03-16-2004, 04:01 AM
Eelavan Wrote:நான் அவர் பற்றிய செய்திகளைப் போடக்கூடாது என்றோ அல்லது கருணா சொல்லும் யாவுமே பிழை என்றுமோ சொல்லவில்லை
கிழக்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் மற்ற நிறுவனங்களுக்கூடாகத் தான் இவர்களுக்குக் கிடைக்கும் ஏன் கருணா தினக்குரலையோ வீரகேசரியையோ கூப்பிட்டு பேட்டி கொடுக்கக் கூடாது
பிரபாகரன் ஆனந்திக்குப் பேட்டி கொடுத்த அதேவேளை உள்ளூர்ப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்ததாக நினைவு
மீண்டும் சொல்கின்றேன் கருணா தமிழ் பத்திரிகைகளுக்கு பேட்டி குடுக்காதது சரி என்று சொல்லவில்லை. ஏன் அவர் அப்படி பேட்டி குடுக்கவில்லை அல்லது சர்வதேச நிறுவனங்களை தெரிவு செய்தார் என் நினைக்கின்றீர்கள்?
மற்றது நான் தொண்ணூறுகளில் வந்த பிரபாகரன் பேட்டியை சொல்கின்றேன், அப்போது அவர் உள்ளூர் பத்திரிகைகைகளுக்கு கொடுக்கவில்லை, நீண்ட காலத்துக்கு பின்பு வந்த பேட்டி அது,
Eelavan Wrote:தமக்கு எதிராகச் செய்தி வந்ததால் பத்திரிகையை எரித்தவர்கள் கொடுக்கும் தகவல் மட்டும் உண்மை என்று எப்படி நம்புவது
நம்புவது கஷ்டம் தான். ஆனால் பேட்டிகளுக்கு என்ன நடந்தது? வழமையாக மற்ற நிறுவனங்களில் இருந்து எடுத்து போடுவார்களே? சம்பவங்கள் என்ன ஆயிற்று? போடாதாதால் வரும் விளைவுகள் ஊடகங்கள் மீது நம்பிக்கை இழப்பு.
Frontline பத்திரிகையில் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்த கட்டுரையை போட்டிருந்தேன். படித்தீர்கள் தானே? அதில் நான் உங்களுக்கு எழுதிய கேள்விகளை படித்தீர்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

