03-15-2004, 07:54 PM
<img src='http://www.virakesari.lk/20040315/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
பதவிக்கு வந்ததும், பஸ், ரயில் கட்டணம் குறைக்கப்படும். குழந்தைகளின் பால் மாக்களின் விலை குறைக்கப்படும். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் பிரசாரம் செய்கிறார்கள். இது சாத்தியமா?
சலீம்நானா: சாத்தியம் என்பதனால் தானே இப்படி வாக்குறுதிகள் தருகிறார்கள். மெத்திப் போயிருக்கும் ஊழல் மோசடிகளை குறைத்தால், எவ்வளவோ குறைப்புகளை செய்யலாம். ரொக்கெட் யுகத்தில் ஏறிச்செல்லும் வாழ்க்கைச்செலவை குறைக்க நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
பண்டா ஐயா: பாண் விலை, மாவிலை குறைப்புபற்றி எதுவும் சொல்லவில்லையே? இது ஏன்?
சலீம்நானா: விவசாயத்துக்கு ஊக்கமளிக்குமுகமாக உரவிலையை சரிபாதிக்கு மேலாக குறைக்கப்போவதாக வாக்குறுதி தந்திருக்கிறோம். நெல்,கிழங்கு மற்றும் மரக்கரி விலைகள் குறையும்போது வாழ்க்கைச் செலவு மேலும் குறையும். இதற்கு மூன்று மாதங்கள் பிடிக்குமா?இதனால்தான்.மாவு, பாண் விலை குறைப்புபற்றி எதுவும் சொல்லவில்லை.உலக சந்தைக்கு நிலைவரங்களுக்கு ஏற்பவேமாவை இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது.
பண்டாஐயா: எரிபொருட்களும் உலக சந்தை நிலைவரப்படிதானே இறக்குமதியாகின்றன. இந்த நிலையில் எப்படி பஸ்,ரயில் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பீர்கள்.
சலீம்நானா: இந்த துறைகளில் நிலவும் ஊழல் மோசடிகளை குறைப்பதன் மூலம் போக்குவரத்து கட்டணங்களைகுறைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கள்தலைவர்களுக்கு உண்டு.
பறுவதம் பாட்டி: எந்த அரசு பதவிக்கு வந்தாலும் வாழ்க்கைச் செலவையும் குறைக்க முடியாது.வேலை இல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இது அனுபவ உண்மை. அது சரி? பதவிக்குவந்ததும் அரசியலமைப்பை மாற்றுவோம். எனவே அதற்கும் ஆணை தாருங்கள் என்று உங்கள் கட்சி வாக்காளர்களை கேட்டு நிற்கிறதே! அரசியலமைப்பை மாற்றமூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா? கிடைப்பது அசாத்தியம்.
சலீம்நானா: இந்த தேர்தலில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு எங்களை பதவியில் ஏற்றுவதன்மூலம் மக்கள் ஆணை தருவார்கள்.எனவே சிம்பிள் மஜோரிட்டி கிடைத்தால்போதும். அரசியலமைப்பை பழைய பாராளுமன்றஆட்சி முறைக்கு மாற்றி விடலாம். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசிலமைவை தயாரித்து அந்த சிம்பிள் மஜோரிட்டி மூலம் இதனை சாதிப்போம்.
பறுவதம் பாட்டி: யாருக்கும் சிம்பிள்மஜோரிட்டி கிடைக்காது. எந்தக்கட்சியை பதவியில் இருத்துவது என்பதை நாமே தீர்மானிப்போம் என ஒருபுறம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஹாஜியார் சூளுரைக்கிறார். மறுபுறம் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வீர வசனம்பேசுகிறர்.தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று மார் தட்டுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றுவதற்கு இவர்கள் யாரும் இணங்கமாட்டார்களே! எனவே தேர்தல் நடப்புகளை பார்க்கும் பொழுதுஇதுவும் சாத்தியப்படாது. இதனை நினைவில் வைத்திருங்கள்.
சலீம்நானா: எங்கள் தலைவி ஹக்கீம் ஹாஜியாரைஆட்சி அமைக்க நாடமாட்டார். அப்படி நாடினாலும் பேரியல் மேடம் விடமாட்டார். ஆறுமுகன் தொண்டமானுக்குத்தான் ""சான்ஸ்'' இருக்கிறது.
பறுவதம்பாட்டி: டி.என்.ஏ?
சலீம்நானா:பிரபாகருணா பிளவு நீடிக்குமானால் கருணாவை கைக்குள் போட்டு, எங்கள் தலைவி, அவர் மூலமாக கிழக்கு மாகாண டி.என்.ஏ.எம்.பிக்களின் ஆதரவை தேடினால் என்ன? இதற்கான சாத்தியமும் இருக்கிறது.
பறுவதம் பாட்டி:பிரித்தாளும் தந்திரத்தில்வெள்ளைக்காரர்தான் கெட்டிக்காரன் என்று பார்த்தால், நம்மவரும் சோடை போகமாட்டார்கள்தான். போங்கள்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>