03-15-2004, 02:35 PM
வெளியேற்றப்பட முன்பே சுதந்திர முன்னணியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கருணா முயற்சி
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கடந்த 3 ஆம் திகதி பிரிந்து செல்வதற்கு முன்னரே கடந்த சில மாதங்களாக கருணா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் பத்திரிகை மேலும் தெரிவிக்கையில், கடந்த 3 ஆம் திகதி புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதாக கருணா அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ரட்ண கமகேயுடன் தொடர்பு கொண்ட கருணா அந்தக் கட்சியின் தலைமைப்பீடத்துடனும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமும் தனக்கு தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளார்.
இதை அடுத்து, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் கருணாவிற்கும் இடையே ரட்ண கமகே, இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார்.
கருணாவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையே ரட்ண கமகே தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கருணாவைச் சார்ந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருணாவின் வேண்டுகோளின் பேரில் ரட்ண கமகே பெப்ரவரி 19 ஆம் திகதி கருணாவுடன் 2 மணி நேரத்திற்கு மேல் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது பற்றி ரட்ணகமகே, ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீரவுக்கு தெரிவித்தபோதிலும், கருணாவின் இந்த விருப்பத்தை மங்கள சமரவீர ஜனாதிபதிக்கோ அல்லது தகவல் தொடர்புத் துறை அமைச்சர் லடீ;மன் கதிர்காமருக்கோ தெரிவிக்க வில்லை.
இது பற்றி கருணா ரட்ணகமகேயிடம் தொடர்பு கொண்டு வினவியதுடன் எப்படியாவது ஜனாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தவும் முயற்சித்துள்ளார்.
ஆனாலும், கருணாவுடன் புரிந்துணர்வு உடன்பாடொன்றை கைச்சாத்திடுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் இது விடுதலைப் புலிகளுக்கு தவறான தகவலைக் கொடுத்து விடுமெனக் கூ றி ஜனாதிபதியோ, லடீ;மன் கதிர்காமரோ கருணாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அவருடன் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து விட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>