03-16-2004, 03:31 AM
Eelavan Wrote:தமிழ்ப் பத்திரிகைகள் பெருமளவில் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்குபவை அவர்களது செய்தியாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்றனர் யார் யார் இன்ன மாவட்டத்திலிருந்து இன்னின்ன பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பவர்கள் என்று சாதாரண பொது மக்களுக்கே தெரிந்திருக்கிறது அப்படியிருக்க பத்திரிகைகளை கிழித்தெறிந்து எரித்தவர்களால் தாமும் கிழிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால் அங்கிருந்து எவரும் செய்திகளை அனுப்ப சாத்தியம் இல்லை
கருணாவிற்கு ஆதரவானவர்கள் தான் பத்திரிகைகளை எரித்ததாக கூறப்படுகின்றது. அப்படியானால் அதில் எதிர்பையும் மீறி அவர்களுக்கு எதிரான சம்பவங்கள் செய்தியாக வந்ததால் தானே? எதிரான சம்பவங்களை செய்தி போட்டவர்களால் ஏன் ஆதரவான சம்பவங்களை செய்தியாக போடமுடியவில்லை? குறிப்பாக குடா நாட்டு பத்திரிகைகள் மெளனம் சாதித்து ஏன்? இதனால் மற்ற பத்திரிகைகளையும் படிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படவில்லையா?
Eelavan Wrote:அதனை விட கருணா வெளிநாட்டு செய்தியாளர்களையும் நிறுவனங்களையும் கூப்பிட்டு செய்திகள் பேட்டிகள் கொடுக்கிறாரே தவிர தம்மையெல்லாம் புறக்கணித்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராகி சிவராம் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார் அத்தோடு இது சம்பந்தமாக கருணாவை சந்தித்து உரையாட பலமணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினேன் என்றும் கூறியிருக்கிறார்
கருணாவின் நிலையை நான் ஆதரிக்கவில்லை. அவரது பேட்டிகள் நிறைய சந்தேகங்களை கிளப்புகின்றன, தராகியோட கட்டுரையை நான் படித்தேன் நிறைய சிந்திக்க வேண்டிய கருணா பதில் அளிக்க வேண்டிய கருத்துக்கள் இருந்தன, நியாயமான கேள்விகள் தான். ஆனால் கருணா தராகிக்கு பேட்டி குடுத்திருந்தால் அவர் இதேமாதிரி ஒரு கட்டுரையை எழுதியிருப்பாரா என்றது சந்தேகம் தான்,
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏன் கருணா பேட்டி குடுக்கின்றார் என்று உங்களுக்கே தெரியும். புலிகள் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களை நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்துவிட்டு ஏன் பிபிசி ஆனந்திக்கு பேட்டி குடுத்தார் என்று நினைக்கின்றீர்கள்?
Eelavan Wrote:அவர் தருவதையும் இவர் தருவதையும் மாறி மாறிப் போடுவது மட்டும் பத்திரிகா தர்மம் என்று இல்லை பத்திரிகைகளுக்கு என்று சுய தணிக்கை இருக்கிறது அதனை விட தார்மீகக் கடப்பாடு என்று ஒன்று இருகிறது இரு பக்கச் செய்திகளையும் போடத்தான் வேண்டும் ஆனால் எது போடலாம் எதனைப் போடக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கையில்
பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கின்றது தான் இல்லை என்று இல்லை, ஆனால் நடந்த சம்பவங்கள பேட்டிகளை தருவதில் தவறில்லையே, இன்றைய இலத்திரனியல் தகவல் தோடர்பு உலகில் எதையும் மறைபது கடினம். இலங்கை அரசாஙகம் தலைகீழாக நின்றும் புலிகள் தரப்பு செய்திகள் வெளிவரவில்லையா? இலங்கை அரசின் கடுமையான தணிக்கை முறையால் நடந்தது என்ன? மக்கள் வெளி நாட்டு செய்தி நிறுவனங்களை நாட வேண்டி வந்தது, இலங்கை ஊடகங்கள் நம்பிக்கையை இழந்தன. அதே நிலைமை நமக்கும் வேண்டுமா? ஒரளவாவது செய்திகளை வெளியிட வேண்டாமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

