவர். அப்படி அவர் இருக்கும்போது தலைவரரோடு எதையும் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும் அப்போதெல்லாம் பேசாது கருணா இப்போது மட்டும் பேசுகிறார் என்றால் அவரது உண்மையான சுயநலம் வெளிப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்தக் கருணாவை நம்பித்தான் தலைவர் அவர்கள் இந்த ஜெயசிக்குறு சண்டையையே ஒப்படைந்திருந்தார். அப்படிப்பட்ட தலைவர் கருணாவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமலா இருந்திருப்பார்.
கருணாவின் தற்போதைய இந்த நிலைப்பாடுகள் எவையும் கருணாவின் சுயமுயற்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. அவரின் பின்னால் இருக்கும் புறசக்தியின் தூண்டுதலினால் எடுக்கப்பட்ட முடிவேயாகும்.
கருணாவின் பொறுப்பு நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர் ஒரு சாதாரண மனிதர் ஆகிவிட்டார். ஆனால் அங்குள்ள போராளிகள் எங்களுடைய போராளிகள். அதை அங்குள்ள போராளிகள் உணர்ந்து கொள்வார்கள். எங்களுடைய தளபதிகள் அங்கு சென்றவுடன் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.
அத்தோடு அங்குள்ள போராளிகளின் உள்ளக்குமுறுல்களும் அழுத்தங்களும் வெடிக்கிற போது அங்குள்ள போராளிகளாலேயே கருணா ஆபத்தை எதிர்நோக்கலாம்.
இறுதியாக நாம் அவரிடம் தேர்தல் தொடர்பாகக்கேட்டபோது முக்கியமாக வீடு சின்னத்துக்கே வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம். இதனை அங்குள்ள மக்கள் செய்வார்கள் என்றே நம்புகிறேன்.
கருணாவின் பின்புலமாக இருக்கும் சக்திகளும் சிறிலங்கா அரசும் இந்தத்தேர்தலை எப்படியாவது குழப்பிவிடவேண்டும் என்பதற்காக பலகாரியங்களை செய்யலாம் என நாம் கருதுகிறோம். ஆனால் இந்த முயற்சியை முறியடிப்பதோடு கிழக்கு மக்கள் விரைவில் கருணாவுக்கும் கருணாவின் பின்புலத்தில் இருக்கும் சக்திக்கும் நல்லதொரு பாடம் புகட்டுவார்கள்.
நன்றி சிறி.இந்திரகுமார்இ க.ஜெயசீலன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>