03-15-2004, 06:44 PM
<b>பிரபாகரன் - கருணா பிரச்சினை: கொழும்பு தமிழர்களை பாதிக்கவில்லை</b>
கே.எம். சந்திரசேகரன்
கொழும்பு, மார்ச் 16: விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஓரிரு வாரங்களில் தீர்ந்துவிடும் என கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக இருந்த கர்ணா தனித்துச் செயல்படப் போவதாக கடந்த 3-ம் தேதி அறிவித்தார். கிழக்குப் பகுதியைச் சேர்ந்த போராளிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார்.
நிதி மோசடியில் ஈடுபட்டதால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கர்ணா நீக்கப்படுவதாக அதன் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பிரபாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை கருணா நிராகரித்துவிட்டார்.
தம்மிடம் 6 ஆயிரம் போராளிகள் உள்ளதாகவும், எந்த நாடு அல்லது எந்த அமைப்பின் உதவியும் இல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தனித்துச் செயல்படத் தேவையான நிதி வசதி இருப்பதாகவும் கர்ணா கூறியுள்ளார்.
உள்ளூர் விலைவாசியில் ஒரு போராளிக்குத் தினமும் குறைந்தது ரூ. 200 செலவிடுவதாகக் கணக்கிட்டாலும் 6 ஆயிரம் பேருக்கு ரூ. 12 லட்சம் ஆகும். போக்குவரத்து, ஆயுதங்கள் பராமரிப்பு, அலுவலகம் உள்ளிட்ட செலவுகளுக்குத் தினம் ரூ. 3 லட்சம் தேவைப்படும். எனவே, மாதத்துக்கு ரூ. 4.5 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என இலங்கை பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகின்றனர்.
இந்தப் பணம் எங்கிருந்து வரும் என்பது தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கப் பணத்தில் செய்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியைக் கொண்டு கருணா செலவு செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
பிரபாகரனுடன் கருணாவுக்கு ஏற்பட்டுள்ள மோதலை கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் பெரிதாகக் கருதுவதாகத் தெரியவில்லை.
இது தாற்காலிகப் பின்னடைவுதான். ஓரிரு வாரங்களில் இப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தீர்வு ஏதும் ஏற்படாமல் போய் பிரபாகரன் -கருணா இடையே ஆயுதச் சண்டை ஏற்படுமானால், தங்கள் நிலை மோசமாகிவிடும் என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, விடுதலைப் புலிகள் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள அச்சமே காரணம் என்று கருதப்படுகிறது.
இப்போது கருணா பிரச்சினை வெளியில் தெரிந்ததும் சில பகுதிகளில் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று சொத்துகளை விட்டுவிட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு ஜனதா விமுக்தி பெரமுன என்ற சிங்களக் கட்சியினர் கூறியதாகத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தலில், அந்த அமைப்பினர் ஆதரவு பெற்ற அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் இலங்கை சுதந்திரக் கட்சி கூட்டணி வென்றால் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் உள்ளது.
இச் சூழ்நிலையில் பிரபாகரன் மீதான அரசின் அச்சம் நீங்கிவிட்டால் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் வேகமும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கருணாவைவிட பிரபாகரனையே கொழும்புவாழ் தமிழர்கள் அதிகம் நம்புகின்றனர். 20 ஆண்டு காலம் போராடியதன் பலன் இத் தேர்தலில் கிடைக்க உள்ள நிலையில், கருணா மூலமாக இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கக் கூடாது என்ற வருத்தம் மட்டும் அவர்களிடம் உள்ளது.
ரத்தம் சிந்தாமல் கிழக்குப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வதாக புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்பி. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பகுதியில் இருந்து போராளிகள் படிப்படியாக புலிகள் அமைப்புக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கொழும்பு தமிழர்கள் விரும்புகின்றனர்.
நன்றி: தினமணி