03-15-2004, 11:24 AM
பாடுமீன் பற்றாளர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.
தமிழீழ கனவோடு கல்லறைகளில் உறங்குகின்ற எம்முடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி கடந்த சில நாட்களில் இந்தப்பாடுமீன் பக்கங்கள் தாங்கிவந்த எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கெதிராகவும் வெளிவந்த செய்திகளிற்காக பாடுமீன் வாசகர்களிடம் பல்லாயிரம் தடவைகள் மன்னிப்புக் கேட்கின்றேன்.
தமிழ்த்தாயின் கழுத்தில் சுருக்கிட்டு தேசியத்தின் குரல்வளையை எப்படி இந்தக் கருணா என்ற துரோகி நெரிக்க முற்படுகிறானோ அதைவிடக் கொடுமையின்; நரகத்திற்குள் இருந்து இந்தப்பாடுமீன் எழுத்தாளர் எழுதவேண்;டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பதை இருகண்ணிலும் இருந்து வருகின்ற கண்ணீர்த்துளிகள் எனது விசைப்பலகையைத் துளைத்துவிடக்கூடாது. இந்த விடயத்தை இந்தப்பாடுமீன் வாசிகளுக்கு அனுப்பும் வரைக்கும் என்னுயிர் பிரிந்துவிடக்கூடாது என்ற அச்சத்துடன் இருந்து என்கைவிரல்கள் அசைகின்றன.
என் அன்பான வாசகர்களே இப்பொழுது கருணா என்கின்ற அந்த அரக்கன் எமது தேசியத்தலைவரின் மூச்சுக்குப் பயந்து என்னருகில் இல்லாமல் வனாந்தரத்திற்குள் பதுங்கி இருக்கச்சென்றுவிட்டான். அதனால்த்தான் இக்கருத்தை உங்கள் கண்ணில் பார்க்கக்கூடிய அளவுக்கு என்னால் அனுப்ப முடிந்தது.
தற்போது தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருப்பது பூதாகரமான “பிரதேசவாதக் கொள்கை” மட்டுமே. இதனுள் பொதிந்திருக்கும் உண்மைத் தன்மையோ வேறு. இது தனிப்பட்ட மனிதன் கருணாவினுடைய பிரச்சனை. இங்கு தனிப்பட்ட மனிதன் கருணா என்று சொல்வது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து எமது தலைமையகம் கருணாவை நீக்கியுள்ளார் என்றமையாலாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பாக சில செயல்களை கருணா செய்துள்ளார். கருணா தனித்தே இந்த முடிவையும் எடுத்துள்ளார். அவற்றை மூடிமறைக்க தற்போதுள்ள சமாதானச் சூழ்நிலையைப் தனக்கு சாதகமாகப்பயன்படுத்தி பிரதேசவாதக் கொள்கையை முன் வைத்து தனித்துச் செயற்பட முன்வந்துள்ளார். இதுவே உண்மை நிலையாகும்.
எனக்குத் தெரிந்தவகையில் கருணா தனது பிரச்சனைகளை மூடிமறைக்க அப்பாவியான மட்டு அம்பாறை மக்களையும் போராளிகளையும் பயன்படுத்தி வருகின்றார். சமீபகாலங்களில் புதிதாக பயிற்ச்சி பெற்ற போராளிகளுக்கு சாடைமாடையாக பிரதேச வாதக்கொள்கைகளை புகுத்தி வந்துள்ளார். அக்கருத்தை அவர்களுக்கு புகட்ட போராளிகளினது தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் சொல்லி தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றார். புதிய போராளிகள் சிலர் உருக்கமான கருத்துக்களால் எடுபட்டுவிட்டார்கள்.
பின்னர் துரோகி கருணா ஏற்படுத்திய போராளிகள் சந்திப்பில் வடபகுதியிலுள்ள பொறுப்பாளர்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வந்துள்ளார். கருணாவினுடைய இச்செயலானது தனித்தே எடுக்கப்பட்டது. தனக்கு கீழிருந்த தளபதிகள், போராளிகளது கருத்துக்களையோ அல்லது விருப்பங்களையோ கேட்கவில்லை என்பதும் உண்மை.
போராளிகளாகிய நாங்கள் தலைவர் அண்ணாவினுடைய வழிகாட்டலுக்கு அமையவே செயற்பட விரும்புகின்றோம். நாங்கள் தமிழீழத்திற்காக உயிர் துறக்கவும் தயாராகவிருக்கின்றோம்.
எமக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார். இதை உலகமே அறிந்த விடயம். தலைவர் அண்ணாவினுடைய இக்காலத்திலேயே தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது அவா (இங்கு அண்ணா எனக்குறிப்பிடுவது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையே).
ஒருவன் தனது சொந்த ஊரில் பற்றுக்கொண்டவன்தான் தனது நாட்டின் மீதும் பற்றுக்கொள்ளுவான். 17 ஆயிரம் மாவீரர்களது கனவை நனவாக்க தலைவர் அண்ணாவினுடைய வழிகாட்டலில் என்றும் செயற்படுவோம். அந்த வகையில் தமிழீழத்திற்காக எனது உயிரைத்துறப்பதில் எந்தவித கவலையும் அடையவில்லை.
ஆனால் இந்த பிரச்சனையைத் எமது தலைமை இலகுவாக தீர்க்கும் என்ற நம்பிக்கையுண்டு. மிக நெருக்கடியான கால கட்டங்களில்கூட ஏற்பட்ட சிக்கல்களை இலகுவாகக் கையாண்ட தலைமை இதையும் கையாளுமென நினைக்கின்றேன். இதை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும் இதனு}டாகத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
இதுதான் எனது கடைசி எழுத்தாக இருக்குமோ தெரியாது. எனது சாவு தேசத்தின் விடுதலைக்காகவே இறந்தனான் என்று இந்த மண் ஏற்றுக்கொள்ளுமா என்றுகூடத்தெரியவில்லை ???. ஏனெனில் கருணாவிற்கு பிடித்திருக்கும் பைத்தியத்திற்கு நானும் பலியாகிவிடுவேனோ என்று தெரியவில்லை)
தமிழீழத்தில் வடுவொன்றை ஏற்படுத்திய நம்பிக்கைத்துரோகி கருணாவை இந்த மண் ஒருபோதும் மன்னியாது என்று நினைக்கின்றேன்.
நன்றி
போராளி
இதுவரை காலமும் பாடுமீனுக்காக செய்திகளை அனுப்பியவன்.

\" \"