03-16-2004, 04:11 AM
Eelavan Wrote:அப்போ கருணா பேட்டி கொடுக்காத காரணத்தால் தான் தராகி அப்படி எழுதியிருக்கிறார் என்கிறீர்கள்
பிரபாகரன் பேட்டி கொடுக்காத காரணத்தால் இந்து பத்திரிகை எழுதிய மாதிரி
இன்னும் ஒன்று தராகி பேட்டி எடுப்பதற்காக அவரை சந்திக்க முயலவில்லை என்று தனது கடிதத்தில் கூறியிருக்கிறார் நிலைமை பற்றி ஆராயவே முயன்றிருக்கிறார்
இன்னும் ஒன்று இவ்வளவு நடந்த பின்னும் தராகி அவர்கள் கருணா மீது கொண்ட நம்பிக்கையையும் மரியாதையையும் கைவிடவில்லை
அதே போன்று நான் மட்டுமல்ல பெரும்பாலான தமிழ் மக்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தோம்
அது மற்றவர்களிடம் இன்னும் இருக்கிறதோ தெரியாது என்னைப் பொறுத்தளவில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது ஆனால் அவர் விடுதலைப் போராட்டம் மீது சேறு பூசுவதைத் தான் தாங்கமுடியவில்லை
நீங்கள் தான் பல மணிநேரம் தராகி காத்திருந்து சந்திக்க முயன்றதாக எழுதியிருந்தீர்கள். அதை வைத்து தான் சந்தித்திருந்தால் இது போல ஒரு கட்டுரையை எழுதியிருப்பாரோ என்று கேட்டேன், மற்றும்படி அவருடைய கட்டுரையில் உள்ள நியாயங்களை நான் உணர்கின்றேன், அதை நான் மறுக்கவில்லை.
கருணா சேறுபூசுவதை தாங்கமுடியவில்லை என்பது உண்மைதான், அவரது அண்மைய பேட்டிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன, அவர் தடம் புரள்கின்றார். அதனை வெளியிடுங்க்கள் சரியாக மக்களுக்கு சுட்டி காட்டுங்கள், அதுவே அவரை ஆதரிக்கும் மக்களை உஙக்ள் வழிக்கு திருப்ப சரியான வழி. முழுமையாக மறைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

