03-16-2004, 06:59 PM
'கருணாவின் பின்னணியில் அமெரிக்கா, இந்தியாவை நுழைக்கவும் சிலர் முயற்சி" - யாழ்ப்பாண பல்கலைக்கழக கருத்தரங்கில் கரிகாலன்
ஜ தினக்குரல் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2004, 18:26 ஈழம் ஸ
'விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் செயற்பாடுகளின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இந்த விவகாரத்திற்குள் இந்தியாவையும் இடையில் இணைத்துக் கொள்வதற்குச் சிலர் முயற்சிக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் சிலரும் இதற்கு உடந்தையாகச் செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன" என்று விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான கரிகாலன் தெரிவித்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில், கிழங்கிலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக உரையாற்றுகையில், இதைத் தெரிவித்த கரிகாலன், 'எமது விடுதலைப் போராட்டம் எண்ணற்ற சவால்களையும், துரோகத்தனங்களையும் சந்தித்திருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்ட எமது தலைவர் பிரபாகரன், இன்றும் மனங்கலங்காது நிதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்டப் போராளிகளும், தளபதிகளும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பது உண்மையே. விடுதலைப் போராட்டம் இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்த வேளைகளில் எல்லாம், தலைவருக்கு எப்போது நெருக்கடிகள் ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் மட்டக்களப்பில் இருந்து படையை நகர்த்தி நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு உதவி செய்து போராட்டம் தொடர்ந்து உத்வேகம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் உண்மையே. ஆனால், இந்த வரலாற்று உண்மையைக் கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. கருணாவின் துரோகத்தனத்தையிட்டு நான் பெரும் கவலையடைந்துள்ளேன் என்றும் கரிகாலன் தனதுரையில் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு போராளியும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் மனதில் இருத்திக் கொண்டு தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். தலைவரைக் கண்ணால் கண்டிராத போராளிகள் கூட, அவரின் படத்தைத் தமது சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டுதான் வீரச்சாவை அடைந்தார்கள். தலைவரைச் சந்தித்து விட்டு நாம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் திரும்புகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் போராளிகள் எங்களைச் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு உணர்வுடன் தான் அவர்கள் அங்கே இருக்கின்றார்கள். விடுதலைக்காகப் போராட எந்த வேளையிலும், அவர்கள் துணிந்து நின்றார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் போராளிகள் முந்திக் கொண்டு புறப்படுவார்கள். அந்த உணர்வுகளையெல்லாம் மழுங்கடிக்கலாம் என்று கருணா இப்போது நினைத்திருக்கிறார். அந்தப் போராளிகளின் உணர்வுகளை எவராலும் மழுங்கடிக்க முடியாது என்பது நிச்சயம்.
கருணா மீது மிகுந்த நம்பிக்கை தலைவருக்கு
'எமது தலைவர்" கருணா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். தன்னுடைய ஸ்தானத்திற்கு அடுத்தபடியாகத் தலைவர் கருதிய தளபதிகளில் கருணாவும் ஒருவர். ஒரு மாவட்டத்தைத் தனியாக ஒப்படைத்துச் சகல நிர்வாகங்களையும் பொறுப்பேற்று நடத்தக் கூடிய அதிகாரங்கள் சகலதையும் கருணாவுக்குத் தலைவர் வழங்கியிருந்தார். மட்டக்களப்பைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் தலைவர் அத்தகைய நிலைமையை ஏற்படுத்தியதேயில்லை.
கருணாவின் வேகமான வளர்ச்சிக்கு அவருடைய ஆற்றல் அடிப்படையாக இருந்ததென்பது உண்மை. அவருடைய செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக நாங்கள் போராளிகளை இணைப்பதிலும், தலைவருடைய இலட்சிய உணர்வுகளை ஊட்டுவதிலும் மக்களுக்கு சேவை செய்வதிலும் ஈடுபட்டிருந்தோம். இன்றைக்கும் ஆற்றலுடைய படையொன்றைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்ந்து கொண்டிருந்தது என்பது மாபெரும் உண்மையே.
அண்மைக் காலங்களில் கூட போராளிகளுடன் பேசுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் கருணா, தலைவருக்கு மட்டும் தான் நாம் பணிய வேண்டும் தலைவருக்கு ஆபத்து வருகின்தென்றால் அவருக்காகப் போராடி மடிய நாம் தயாராயிருக்க வேண்டும் என்று கூறி அத்தகைய இலட்சிய உணர்வையே ஊட்டுவார். அவர் விடுதலைப்புலிகளின் அணியில் இருந்து பிரிந்து செல்வார் என்பதற்கான எந்த அறிகுறியுமே, சாத்தியக் கூறுமே அவரிடம் காணப்பட்டதில்லை. இதுவும் அவருடைய திறமைகளில் ஒன்று என்று தான் நான் இப்போது கருதுகின்றேன்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது கருணாவுக்கு பெரும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர், வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம், மிகப் பெரிய ஆற்றலுடைய தளபதியாகவே மரியாதையுடன் நோக்கப்பட்டார். வெளிநாடுகளில் எமது மக்களுடன் பேசுகையில், தேசியத் தலைவரைப் பற்றியும், விடுதலையைப் பற்றியுமே அவர் பேசினார். ஆனால், இன்று அந்த மக்களெல்லாம் காறி உமிழ்கின்ற வகையில் கருணாவின் செயற்பாடுகள் அமைந்து விட்டன.
கருணா சுயமாக இந்த நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது எமக்கு நன்றாகப் புரிகின்றது. கருணாவைச் சுற்றி ஒரு வெளிச்சக்தி நிச்சயமாக இருக்கின்றது. கருணா எவ்வாறு விலைபோனார் என்பதை விடுதலைப்புலிகளால் ஐPரணிக்க முடியாதுள்ளது. கருணாவின் பின்னணியில் உள்ள அந்த மாபெரும் சக்தியினுடைய செயற்பாடு தான் அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதுதான் எமது திடமான நம்பிக்கை.
தளபதிகளுக்குப் பயிற்சி வகுப்புக்கள்
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளபதிகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இரானுவப் பயிற்சியோடு போதனைகளும் செய்யப்பட்டன. குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒவ்வொரு நாளும் வந்து கற்பித்தலை செய்து கொண்டிருந்தார்கள். அது எமக்கு மிகவும் பயனுடைய ஒரு நடவடிக்கையாகவே இருந்தது.
இது தளபதிகளினுடைய எதிர்கால நன்மைக்காகவே செய்யப்படுகின்றது என்று தான் நாமெல்லோரும் கருதினோம். அந்த இடத்தில் சகல தளபதிகளும் கூடிப் பேசுகின்ற சந்தர்ப்பமும் எமக்குக் கிடைத்தது. ஆனால், இப்போது தான் தெரிகின்றது எல்லாத் தளபதிகளையும் ஓரிடத்திலே குவித்து விட்டு கருணா தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்கின்றார் என்று.
எந்தத் தளபதிக்குமே தெரியாமல் தான் தன்னிச்சையாக பல சந்திப்புகளை கருணா ஏற்படுத்தியிருக்கிறார்.
இளநிலைத் தளபதிகளோடு படைகளையும் நன்றாக ஒழுங்கமைத்திருக்கின்றார். அந்த தளபதிகளிற்கு தன்னுடைய விசுவாசத்தை ஊட்டி தனக்காகப் போரிடக்கூடிய ஒரு தயார்படுத்தலையும் செய்திருக்கிறார் கருணா.
நிதி மோசடி கண்டுபிடிப்பு
இந்தப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கருணாவின் நிதி மோசடியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிதி மோசடி தொடர்பாக தலைவரிடம் கூறுவதற்காக நிதித் துறைப் போராளியொருவர் வந்து விட்டார். இதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.
இந்த நிதி மோசடியைக் கண்டுபிடித்தவர் கருணாவின் சாரதியொருவரே. அவரை வைத்தே தனது நிதி மோசடியை மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கிய கருணா, எங்களுடைய பயிற்சிக் கல்லூரிக்கு அந்த சாரதியை அழைத்துவந்து சாட்சி சொல்ல வைத்து தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க முயன்றார்.
இதேவேளை, கருணாவால் சாட்சி சொல்ல வைக்கப்பட்ட அந்தப் போராளி ஒரு வாரத்திற்குள் இறந்து விட்டார். அந்தப் போராளிக்கு மலேரியாக் காய்ச்சல் வந்ததாகவும் அதனால் மரணமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டதுடன் அந்தப் போராளிக்கு சோடாவுக்குள் சயனைட் கலந்து கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதும் ஊர்ஐpதப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் போராளிகள் மட்டத்தில் பரவத் தொடங்கியதுடன் கருணா மீது சந்தேகமும் ஏற்பட்டது. இதனால் தான் செய்த நிதி மோசடி உறுதிப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கருணாவுக்கு ஏற்பட்டது.
இதற்கிடையில் கருணாவின் நிதி மோசடி தொடர்பாக அந்த நிதித்துறைப் போராளி தலைவரிடம் முறையிட்டதையடுத்து கருணாவை தன்னை வந்து சந்திக்கும்படி தலைவர் செய்தி அனுப்பினார். ஆனால், தான் செய்த தவறுகள் வெளிவந்துவிட்டதால் தனக்கு தண்டனை நிச்சயம் என்பது கருணாவுக்கு தெரிந்து விட்டது.
இதனால் தான் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதையோ, இயக்கத்தில் இருந்து ஒதுங்குவதையோ கருணாவால் ஐPரணிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தக் காலப் பகுதி அப்படியானது. உலக நாடுகளுக்குச் சென்று புகழைப் பெற்றுக் கொண்ட அவர் சமாதான காலத்தில் ஒரு தண்டனையை அனுபவிக்க விரும்பவில்லை. யுத்த காலத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பொதுமக்களை சென்றடைவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டால் அது உலகம் முழுவதும் தெரிந்து விடுமென கருணா அச்சமடைந்தார்.
மார்ச் 1 இல் அவசரக் கூட்டம்
கடந்த 1 ஆம் திகதி எங்களுக்கு கருணா அவரசக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் புலிகளின் தலைமை மீது குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், தலைவரின் கீழ் தான் நேரடியாகச் செயற்படப் போவதில்லை. இதற்கு ஒத்துழைக்காதவர்கள் விலகிச் செல்லலாமெனவும் இந்த முடிவு குறித்து எவரும் தன்னுடன் கதைக்கக் கூடாதெனவும் கூறினார்.
ஆனால், கருணாவின் முடிவை மாற்றுவதற்கு நான் எவ்வளவோ போராடினேன். இறுதியாக நான் கருணாவைச் சந்தித்த போது, தலைவரின் கீழ் நாங்கள் உறுதியாக நின்று செயற்படுவோம் என்று கூறினேன். அதற்கு கருணா புலிகளின் தலைமையை விட்டுப் பிரிந்து செல்வதாக நான் நேற்றே ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
இறுதியாக மட்டக்களப்பில் நடைபெற்ற வதனா என்ற மாவீரரின் நினைவு தினத்தில், தான் புலிகளின் தலைமையிலிருந்து பிரிந்து போவதாகக் கருணா போராளிகளுக்கு அறிவித்ததுடன், அங்கிருந்த தலைவரின் படங்களையும் அகற்றுமாறு போராளிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், போராளிகள் தலைவரின் படங்களைக் கழற்றித் தமது காற்சட்டைப் பைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டனர். கருணாவின் இச் செயல் போராளிகள் மட்டத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இதேவேளை, அங்கு நின்றிருந்த என்னிடம் அரசியல் துறையை நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன், அரசாங்கத்துடன் தனியானதொரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகின்றோம். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி, என்னிடம் ஒரு பத்திரத்தைத் தந்தார். அங்கிருந்த சூழ்நிலை காரணமாக் அந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நான் ஒரு பிரதியைக் கருணாவிடம் கொடுத்து விட்டு மறுபிரதியை நானே அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி வாங்கி வந்தேன்.
இதற்கிடையில், மறுநாள் ஊடகமொன்றுக்குப் பேட்டி கொடுக்க வேண்டும். அத்துடன், உங்கள் பெயரில் அறிக்கை விட வேண்டும் எனவும் கருணா எனக்குக் கட்டளையிட்டார். நான் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதாகக் கூறிவிட்டே மறுநாள் வன்னிக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
இரானுவத் தளபதியுடன் கருணாவுக்கு நெருங்கிய தொடர்பு
கருணாவிற்கு இலங்கை இரானுவத்தோடு நெருங்கிய தொடர்புண்டு. இராணுவத் தளபதி மேஐர் nஐனரல் லயனல் பலகல்ல கருணாவோடு அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார். இந்தத் தொடர்புகளைப் பார்க்கும் போது இலங்கை இராணுவத்தோடு இணைந்து தான் கருணா தனது செயற்பாட்டை தொடரப் போகின்றார் என்பது புலனாகிறது.
கருணாவின் இந்தச் செயற்பாடுகளையெல்லாம் போராளிகள் தற்போது நன்குணர்ந்து விட்டனர். எனவே, கிழக்கு மாகாணத்தை ஒரு புனித மாகாணமாக ஒரு எழுச்சி கொண்ட மாகாணமாக மாற்ற முடியுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்குண்டு.
கருணாவால் ஏற்பட்ட கறையை, அவமானத்தை, பிரதேசவாதத்தைத் துடைப்பதற்கு எம் மக்களை அணிதிரட்டி முழு மூச்சுடன் செயற்படவுள்ளோம். இதற்கு நீங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கரிகாலன் தனது உரையில் நேற்றுத் தெரிவித்தார்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>