03-15-2004, 01:51 PM
கருணாவின் ஆதரவுக் குழுவினருக்குள் குழப்பம்?
கருணா என்றழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரனை ஆதரித்து வந்த இளைஞர்கள் தற்போது அவருக்கு எதிராக செயற்பட ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தமிழ்நெற் இணையத்தளம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுவரை கருணாவிற்கு சார்பாக பிரதேசவாதக் கருத்துக்களையும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கெதிரான கருத்துக்களையும் தாங்கி வந்த, கிழக்கு இணையத்தளம் ஒன்று, தற்போது வாசகர்களிடம் அது குறித்து மன்னிப்புக் கோரியுள்ளதோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கெதிராக இணையத்தில் பிரசுரமான கருத்துக்களுக்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளது.
இந்த பாடுமீன் இணையத்தளம், தற்போது கருணாவை தேசத்துரோகி என்றும் வர்ணித்து தகவல் பிரசுரித்துள்ளது.
'தமிழீழக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, எமது தேச விடுதலைக்காக ஆகுதியான அத்தனை மாவீரர்களின் கனவுகளையும் நினைவில் கொண்டு, ஆயிரமாயிரம் மன்னிப்புக்களை எமது வாசகர்களிடம் நாம் கோரி நிற்கிறோம்" என்று குறிப்பிடும் ஆசிரியர், தனது கண்ணீர்; கைத்தட்டில் வழிந்தோட, மிகுந்த வேதனையுடன் இந்த மன்னிப்புக் கடிதத்தை தான் வரைவதாகவும், கருணா என்ற தேசத்துரோகியின் கடுமையான அழுத்தத்தினால் மட்டுமே தான் அத்தகைய தவறான செய்திகளைப் பிரசுரிக்க நேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேசத்துரோகியை இனங்கண்டு கொண்டமை நன்றே என்று குறிப்பிட்டுள்ள ஆசிரியர், இந்நெருக்கடி நிலையை, தேசியத் தலைவர் விரைவில் தீர்த்து வைப்பார் என்று தான் முழுமையாக நம்புவதாகவும், தமிழீழ மண்ணும் மக்களும் ஒருபோதும் தேசத்துரோகி கருணாவை மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>