03-15-2004, 07:59 PM
<b>பேரினவாதக் கட்சிகளின் முன்னாள் எம்.பி.க்கள் சிறுபான்மைக் கட்சிக் கூட்டுக்குள் அடைக்கலம் </b>
நடைபெறவிருக்கும் 13 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இப்பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழரே புலிகள்; புலிகளே தமிழர், விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற கோஷங்களுடன் தமிழர் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியணி தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
திருமலை மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் 10 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களுமாக 112 பேர், 4 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு போட்டியிடுகின்றார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) நீண்டகால அனுபவம் உள்ள அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தன் உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்; இவர்களில் பலர் பழைய முகங்களே.
வேட்பாளர் தெரிவின்போது கட்சிக்கிளைகளின் ஆதரவுடனும், விடுதலைபுலிகளின் அனுசரணையுடனும் தொகுதிவாரியாக, சிறந்த இளம் வேட்பாளர்களை உள்ளடக்கியிருந்தால் வரவேற்கக் கூடியதாக அமைந்திருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள். இதற்கு முன்மாதிரியாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவு நடைபெற்றமையைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் தலைமை வேட்பாளரைத் தவிர ஏனைய 7 பேரும் புதுமுகங்கள். இவை கட்சியின் அடிப்படையில், தொகுதிரீதியாக (மட்டக்களப்பு, கற்குடா, பட்டிருப்பு) முறையே 4, 2, 2 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேசிய கூட்டமைப்பை முழுமையான சக்தியைக் கொண்டு களமிறங்கியது ஒரு சாணக்கியமான செயல் எனலாம்.
திருமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினாலும், அவரால் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவது என்பது கஷ்டமானதொரு காரியமாகும். அதற்காகத் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை தனக்கு அளிக்குமாறு கோரப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். முஸ்லிம் வாக்குகளை கூடிய அளவு தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறமுடியாத நிலையே தென்படுகின்றது. இதற்குப் பதிலாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்குச் செல்லவிருக்கின்ற தமிழ் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முனைப்பாக இருப்பதால் பாரிய வாக்கு அதிகரிப்பு ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக, இலங்கையில் விகிதாசார தேர்தல் முறை அமுலுக்கு வந்த காலந்தொட்டு, கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரை ஆட்சியமைத்து வந்த பேரினவாதக் கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சி பேதங்களைக் கைவிட்டுவிட்டு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் களமிறங்கியமை கருத்திற் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். இக்கூட்டமைப்பு மூலம் திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக அங்கம் வகித்த ஏ.எம்.எம்.மஃ×ப் (ஐக்கிய தேசியக் கட்சி), நஜீப் அப்துல் மஜீத் (பொதுஜன ஐக்கிய முன்னணி), கே.எம்.தௌபீக், எஸ்.எம்.தௌபீக் ஆகியோர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இம்முறையில் களமிறங்கியது. கூடிய இரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்; பேரினவாதிகளின் வாக்குபலம் குறையும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் இரண்டு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதாக இருந்தால், கடந்த
பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த பழுதடைந்ததாகக் கருதப்படும் ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஈடுசெய்வது, வேட்பாளர்கள் தனித்தனியே வாக்குவேட்டையிடுவதைத் தவிர்ப்பது, கூட்டமைப்புச் சின்னமாகிய வீட்டுக்கு மட்டும் வாக்குகளை அளிப்பது ஆகியவை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் அமைத்துக் கொண்ட கூட்டு தென்பகுதியில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலும், இம்மாவட்டத்திலுள்ள சிங்களப் பெரும்பான்மை மக்கள் அதை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. மொத்த சிங்கள வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிவடைந்தால் வெற்றி வாய்ப்பு குறையலாம் என அவதானிகள் கூறுகின்றனர்.திருமலை மாவட்டத்தில் இன ரீதியாக இனம் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்துப் பழகிய மக்கள் இத்தேர்தலிலும் மாற்றமடையப் போவதில்லை.
தற்போதைய நிலையில், திருமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கூட்டமைப்புக்கும் இடையில்தான் இத்தேர்தல் பலப்பரீட்சையாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆனால், இம்முறை தமிழரசுக் கட்சிக்கும் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) வாக்களிக்குமாறும், தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் வேண்டும். இன்றேல் பயங்கரவிளைவு தோன்றும் என்று புலிகள் கூறுவதன் மூலம் தமிழர் கூட்டமைப்பு செல்வாக்குள்ளதாகிவிட்டது.
திருமலை மாவட்டத்தில் இம்முறை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 307 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருமலை தொகுதியிலிருந்து 86 ஆயிரத்து 277 பேரும், மூதூர் தொகுதியிலிருந்து 74 ஆயிரத்து 867 பேரும், சேருவில தொகுதியிலிருந்து 63 ஆயிரத்து 161 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருமலை மாவட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் மிகப் பலம் பொருந்தியதாகவுள்ளன ஏனைய கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, ருஹுனு ஜனதா பக்ஷய, புதிய இடதுசாரி முன்னணி, சிங்ஹளயே மகாசம்மத பூமிபுத்ர பக்ஷய ஆகிய கட்சிகளும் ஆறு சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தல் களத்தில் களம் இறங்கியிருந்தாலும் தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தாது.
தமிழ் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களைப் பெறுவதற்கும் பலத்த முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகப் பல சவால்கள் காத்திருக்கின்றன. இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து வாக்களிக்க வருவோர்க்கு இடைஞ்சல்கள் இல்லாது வாக்களிக்கும் சந்தர்ப்பமளித்தால் எதிர்பார்த்த முடிவு அமையலாம்.
திருமலை மாவட்ட வாக்காளர் வீதாசாரப்படி தமிழ் மக்கள் இரு ஆசனங்களையும், முஸ்லிம் மக்கள் ஒரு ஆசனத்தையும் சிங்கள மக்கள் ஒரு ஆசனத்தையும் பெற வேண்டும். ஆனால், கடந்த முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு ஆசனத்தையும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட்டு அவை இரு ஆசனங்களையும் பெற்றன. கடந்த பொதுத்தேர்தல்களில் தமிழ் வாக்குகள் திட்டமிட்டு சிதறடிக்கப்பட்டமை, வாக்களிப்பில் தமிழ் மக்கள் அக்கறை காட்டாமை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருக்கும் வாக்காளர்கள் தடுக்கப்பட்டமை ஆகியவை தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 60 வீதமானவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதியிலும் 40 வீதமானவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான ஈச்சிலம்பற்று பிரதேசத்திலுள்ள 21 கிராமங்களிலும், மூதூர் கிழக்கு மேற்குப் பிரதேசங்களிலுள்ள 18 கிராமங்களிலும் குச்சவெளி, தம்பலகாமம், கன்னியா, பன்குளம் போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். கடந்தகால தேர்தல்களில் தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு 60 65 வீதமும் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்களிப்பு 85 90 வீதமும், சிங்கள வாக்காளர்களின் வாக்களிப்பு 65 70 வீதமும் அமைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தை 90 வீதமாகக் கூட்டுவதும் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் வாக்காளர்களை முழுமையாக வாக்களிக்கச் செய்வதிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச வாக்காளர்களைக் கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்வதன் மூலமும் இதனைச் சாத்தியமாக்கலாம். இம்முறை புலிகளின் நேரடிப்பார்வை படுவதால் வேட்பாளர்களிடையே குரோத மனப்பாங்கோ, குத்து வெட்டு மோதல்களோ, ஆடம்பரச் செலவுகளோ ஏற்படாது என செய்திகளிலிருந்து தெரியவருகின்றது.
முறையாக 95 வீதம் வாக்களித்தால் மூன்று தமிழ் பிரதிநிதிகளைக் கூடப் பெறமுடியும் என்று முதன்மை வேட்பாளர் இரõ.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி -வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>