03-16-2004, 07:11 PM
மட்டக்களப்பு- திகாமடுல்ல கூட்டமைப்பு வேட்பாளர்களின் பிரசார வழிமுறைகள் குறித்து கருணா தரப்பு அறிவுறுத்தல்
மட்டக்களப்பு- திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கருணா தரப்பினர் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கரடியனாறிலுள்ள தேனகத்தில் நேற்றுக் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மட்டக்களப்பு- திகாமடுல்ல மாவட்டங்களில் போட்டி யிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுடன் இருதரப்பாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது கருணா தரப்பு சார்பாக விசு, துரை, ராபட், பாவா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தி, புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக மட்டுமே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், வேறு எந்தவொரு விடயங்கள் தொடர்பாகவும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாதென்றும் கருணா தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு எதிராக பிராந்திய ரீதியிலான பிரசார நடவடிக்கைகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாதென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்து இரு தினங்களில் தமது முழுமையான நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கருணா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>