03-15-2004, 02:37 PM
கிழக்கு மாகாணம் தமிழ் மக்களின் தாயகமல்ல என்கிறார் கருணா
கிழக்கு மாகாணம் தமிழர்களுக்குமட்டுமான பாரம்பரிய தாயகப் பிரதேசமல்ல. அது பல்லின மக்களுக்குமான தாயகப் பிரதேசமென, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இவர் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கும் தினமும் பேட்டியளித்து வருகின்றார்.
ஒவ்வொரு பேட்டியிலும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறிவரும் இவர், தற்போது கிழக்கு மாகாணம் தமிழர்களது தாயகப் பிரதேசமல்ல என ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் கருணா மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இனிமேல் விடுதலைப் புலிகளைக் கூற முடியாது. கிழக்கிலுள்ள புலிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டியிருப்பதால் வடக்கிலுள்ளவர்களுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவது சாத்தியமற்றது.
தற்போதைய போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அவர்களுடன் புதிய போர் நிறுத்த உடன்பாடொன்றை செய்துகொள்வேன்.
வன்னியிலுள்ளவர்களே தொடர்ச்சியாக போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பம் கேட்டல், ஆட்கடத்தல், பலவந்த ஆட்சேர்ப்புக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை. போர் நிறுத்த மீறல்களுக்கெல்லாம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானே காரணம்.
சமாதானம் மூலம் தீர்வொன்று கிட்டுவதை நான் விரும்பவில்லை எனவும் நானொரு யுத்தப் பிரியன் என்றும் சமாதான முயற்சிகளைக் கைவிட்டு போரை ஆரம்பிக்குமாறு நான் தலைமைப்பீடத்தை வற்புறுத்தி வந்ததாக தென்பகுதி பத்திரிகைகள் கூறுவதில் உண்மையில்லை. போரை வெறுத்தே புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தேன்.
புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபை யோசனை, ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தால், பாரபட்சம் காரணமாக உள் பிரிவினைகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>