Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டு
#6
சச்சின் அபார சதம்! 12 ரன்களில் வென்றது பாகிஸ்தான்!!

செவ்வாய், 16 மார்ச் 2004
இன்சமாம்-உல்-ஹக் அபாரமாக ஆடி சதமடித்தும் கராச்சியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதைப் போல, இன்று சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 141 ரன்கள் குவித்தும் பலனின்றி இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது!

சாம்சங் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களைக் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சிறப்பாக முன்னேறிய இந்திய அணி, கடைசி கட்டத்தில் மளமளவென்று விக்கெட்டுகளை இழந்து 48.4 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

இந்தியாவின் இமாலய இலக்கை நோக்கி கராச்சியில் எப்படி பாகிஸ்தான் அணி திட்டமிட்டு விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக ஆடியதோ, அதே போல இந்திய அணியும் ஷேவக், லக்ஷ்மண் ஆகியோரின் விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்தாலும் மிக நிதானமாக நின்றாடி இலக்கை நோக்கி நன்றாக முன்னேறியது.

சச்சின் டெண்டுல்கர் தனது திறன் எப்படிப்பட்டது என்பதனை இன்று துல்லியமாக நிரூபித்தார். ஒரு பந்தைக் கூட தூக்கியடிக்காமல் 106 பந்துகளில் சதத்தை எட்டிய சச்சின் டெண்டுல்கர், அதன் பிறகு மேலும் 41 ரன்கள் குவித்த பின் ஆட்டமிழந்தார்.

சச்சின், திராவிடுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு குவித்த 105 ரன்கள் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கடைசி 10 ஓவர்கள் இருக்கும்போது இந்திய அணிக்கு சரியாக 80 ரன்கள் தேவைப்பட்டது. 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால், 42வது ஓவரில் ராகுல் திராவிட் ஆட்டமிழந்ததும், அவரைத் தொடர்ந்து யுவராஜ் சிங் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தார், மொஹம்மது கய்ஃபையும், ஜாஹீர் கானையும் அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்ததும் இந்திய அணியின் கனவு காணாமல் போனது.

ஆனால், அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர் இன்று முதல் முறையாக களமிறங்கிய ரமேஷ் பவாரும், லக்ஷ்மிபதி பாலாஜியும். 15 பந்துகளில் அவர்கள் இருவரும் குவித்த 30 ரன்கள் பாகிஸ்தான் அணியினரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால், அவசரப்பட்டு 1 ரன் எடுக்க முயன்று பாலாஜி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து திடீரென்று எல்லாம் முடிந்துவிட்டது. 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த பவார் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினார்.

தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் முயற்சி பாராட்டிற்குரியது. எவ்வித பதற்றமுமின்றி இலக்கை நோக்கி முன்னேறினர். ஆனால், யுவராஜ் சிங்கும், மொஹம்மது கய்ஃபும் சிறிது நேரம் இணைந்து நின்றாடியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 58 பந்துகளில் 10 பௌண்டரிகளுடனும், 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களைக் குவித்து பாகிஸ்தான் அணிக்கு ஒரு அற்புதமான துவக்கத்தைத் தந்த ஷாகீத் அஃப்ரிடி, கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையைத் தந்தார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோயிப் அக்தாரும், மொஹம்மது சமியும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தங்களுடைய திறனை நிரூபித்தனர். அவர்களுடைய அபார பந்து வீச்சே இந்தியாவின் வெற்றித் திட்டத்தை கடைசிக் கட்டத்தில் தவிடு பொடியாக்கியது.

இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
விளையாட்டு - by Mathan - 03-13-2004, 01:11 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:13 PM
[No subject] - by Mathan - 03-13-2004, 01:17 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:12 PM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:14 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:21 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:28 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:38 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:42 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 06:48 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 03-19-2004, 04:26 PM
[No subject] - by Mathan - 03-19-2004, 06:58 PM
[No subject] - by kuruvikal - 03-20-2004, 10:31 AM
[No subject] - by Mathan - 03-21-2004, 06:00 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 09:51 AM
[No subject] - by Mathan - 03-24-2004, 12:41 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 08:26 PM
[No subject] - by Mathan - 03-24-2004, 11:45 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:32 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:34 PM
[No subject] - by Kanani - 03-29-2004, 01:07 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:42 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:45 AM
[No subject] - by Mathan - 04-13-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 04-16-2004, 10:28 AM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:21 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:22 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:32 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 08:10 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:48 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:50 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:51 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 01:21 AM
[No subject] - by ganesh - 05-19-2004, 08:54 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 10:54 PM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:53 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 07:05 PM
[No subject] - by Mathan - 06-04-2004, 08:44 PM
[No subject] - by ganesh - 09-16-2004, 12:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)