03-15-2004, 03:32 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/Kari123_23718_435.jpg' border='0' alt='user posted image'>
கரிகாலன் யாழ் பல்கலைக்கழக மாணவர் மத்தியில்...!
<b>யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரிகாலன் விளக்கம் </b>
<b>ஒரு மூன்றாவது சக்தியின்றி, கருணா இவ்வாறு துரோகமிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கரிகாலன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மக்கள் இப்போது கருணாவின் துரோகத்தனத்தை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ள கரிகாலன், தமிழீழ மக்களின் விடுதலையையும் சுதந்திரத்தையும் விரும்பாத ஒரு மூன்றாவது சக்தி, கருணாவை மனச்சலவை செய்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, கரிகாலன், கௌசல்யன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
எமது தேசியத் தலைவர், கருணாவின் மேல் அளவு கடந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார். நாங்கள் கருணா குறித்து எந்தவொரு விடயத்தைச் சொன்னாலும், தலைவர் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை. அவ்வளவு தூரம் தலைவர் கருணா மேல் நம்பிக்கை வைத்திருந்தார்.
நாம் கருணாவுடன், பலதடவை அவரது செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த முயன்றோம். அவர் செய்யவிருப்பது தவறு என்றும், அது தமிழீழ மண்ணையும் மக்களையும் முற்றாகப் பாதித்து விடும் என்றும் தெளிவாக விளக்கம் கொடுத்தும் கருணா அதற்கு செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை. இறுதிவரை நாம் கருணாவை இம்முடிவை எடுக்கவேண்டாமெனத் தடுக்க கடும்முயற்சிகளை எடுத்தோம், ஆனாலும், கருணா திடீரென தனது முடிவை அறிவித்து விட்டார்.
வேறு எந்தவொரு தளபதிக்கோ அதிகாரிக்கோ கொடுக்கப்படாத அத்தனை பதவிகளும் உரிமைகளும் கருணாவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் தலைவர் கருணாவை நம்பியிருந்தார். வேறு எந்தவொரு பிரதேசத் தளபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் அத்தனை பகுதிகளும் கருணாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்பட்டதற்கும், தேசியத் தலைவர், கருணாமேல் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையே காரணம்.
கிழக்கின் மக்களும் போராளிகளும் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளமை மிகவும் உண்மையானது. ஆனால், இந்த உண்மையை கருணா தனது சுயநலம் கருதி, பிரதேசவாதமாக மாற்ற முற்பட்டுள்ளமை மிகப்பெரிய துரோகச் செயலே, என்று கரிகாலன் தெளிவாக விளக்கமளித்தார்.
கௌசல்யன் உரையாற்றுகையில், கருணா தற்போது உறுதியற்ற நிலையிலிருப்பதால், தங்களை மிகுந்த அவதானத்துடன் கிழக்கு விடயங்களைக் கையாளும் படியும், கிழக்கு வாழ் மக்களுக்கோ போராளிகளுக்கே எதுவித இழப்புமின்றி, நிதானத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்டும்படியும் தேசியத் தலைவர் தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக எடுத்துக் கூறினார்.
யாழ். அரசியற் பொறுப்பாளர் எஸ்.இளம்பரிதி, புலிகளின் குரல் வானொலிப் பொறுப்பாளர் எஸ்.தமிழன்பன் ஆகியோரும் இக்கூட்டத்திற் கலந்து கொண்டார்கள். யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.வீ.பகீரதன் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.</b>நன்றி: Tamilnet and puthinam...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>